Thursday, December 22, 2022

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 22.12.2022

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


 திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: இனியவை கூறல்

குறள் : 94
துன்புறூஉம் துவ்வாமை இல்லாகும் யார்மாட்டும்
இன்புறூஉம் இன்சொ லவர்க்கு

பொருள்:
யாரிடத்திலும் இன்புறத்தக்க இன்சொல் வழங்குவோர்க்குத் துன்பத்தை மிகுதிபடுத்தும் வறுமை என்பது இல்லையாகும்.

பழமொழி :

The pen is mightier than the sword.

வாளினும் வலியது எழுதுகோல்.

இரண்டொழுக்க பண்புகள் :

1."யாருக்கும் தீங்கு செய்யாது, எல்லோரின் நலன் குறித்தும் சிந்தித்தலே உண்மையான மனித தன்மையின் வெளிப்பாடு.

 2. நான் எப்போதும் ஒரு நல்ல மனிதனாக இருக்க முயல்வேன் "

பொன்மொழி :

உங்கள் பிரச்சனைகளால் உந்தப்படுபவராக இருக்காதீர்கள், உங்கள் கனவுகளால் வழிநடத்தப்படுபவராக இருங்கள். --ரால்ப் வால்டோ எமர்சன்

பொது அறிவு :

1. விண்வெளி பயண விதிகள் முதல் முதல் யாரால் வரையறுக்கப்பட்டது? 

சர் ஐசக் நியூட்டன். 

2.ஒரு முகூர்த்தம் என்ற அளவு எத்தனை மணி நேரம்? 

ஒன்றரை மணி நேரம்.

English words & meanings :

find - to discover something. verb. கண்டுபிடிக்க. வினைச் சொல். fined- charged a penalty. verb. அபராதம் விதித்தல். வினைச் சொல்

ஆரோக்ய வாழ்வு :

கொய்யா இலைகளை வேக வைத்த தண்ணீரைக் குடிப்பதன் மூலம், உங்கள் சருமத்திற்கு வைட்டமின் சி மற்றும் சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்றங்கள் அதிக அளவில் கிடைக்கும். இதனால் சருமம் பொலிவடையும்.

NMMS Q

Operator : Machine :: __________ : Driver 

a) Captain b) Aeroplane c)Ship d) Bus 

விடை: Bus

டிசம்பர் 22


தேசிய கணித தினம் 


தேசிய கணித தினம் (National Mathematics Day) இந்தியாவில், டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேசிய கணித தினம் 26 பிப்ரவரி 2012 அன்று சென்னைப் பல்கலைக்கழக நூற்றாண்டு விழாக் கலையரங்கத்தில் நடைபெற்ற சீனிவாச ராமானுசனின் 125 வது பிறந்த நாள் கொண்டாட்டத்தின் தொடக்க விழாவில் இந்தியப் பிரதம மந்திரி டாக்டர் மன்மோகன் சிங் அவர்களால் பிரகடனம் செய்யப்பட்டது.

இந்தியக் கணித மேதை ஸ்ரீனிவாச ராமானுஜன் 1887 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 22 ஆம் தேதி பிறந்தார். 1920 ஏப்ரல் 26 இல் இறந்தார். இந்திய தேசிய கணிதவியலாளரான கணித மேதை சீனிவாச இராமானுசன் அவர்கள் கணிதத்துறைக்குப் பங்காற்றியமைக்காக ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 22 ஆம் நாள் தேசிய கணித தினமாகக் கொண்டாடப்படுகிறது. 2012 ஆம் ஆண்டு தேசிய கணித ஆண்டாக அறிவிக்கப்பட்டுள்ளது.


சீனிவாச இராமானுஜன் அவர்களின் பிறந்தநாள்



சீனிவாச இராமானுஜன் (Srinivasa Ramanujan, டிசம்பர் 22, 1887 – ஏப்ரல் 26, 1920) இந்தியாவில் தமிழ்நாட்டில் ஈரோடு மாவட்டத்தில் கோட்டை பகுதியில் பிறந்த கணித அறிஞர். இராமானுசர் 33 அகவை முடியும் முன்னரே இறந்துவிட்டார். இவர் சிறு வயதிலேயே யாருடைய உதவியும் இல்லாமல் மிக மிக வியப்பூட்டும் விதத்தில் கணிதத்தின் மிக அடிப்படையான ஆழ் உண்மைகளைக் கண்டுணர்ந்தார். 1914-ஆம் ஆண்டுக்கும், 1918-ஆம் ஆண்டுக்கும் இடைப்பட்ட காலத்தில் மூவாயிரத்திற்கும் அதிகமான புதுக் கணிதத் தேற்றங்களைக் கண்டுபிடித்தார். எண்களின் பண்புகளைப் பற்றிய எண் கோட்பாடுகளிலும், செறிவெண் கோட்பாடுகளிலும் இவர் கண்டுபிடித்துக் கூறிய ஆழ் உண்மைகள் இன்று அடிப்படை இயற்பியற் துறை முதல் மின்தொடர்புப் பொறியியல் துறை வரை பல துறைகளில் உயர்மட்டங்களில் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. இராமானுசன் அவர்கள் பெயரால் 1997 இல் The Ramanujan Journal என்னும் கணித ஆய்விதழ் ஒன்று தொடங்கப்பட்டுள்ளது.

