Monday, January 30, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 30.01.2023

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 

அதிகாரம்: நடுவுநிலைமை

குறள் : 113
நன்றே தரினும் நடுவிகந்தாம் ஆக்கத்தை
அன்றே யொழிய விடல்.

பொருள்:
நடுவுநிலை தவறுவதால் ஏற்படக்கூடிய பயன் நன்மையையே தரக் கூடியதாக இருந்தாலும், அந்தப் பயனைக் கைவிட்டு நடுவுநிலையைத்தான் கடைப்பிடிக்க வேண்டும்

பழமொழி :

இன்றை என்பதும் நாளை என்பதும் இல்லை என்பதற்கு அடையாளம்.

To say today; tomorrow, indicates refusal.

இரண்டொழுக்க பண்புகள் :

1. கடமை தவறாமல் உதிக்கும் சூரியன் நாம் நமது கடமையை தவறாமல் செய்ய வேண்டும் என்பதற்கு ஒரு உதாரணம். 

2. கல்லடி பட்டாலும் கனி தரும் மரங்கள் நாம் பலன் எதிர் பாராமல் பணி செய்ய ஒரு நல் உதாரணம்.

பொன்மொழி :

மனிதன் செல்வம் ஈட்டும் இயந்திரமாக அன்றி, சமுதாய முன்னேற்றத்தின் கருவியாகவும் இருக்க வேண்டும்.

பொது அறிவு :

1. எலக்ட்ரானை கண்டுபிடித்தவர் யார்? 

 தாம்சன்

 2. ஆசியாவில் உரத் தயாரிப்பில் இரண்டாம் இடம் வகிக்கும் நாடு எது ?

 இந்தியா.

English words & meanings :

stair – step. noun. படிக்கட்டு. stare - to look at steadily. verb. உற்று நோக்கு. வினைச் சொல் 

ஆரோக்ய வாழ்வு :

100 கிராம் நறுக்கிய வெங்காயத்தில்
கலோரிகள் - 75
புரதம் - 2.5 கிராம்
கொழுப்பு - 0கிராம்
கார்போஹைட்ரேட்டுகள் - 17 கிராம்
நார்ச்சத்துக்கள் - 3 கிராம்
கால்சியம் - 3%DV
இரும்புச் சத்து - 7%DV
மக்னீசியம் - 5%
பாஸ்பரஸ் - 5% DV
பொட்டாசியம் - 7% Dv
துத்தநாகம் - 4% DV
ஃபோலேட் - 9% DV
இதில் புரோட்டீன், நார்ச்சத்துக்கள், கால்சியம், இரும்புச்சத்து, மக்னீசியம், பாஸ்பரஸ், பொட்டாசியம், ஜிங்க், காப்பர், போலேட், வைட்டமின் பி, வைட்டமின் ஏ மற்றும் சி போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளன.

NMMS Q

6 இன் வர்க்கத்துடன் எந்த எண்ணின் கனத்தைக் கூட்டினால் 10,000 இன் வர்க்கமூலம் கிடைக்கும்?

 விடை : 4

ஜனவரி 30


மோகன்தாசு கரம்சந்த் காந்தி  அவர்களின் நினைவுநாள் 


மோகன்தாசு கரம்சந்த் காந்தி அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப்படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமையேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தைஎன்று அழைக்கப்படுகிறார். சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது. அக்டோபர் 2, 1869 – ஜனவரி 30, 1948) என்பவர் ஒரு இந்திய வழக்குறைஞரும், அன்னிய ஆட்சியை எதிர்த்த தேசியவாதியும், அரசியல் அறனாளரும் ஆவார். இவர் மகாத்மா காந்தி என்று அன்புடன் அழைக்கப் படுகிறார். இந்திய விடுதலைப் போராட்டத்தை வெற்றிகரமாக தலைமை யேற்று நடத்தியதன் காரணமாக இவர் "விடுதலை பெற்ற இந்தியாவின் தந்தை "என்று அழைக்கப்படுகிறார் சத்தியாக்கிரகம் என்றழைக்கப்பட்ட இவரது அறவழிப் போராட்டம் இந்திய நாட்டு விடுதலைக்கு வழி வகுத்ததுடன் மற்ற சில நாட்டு விடுதலை இயக்கங்களுக்கும் ஒரு வழிகாட்டியாக அமைந்தது.

