JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
ஜனவரி 2ம் தேதி பொங்கல் பண்டிகைக்கு தமிழகத்தில் ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்புடன் ரூ.1,000 வழங்கி முதல்வர் மு.க.ஸ்டாலின் துவக்கி வைக்கிறார்.இது குறித்த அறிவிப்பு வெளியான நிலையில், அரிசி அட்டைத்தாரர்களுக்கு மட்டுமே ரூ.1000 வழங்கப்படும் என்றும் சர்க்கரை அட்டைத்தாரர்களுக்கு வழங்கப்பட மாட்டாது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழர்களின் முக்கிய பண்டிகையான பொங்கல் பண்டிகை ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. முதலில் இலவச வேட்டி, சேலை மட்டும் வழங்கப்பட்டு வந்த நிலையில், அதன்பிறகு பொங்கல் பரிசுத் தொகுப்பு, ரொக்கப் பணம் என படிப்படியாக லிஸ்ட் பெரிதாகிக் கொண்டே வந்துள்ளது.
கடந்த ஆண்டு மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசு 21 பொருட்கள் அடங்கிய பரிசுத் தொகுப்பு மட்டும் வழங்கியது. அதிலும் பரிசுத் தொகுப்பில் இடம்பெற்ற பொருட்கள் பலவும் தரமற்றதாக இருந்ததாக குற்றச்சாட்டு எழுந்தது. உடனே சம்பந்தப்பட்ட ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அதனுடன் செய்து கொண்ட ஒப்பந்தம் ரத்து செய்யப்படும் என்றும் அரசு தரப்பில் உறுதி அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, 2023 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, தகுதி வாய்ந்த அரிசி அட்டைதாரர்களுக்கு, 1,000 ரூபாய் ரொக்கப் பணம் வழங்க தமிழ்நாடு அரசு முடிவு செய்து உள்ளதாக, கடந்த சில வாரங்களாகவே செய்தி பரவி வருகிறது. பொங்கல் பரிசுத் தொகுப்புக்கு பதிலாக, பரிசுத் தொகை வழங்க முடிவு செய்யப்பட்டு உள்ளதாகக் கூறப்படுகிறது.
இது தொடர்பாக அண்மையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆலோசனைக் கூட்டமும் நடைபெற்றது. ஆனால் இதுவரை பொங்கல் பரிசுத் தொகுப்பு குறித்து தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிடவில்லை. இதற்கான அறிவிப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிடுவார் என உயர் அதிகாரிகள் தகவல் தெரிவித்து இருந்தனர்.
அதன்படி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.1,000 ரொக்கத்துடன் பரிசு தொகுப்பை முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பை வெளியிட்டு உள்ளார். 2023-ம் ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி குடும்ப அட்டை தாரர்களுக்கு ரூ.1,000 வழங்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.
இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்கு ரூ.1,000 வழங்கப்படும். ஜனவரி 2-ம் தேதி முதல் ரூ.1,000 ரொக்கத்துடன் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை வழங்கப்படும். 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவர். ரூ.2,356.67 கோடி செலவு ஏற்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், 2023-ஆம் ஆண்டு தமிழர் திருநாளாம் தைப் பொங்கல் பண்டிகையைச் சிறப்பாகக் கொண்டாடும் வகையில், முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தலைமைச் செயலகத்தில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி, வருகிற 2023-ஆம் ஆண்டு தைப் பொங்கலை முன்னிட்டு அனைத்து அரிசி குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் வசிக்கும் குடும்பத்தினருக்குத் தலா ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ரூ.1000/- வழங்கிட முடிவு செய்யப்பட்டது.
இதனால் 2.19 கோடி குடும்ப அட்டைதாரர்கள் பயன்பெறுவார்கள். இதன்மூலம் அரசுக்குச் சுமார் ரூ.2,356.67 கோடி செலவினம் ஏற்படும். முதல்-அமைச்சர் மு.க. ஸ்டாலின் பொங்கல் பரிசு வழங்கும் நிகழ்வினை 2.1.2023 அன்று சென்னையிலும், அன்றைய தினமே மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட அமைச்சர்களும் தொடங்கி வைப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment