JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
வாழ்நாள் சான்று வழங்காத ஓய்வூதியர்கள் சான்றினை வரும் 30ம் தேதிக்குள் வழங்க வேண்டும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
இது குறித்து தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்களுக்கான நேர்காணல் நடைபெற்று வரும் நிலையில் இதுநாள் வரை 70% மேலான ஓய்வூதிய நேர்காணல் முடிவுற்றுள்ளது. 30ம் தேதிக்குள் ஓய்வூதியர்கள் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களின் வாழ்நாள் சான்றினை வழங்க வேண்டியுள்ளதால், இதுவரை வாழ்நாள் சான்று வழங்காத ஓய்வூதியர்கள் உடனடியாக தங்களது வாழ்நாள் சான்றினை 30ம் தேதிக்குள் கீழ்கண்ட ஏதேனும் ஒரு வழிமுறையில் வழங்க வேண்டும்.
ஓய்வூதியம் வழங்கும் அலுவலகத்துக்கு நேரில் வருவதன் மூலம், இந்திய அஞ்சல் துறை வங்கி சேவை மூலம், இ-சேவை மையம் மற்றும் பொது சேவை மையங்கள் வழியாக ஜீவன் பிரமான் முகம் செயலியினை பயன்படுத்தி ஆண்டு வாழ்நாள் சான்றினை பதிவு செய்யலாம். ஓய்வூதியர்கள் சங்கங்கள் நடத்தும் முகாம்களில் கலந்து கொண்டு ஜீவன் பிரமான் மூலம் மின்னணு வாழ்நாள் சான்றிதழினை பதிவு செய்யலாம். இவ்வாறுஅறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment