JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 1-5-ம் வகுப்பு வரை இனி காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என சட்டப்பேரவையில் முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீதான விவாதத்துக்கு சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிலுரை ஆற்றி வருகிறார்.
அப்போது பல்வேறு அறிவிப்புகளை முதல்வர் வெளியிட்டார். அப்போது உரையாற்றிய அவர்; பள்ளிவாசலுக்கு வழங்கப்பட்டு வரும் மானிய தொகை ரூ.5 கோடியில் இருந்து ரூ.10 கோடியாக உயர்த்தி வழங்கப்படும். கிராம சாலைகள் மேம்பாட்டு திட்டம் என்ற புதிய திட்டத்தை அரசு செயல்படுத்தும். 2 ஆண்டுகளில் 10,000 கி.மீ. நீள சாலைகள் ரூ.4,000 கோடியில் தரம் உயர்த்தப்படும்.
அனைத்து அரசுப்பள்ளிகளிலும் 1 முதல் 5-ம் வகுப்பு வரை இனி காலை உணவு வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படும். 2023-2024-ம் நிதியாண்டு முதல் அனைத்து அரசு பள்ளிகளிலும் காலை உணவு திட்டம் செயல்படுத்தப்படும். 2024 ஜனவரி 10,11-ம் தேதிகளில் உலக முதலீட்டாளர்கள் மாநாடு தமிழ்நாடு அரசு சார்பில் நடத்தப்படும். அதிமுக ஆட்சியை விட சுமார் 4ஆயிரம் கோடி குறைவாகவே கடன் வாங்கியுள்ளோம்;
திமுக ஆட்சியில் 79ஆயிரம் கோடி ரூபாய் மட்டும் கடன் வாங்கப்பட்டுள்ளது. 2030க்குள் 1 ட்ரில்லியன் டாலர் பொருளாதார இலக்கை அடைவதே நோக்கம். இளைஞர்களின் நலன், பெண்களின் திறன் மேம்பாடு ஆகியவற்றிற்கு முக்கியத்துவம் அளித்து வருகிறோம்.
முடித்தே தீர்வோம் என்பதே வெற்றிக்கான இலக்கு. மக்களுக்காக இருக்கிறேன், அதற்காக உண்மையாக உழைக்கிறேன். தமிழ்நாட்டில் தமிழ் மொழியை படிக்காமல் பள்ளியிலிருந்து தேர்ச்சி பெற முடியாது. 10ம் வகுப்பு வரை தமிழ் மொழி கட்டாய பாடம் என்ற சட்டத்தை இயற்றி, மிக முக்கியமான சாதனையை நிகழ்த்தினார் கலைஞர். அந்த வகையில் தமிழ்நாட்டில் அனைத்து பள்ளிகளிலும் தமிழ் பயிற்று மொழியாக இருப்பதை இந்த அரசு தொடர்ந்து கண்காணிக்கும் இவ்வாறு கூறினார்.
No comments:
Post a Comment