JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்து மீண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளதாக ஜாக்டோ ஜியோ அறிவித்துள்ளது. இதுக்குறித்து செய்தியாளர்களிடம் பேசிய ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ், தமிழகத்தில் மீண்டும் பழைய பென்சன் திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், நிலுவையில் உள்ள அகவிலை படித்தொகையை வழங்க வேண்டும், தொகுப்பூதியும் மற்றும் மதிப்பூதியத்தில் பணியாற்றக்கூடிய ஊழியர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும், அரசு துறைகளில் அவுட்சோர்ஸ் முறையில் பணி நியமனத்திற்காண அரசாணையை ரத்து செய்ய வேண்டும், அரசு துறைகளில் காலியாக உள்ள 6 லட்சம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி 2023 ஜனவரி 5 ஆம் தேதி மாவட்ட தமிழக முழுவதிலும் உள்ள மாவட்ட தலைநகரங்களில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பாக ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட உள்ளோம்.
தமிழகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி அமைந்து 20 மாதங்கள் ஆகியும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படவில்லை. ஆட்சிகள் மாறினாலும் காட்சிகள் மாறவில்லை. கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டத்திற்கு பிறகும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற தமிழக அரசு முன் வராத பட்சத்தில் 2023 ஜனவரி 8 ஆம் தேதி மதுரையில் ஜாக்டோ ஜியோவின் உயர்மட்ட குழு கூட்டம் கூடி அரசுக்கு எதிராக அரசு ஊழியர்களின் கோரிக்கை குறித்த ஆர்ப்பாட்டத்தை தீவிர படுத்துவது குறித்து முடிவு எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
முன்னதாக சென்னை திருவல்லிக்கேணியில் உள்ள தமிழ்நாடு அரசு ஊழியர் அலுவலகத்தில்ஜாக்டோ ஜியோவின் மாநில ஒருங்கிணைப்பாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஜாக்டோ ஜியோ ஒருங்கிணைப்பாளர் இரா.தாஸ் உள்ளிட்ட பல நிர்வாகிகள் கலந்துக்கொண்டனர்
No comments:
Post a Comment