நீதிக்கதை

முனிவர் காட்டிய வழி

முன்னொரு காலத்தில் அந்தபுரத்தை ஆண்டு வந்த அரசனுக்கு ஒரு அழகான ஆண் குழந்தை பிறந்தது. அக்குழந்தைக்கு விக்ரம் எனப் பெயரிட்டு வளர்த்து வந்தான். 

விக்ரம் சிறு வயதிலிருந்தே யாரையும் மதிக்காமல் ஆணவத்துடன் வளர்ந்து வந்தான். அவனுக்கு எட்டு வயது ஆனதும் கல்வி மற்றும் அனைத்து கலைகளையும் கற்பதற்கு குரு குலத்திற்கு அனுப்பி வைத்தார் மன்னர். 

அங்கும் அவன் யார் பேச்சையும் கேட்காமல் குருவையும் மதிக்காமல் இருந்தான். அந்த குருவிடம் மிருகங்களை வசியம் செய்து, அவர் நினைத்தபடி ஆட்டுவிக்கும் சக்தி இருந்தது. அதை உபயோகித்து அவனுக்கு புத்தி புகட்டுவதற்கு ஒரு வழி கண்டுபிடித்தார். 

ஒரு நாள் அனைவரும் ஆற்றில் நீராடிக்கொண்டிருந்த போது இளவரசன் மட்டும் கரையில் அமர்ந்து ஆற்றுக்குள் கல் வீசி விளையாடிக் கொண்டிருந்தான். தூரத்தில் தண்ணீர் அருந்திக் கொண்டிருந்த சிறுத்தையை, தன் வசிய சக்தியால் ஈர்த்து இளவரசனை துரத்தும்படி செய்தார் குரு. 

சிறுத்தை இளவரசனை துரத்த ஆரம்பித்ததும், அய்யோ! என்று அலறியபடி அடர்ந்த காட்டிற்குள் ஓடினான். 

இளவரசன் வெகு தூரம் ஓடிக் களைத்து, ஒரு பெரிய மரத்தில் ஏறிக்கொண்டான். துரத்தி வந்த சிறுத்தை அவனைக் காணாமல் சென்றுவிட்டது. பசி வயிற்றைக் கிள்ள, களைப்பில் தூங்கி போனான். தூங்கி எழுந்ததும் சூரியன் உச்சியிலிருந்தான். பசி, களைப்பு, பயம், கவலை இவற்றால் கால், கை நடுக்கமுற என்ன செய்வதென்று தெரியவில்லை. 

சிறு வயதிலிருந்தே யாரையும் மதிக்காமல் தவறாக நடந்துகொண்டதை நினைத்து மிகவும் வருந்தினான். தன்னுடன் பயிலும் அனைத்து மாணவர்களும் குருவிடம் எவ்வளவு பயபக்தியுடன் நடந்து கொள்கிறார்கள். நான் மட்டும் ஏன் இப்படி இருக்கிறேன். அதனால் தான் இத்துன்பம் நேர்ந்தது என்று நினைத்து வருந்தினான். 

உடனே குருவை மனதில் நினைத்து குருகுலத்தை சென்று அடைய வழி காட்டும்படி மானசீகமாக குருவிடம் வேண்டிக்கொண்டான். அடுத்த நொடி யானையின் பிளிறல் சப்தம் கேட்டது. யானையைப் பார்த்த இளவரசன் யானைகள் தண்ணீர் இருக்கும் இடத்தை கண்டுபிடிக்கும் திறன் பெற்றவை என்று கேள்விப்பட்டிருக்கிறான். யானை தண்ணீர்ருக்காக செல்வதை அறிந்து, அதன் பின்னால் இளவரசன் நடக்க ஆரம்பித்தான். 