நீதிக்கதை

ராமன் மற்றும் பேசும் கிளி

யார் எது சொன்னாலும் உடனே நம்பி விடுவான் ராமன். ஒரு நாள் சந்தைக்கு அவன் போன போது ஒரு வியாபாரி ஒரு கூண்டுக்குள். கிளி ஒன்றை வைத்து விற்றுக் கொண்டிருந்தான். இந்தக் கிளி பேசும் கிளி என்றான்.

ராமனும் நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான். வீட்டில் அதற்கு பேசப் பழக்கினான். ஒரு மாதம் ஆகியும் அந்தக் கிளி பேசவில்லை. அதை அவன் எடுத்துக்கொண்டு. தான் அதை வாங்கிய வியாபாரியிடம் சென்றான்.

அந்த வியாபாரியோ, அந்தக் கிளியை வாங்கி பரிசோதிப்பது போல பாசங்கு செய்து இந்த கிளிக்கு காது கேட்காது. அதனால் நீங்கள் சொல்வதைக் கேட்டும் அந்த கிளியால் பேச இயலவில்லை என்று சொல்லி வேறு ஒரு கிளியைக் காட்டி இதை வாங்கிக் கொள்ளுங்கள் இது பேசும் என்றான்.

ராமன் மீண்டும் ஒரு நூறு ரூபாய் கொடுத்து அந்தக் கிளியை வாங்கினான். அதற்கும் பேசக் கற்றுக்கொடுத்தான். அதுவும் பேசவில்லை. அப்போது ராமனின் நண்பர் ஒருவர் வந்தார். அவரிடம் ராமன் நடந்ததைக் கூறினான்.

உடனே அந்த நண்பர் அடடா! என்னை முதலிலேயே கேட்டிருக்கலாமே! அந்த வியாபாரி ஒரு பொய்யன். பொய் சொல்லி வியாபாரம் செய்வதே அவன் பிழைப்பு என்றான்.

ராமன் தான் ஏமாற்றப்பட்டதை எண்ணி மனம் வருந்தினான். யார் என்ன சொன்னாலும் அதைக் கேட்காமல் நமது அறிவை உபயோகித்து அது சாத்தியமா. என யோசித்து செயல்படவேண்டும்.

இன்றைய செய்திகள்

30.01.2023

* பள்ளிக்கரணை சதுப்பு நிலத்தில் நடைபெற்ற பறவைகள் கணக்கெடுப்பின் போது 14 ஆயிரம் அடி உயரத்தில் பறக்கும் வரித்தலை வாத்து தென்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

* ஜி20 மாநாட்டு பிரதிநிதிகள் பிப்ரவரி 1-ம் தேதி வருவதை முன்னிட்டு மாமல்லபுரத்தில் அதிகாரிகள் குழு ஆய்வு.

* பிப்ரவரி 1ம் தேதி டெல்டா மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்.

* நாடு தழுவிய தடுப்பூசி இயக்கத்தின் கீழ் இதுவரை மொத்தம் 220.4 கோடி கரோனா தடுப்பூசி டோஸ்கள் வழங்கப்பட்டுள்ளன என்று மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

* ஒலியைவிட 5 மடங்கு வேகத்தில் செல்லும், உள்நாட்டு ஹைபர்சோனிக் ஏவுகணையை இந்தியா  சோதனை செய்துள்ளது.

* நியூசிலாந்தில் வெள்ளம்: 3 பேர் பலி; ஆக்லாந்து நகரில் அவசரநிலை பிரகடனம்.

* உலக கோப்பை ஹாக்கி: தென்ஆப்பிரிக்காவை வீழ்த்தி 9-வது இடம் பிடித்தது இந்தியா.

* ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் : சாம்பியன் பட்டம் வென்றார் ஜோகோவிச்.

Today's Headlines

* According to the officials, during the bird survey conducted in Pallikaranai marshland, a flying Mallard duck was seen at a height of 14 thousand feet.

 * A team of officials inspected Mamallapuram ahead of the arrival of G20 conference delegates on February 1.

 * Chance of heavy rain in delta districts on February 1: Chennai Meteorological Department information.

* According to the Union Ministry of Health and Family Welfare, a total of 220.4 crore corona vaccine doses have been administered so far under the nationwide vaccination drive.

* India has test-fired an indigenous hypersonic missile that can travel 5 times the speed of sound.

* Floods in New Zealand: 3 dead;  Emergency declared in Auckland city.

* Hockey World Cup: India beat South Africa to finish 9th

 * Australian Open Tennis: Djokovic wins the title.
 
 Prepared by

Covai women ICT_போதிமரம்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


Featured News

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL
Back To Top