JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகை இந்த ஆண்டு சனிக்கிழமை தொடங்கி (ஜனவரி 15) செவ்வாய்க்கிழமை (ஜனவரி 18) வரை கொண்டாடப்பட்டு வருகிறது. அதாவது சனிக்கிழமை போகிப் பண்டிகையை தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை பெரும் பொங்கல் உற்சாகமாக கொண்டாடப்பட்டது. இன்று (ஜனவரி 16) மாட்டுப் பொங்கலும், நாளை (ஜனவரி 17) காணும் பொங்கலும் கொண்டாடப்படுகிறது.
பொங்கல் விடுமுறை முடிந்து புதன்கிழமை ( ஜனவரி 18) பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலங்கள் மீண்டும் வழக்கம் போல் இயங்கும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் போகிப் பண்டிகையும், பெரும் பொங்கலும் இந்த முறை வார இறுதி விடுமுறை நாட்களில் வந்துவிட்டதால் மாட்டு பொங்கல், காணும் பொங்கலுடன் சேர்த்து வார நாட்களில் இரண்டு தினங்கள் விடுமுறை அளிக்கப்பட வேண்டும் என்று பல்வேறு தரப்பிலும் கோரிக்கைகள் எழுந்தன.
இந்த கோரிக்கையை கருத்தில் கொண்டு, அரசு பள்ளி, கல்லூரிகள், அலுவலகங்களுக்கு புதன்கிழமையும் விடுமுறை அளிக்க அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இகுந்தன. சென்னை உள்ளிட்ட பெருநகரங்களில் இருந்து பொங்கல் பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு பயணித்தவர்கள் மீண்டும் அவர்கள் வசிக்கும் நகரங்களுக்கு திரும்ப வசதியாக இந்த விடுமுறையை அளிக்க அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல் வெளியாகி இருந்தது.
இந்த நிலையில், புதன்கிழமையும் பள்ளிகளுக்கு விடுமுறையா என்பது குறித்து தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பின் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறும்போது , " புதன்கிழமை பள்ளிகளுக்கு விடுமுறை அளிப்பது குறித்து அரசு இதுவரை எந்த முடிவையும் எடுக்கவில்லை" என தெரிவி்த்துள்ளார்.
அமைச்சரின் இந்த விளக்கத்தை வைத்து பார்க்கும்போது, நாளை செவ்வாய்க்கிழமை காணும் பொங்கல் விடுமுமுறை முடிந்து புதன்கிழமை பள்ளிகள் வழக்கம்போல் செயல்படும் எனத் தெரிகிறது
No comments:
Post a Comment