வெகு நேரத்திற்கு பின் யானை ஒரு ஆற்றங்கரையை அடைந்தது. அதன்பின், மகிழ்ச்சியடைந்த இளவரசன் தன் குருவிடம் சென்று அவர் காலடியில் விழுந்து தன்னை மன்னிக்கும்படி வேண்டிக்கொண்டான். 

நாடாள வேண்டிய மன்னன் தவறான வழியில் செல்வதை தடுக்க, இந்த நாடகம் நடத்த வேண்டியிருந்ததை நினைத்த குரு, அவனுக்கு கற்பிக்க வேண்டிய அனைத்து கலைகளையும் கற்றுக்கொடுத்து ஒரு நல்ல நாளில் மன்னரிடம் அனுப்பி வைத்தார். 

நீதி :
வயதில் மூத்தோரை மதித்து நடத்தல் வேண்டும்.

இன்றைய செய்திகள்

22.12.22

* "தமிழக நெடுஞ்சாலைத் துறையில் அடிப்படை படிப்பு தொடர்பாக பிறப்பிக்கப்பட்ட அரசாணை 2017-ம் ஆண்டுக்குப் பிறகே செல்லுபடியாகும்" என்று உயர் நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

* கருவூலம் மற்றும் கணக்குத்துறை அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கும் வகையில் இந்திய பட்டயக் கணக்காளர்கள் நிறுவனத்துடன் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்தானது.

* “நம்ம ஸ்கூல்” திட்டம்: முதல் நாளில் ரூ.50 கோடி நன்கொடை.

* கட்டிடம் கட்ட தோண்டப்படும் மண்ணை எடுத்துச்செல்ல அனுமதி பெற வேண்டும்: புவியியல் மற்றும் சுரங்கத் துறை அறிவிப்பு.

* கரோனா தொற்று குறித்து இந்தியர்கள் அச்சம் கொள்ளத் தேவையில்லை என்று சீரம் தடுப்பூசி தயாரிப்பு நிறுவனத்தின் சிஇஓ ஆதர் பூனாவாலா தெரிவித்துள்ளார்.

* கரோனா இன்னும் முடிவுக்கு வரவில்லை; கண்காணிப்பை தீவிரப்படுத்துங்கள் - மாநில அரசுகளுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்.

* அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தின் கடலோரப் பகுதிகளில் இன்று நிலநடுக்கம் ஏற்பட்டது. நில நடுக்கத்துக்கு இதுவரை 2 பேர் பலியாகி உள்ளனர். 11 பேர் காயமடைந்துள்ளனர்.

* சீனா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளில் வேகமாக பரவுகிறது கரோனா - இந்தியாவில் மரபணு பரிசோதனை நடத்த மத்திய அரசு உத்தரவு.

* சர்வதேச பெண்கள் டி20 தரவரிசை பட்டியலை ஐ.சி.சி. வெளியிட்டுள்ளது. இதில் பேட்டிங் தரவரிசையில் இந்திய அணியின் நட்சத்திர வீராங்கனை ஸ்மிருதி மந்தனா  3-வது இடத்தில் நீடிக்கிறார்.

* சென்னை பல்கலைக்கழக தடகளம்: 400 மீட்டர் தடை ஓட்டத்தில் அஸ்வின் கிருஷ்ணன் புதிய சாதனை.

* கூடைப்பந்து வீரர்களுக்கு பயிற்சி அளிக்க விண்ணப்பிக்கலாம் -மாவட்ட விளையாட்டு அலுவலர் தகவல்.

Today's Headlines

* The Madurai branch of the High Court has ordered that "the ordinance issued regarding the basic course in the Tamil Highway Department will be valid only after the year 2017".

*  An agreement was signed in the presence of Finance Minister Palanivel Thiagarajan with the Institute of Chartered Accountants of India for training Treasury and Accounts Officers.

*  “Namma School” project: Rs.50 crore donation on the first day.

 * Permission to take away excavated soil for building construction: Notification of the Department of Geology and Mines.

*  Aadhar Poonawala, CEO of Serum Vaccine Manufacturing Company, has said that Indians need not be afraid of corona infection.

 * Corona is not over yet;  Intensify surveillance – Center urges state governments.

 * An earthquake occurred today in the coastal areas of the state of California, USA.  So far 2 people have died due to the earthquake.  11 people were injured.

*  Corona is spreading rapidly in countries including China, and the USA - Central Government orders to conduct genetic testing in India.

 * ICC Women's International T20 Ranking List published  The star player of the Indian team, Smriti Mandana, remains at the 3rd position in the batting rankings.

 * Chennai University Athletics: Ashwin Krishnan breaks new record in 400m hurdles.

*  Apply for Coaching Basketball Players - District Sports Officer Information.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


Featured News

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL
Back To Top