JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் அரசின் பாதுகாப்புத் துறையின் கீழ் செயல்படுகிறது. இந்த நிறுவனத்தில் பல்வேறு பிரிவுகளில் உள்ள 526 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.இப்பணிகளுக்கு பட்டதாரிகள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் பணியிடம்
உதவியாளர் 342
ஜீனியர் தனி உதவியாளர் 154
மேல் பிரிவு கிளர்க் 16
ஸ்டெனோகிராஃபர்ஸ் 14
வயது வரம்பு :
இப்பணிகளுக்கு விண்ணப்பிக்க 09.01.2023 படி 28 வயது வரை இருக்க வேண்டும். OBC 31 வயது மற்றும் SC/ST 33 வயது என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
சம்பளம் :
இஸ்ரோவில் இந்த பணிகளுக்கு ரூ.25,000 சம்பளம் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
கல்வித்தகுதி:
உதவியாளர், மேல் பிரிவு கிளர்க் பணிகளுக்கு ஏதேனும் பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு தேர்ச்சி மற்றும் கணினி திறன்.
ஜீனியர் தனி உதவியாளர் மற்றும் ஸ்டெனோகிராஃபர்ஸ் பணிகளுக்கு 60% மதிப்பெண்களுடன் பட்டப்படிப்பு அல்லது வணிகம்/ செயலக நடைமுறை ஆகிய பாடத்தில் 60% மதிப்பெண்களுடன் டிப்ளமோ மற்றும் 1 வருட ஸ்டெனோகிராஃபர்ஸ் அனுபவம்.
தேர்வு செய்யப்படும் முறை:
இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வு மற்றும் திறன் தேர்வு நடைபெறும். இட ஓதுக்கீடு அடிப்படையில் எழுத்துத் தேர்வில் எடுத்த மதிப்பெண்கள் விதம் தேர்வர்கள் தேர்வு செய்யப்படுவர். அதனைத் தொடர்ந்து, தேர்வு செய்யப்பட்டவர்களுக்குத் திறன் தேர்வு நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமும் தகுதியும் உடையவர்கள் இஸ்ரோவின் அதிகாரப்பூர்வ இணையத்தளத்தில் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பக்கட்டணமாக ரூ.100 ஆன்லைனில் செலுத்த வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிக்க : https://apps.ursc.gov.in/
முக்கிய நாட்கள் :
விண்ணப்பம் தொடங்கிய நாள் : 20.12.2022
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 09.01.2023
கட்டணம் செலுத்தக் கடைசி நாள் : 11.01.2023.
No comments:
Post a Comment