Join THAMIZHKADAL Arattai Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Sunday, December 18, 2022

எலும்பு தேய்மானத்திலிருந்து விடுபட வேண்டுமா? இந்த மாவை பாலில் கலந்து குடித்தால் போதும்.!!


நம் முன்னோர்களுக்கு எல்லாம் 60 வயது 90 வயதில் தான் மூட்டு வலி, எலும்பு தேய்மானம், இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவைகள் ஏற்படும் ஆனால் தற்போது உள்ள காலகட்டத்தில் அவை அப்படியே தலைகீழாக மாறி சிறு வயதிலேயே எலும்பு தேய்மானம், இடுப்பு வலி, மூட்டு வலி போன்றவைகள் ஏற்படுகின்றது.

அவ்வாறு ஏற்படும் வலிகளை எவ்வாறு சரி செய்வது என்று இந்த பதிவின் மூலம் காணலாம். உடலில் கால்சியம் சத்து குறைவதனால் தான் இவ்வாறான பிரச்சனைகள் ஏற்படுகிறது. மேலும் நம் உடம்பில் சுண்ணாம்பு சத்து, இரும்பு சத்து போன்றவைகள் குறைவதனாலும் இதுபோன்ற பிரச்சனைகள் ஏற்படுகின்றது.
அதற்கு முதலில் 100 கிராம் அளவிற்கு ஜவ்வரிசி எடுத்துக்கொண்டு அதனை மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். இதில் அதிகப்படியான நோய் எதிர்ப்பு சக்தியும் சுண்ணாம்பு சத்தம் இருக்கின்றது.

குறிப்பாக பெண்கள் இதனை எடுத்துக் கொள்வதன் மூலம் இடுப்பு வலியிலிருந்து விடுபடலாம்.

அதன் பிறகு 100 கிராம் கருப்பு எள்ளு மிதமான சூட்டில் வறுக்க வேண்டும். இதில் அதிகப்படியான கால்சியம் சத்தும் இரும்புச் சத்தும் நிறைந்துள்ளது. மேலும் கர்ப்பப்பைக்கு வலுமை சேர்த்து கர்ப்பப்பையில் ஏற்படும் பிரச்சனைகளுக்கு தீர்வாக அமையும்.

மேலும் கருப்பு உளுந்து 200 கிராம் எடுத்து மிதமான சூட்டில் வறுத்துக் கொள்ள வேண்டும். எலும்பு தேய்மானத்தை சரி செய்ய உதவுகிறது.

அதனுடன் 100 கிராம் பார்லி அரிசி எடுத்துக் கொள்ள வேண்டும். எலும்பு தேய்மானத்தை சரி செய்ய உதவுகிறது. சுண்ணாம்பு சத்துக்கள் நிறைந்துள்ளது. மிதமான சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ள வேண்டும்.
அதனுடன் ஆறு ஏலக்காய் சேர்த்து வறுக்க வேண்டும்.

நாம் வறுத்து வைத்துள்ள பொருட்கள் அனைத்தையும் மிக்ஸி ஜாரில் சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் ஒரு டேபிள் ஸ்பூன் அளவிற்கு சுக்கு பொடி சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.

தினந்தோறும் இதனை ஒரு டேபிள் ஸ்பூன் எடுத்துக்கொண்டு ஒரு டம்ளர் தண்ணீரில் நன்கு கரைத்துக் கொள்ள வேண்டும். ஒரு பாத்திரத்தில் ஒரு டம்ளர் பால் ,கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க ஆரம்பித்த உடன் நாம் கரைத்து வைத்துள்ள மாவை சேர்த்து நன்கு கொதிக்க வைத்து அதனுடன் ஒரு டீஸ்பூன் நாட்டு சர்க்கரை கலந்து குடித்து வரலாம். 

இதனை காலை நேரத்தில் டீக்கு பதிலாக குடிக்க வேண்டும். தொடர்ந்து இவ்வாறு செய்து வருவதன் மூலம் எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனையில் இருந்து எளிதில் நாம் விடுபடலாம்.

No comments:

Post a Comment