Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Tuesday, December 20, 2022

அரசு பள்ளிகளில் இடைநின்ற குழந்தைகள் வீடு, வீடாக கணக்கெடுக்கும் பணி தொடக்கம்


2022-23 ஆம் ஆண்டில் 6-18 வயதுடைய பள்ளி செல்லா, இடைநின்ற குழந்தைகளைக் கண்டறிவதற்கான கணக்கெடுப்பு பணி இன்று (டிச.19) தொடங்கி அடுத்தாண்டு ஜன.11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.

இதுகுறித்து ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி, தமிழ்நாடு மாநி்ல திட்ட இயக்குனர் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கை: அரசு பள்ளிகளில் இருந்து இடைநின்ற குழந்தைகளைக் கணக்கெடுக்கும் பணியை அனைத்து மாவட்டங்களிலுள்ள ஆசிரியப் பயிற்றுநர்கள், பள்ளித்தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், கல்வி தன்னார்வலர்கள், சிறப்புப் பயிற்றுநர்கள், இயன்முறைப் பயிற்சியாளர்கள் (Physiotherapist), சிறப்பு பயிற்சி மையப் பாதுகாவலர்கள், பள்ளிமேலாண்மைக் குழு உறுப்பினர்கள், தொடர்புடைய பிற துறை அலுவலர்கள் இணைந்து மேற்கொள்ள வேண்டும்.

மாவட்டத்திலுள்ள அனைத்து ஒன்றியங்களிலும் எந்தவொரு குடியிருப்பும் விடுபடாமல் வீடு வாரியாக கணக்கெடுப்பு பணி நடைபெற வேண்டும். குறிப்பாக ஒவ்வொரு மாவட்டத்திலும் இடம் பெயர்ந்த குடும்பத்தைச் சேர்ந்த குழந்தைகளின் எண்ணிக்கையை மிகச் சரியாக, எந்த ஒரு குழந்தையும் விடுபடாமல் கண்டறிதல் வேண்டும்.

வீடு வாரியான கணக்கெடுப்பில் குறிப்பாக ரயில் நிலையம், பேருந்து நிலையம், உணவகங்கள், பழம், பூ மற்றும் காய்கறி அங்காடி மற்றும் குடிசை பகுதிகள், கடலோர மாவட்டங்களிலுள்ள கரையோர பகுதிகளில் வாழும் மீனவ குடியிருப்பு பகுதிகள், விழாக்கள் நடைபெறும் பகுதிகளில் சிறப்பு கவனம் செலுத்த வேண்டும்.

கணக்கெடுப்பு சார்ந்த அனைத்து செயல்பாடுகளையும் முறையாக ஆவணப்படுத்த வேண்டும். பள்ளிகளில் சேர்த்தவுடன் எமிஸ் செயலியில் மாணவர்களின் விவரங்களை பதிவு செய்ய வேண்டும். கணக்கெடுப்பு களப்பணி இன்று (டிச.19-ல்) தொடங்கிஅடுத்தாண்டு ஜன.11 வரை நடைபெற வேண்டும்.

No comments:

Post a Comment