Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, January 14, 2023

சர்க்கரை நோயாளிகள் கரும்பு சாப்பிடலாமா? கூடாதா?

நிறைய பேருக்கு கரும்பு ரொம்பவும் பிடிக்கும். இத்தகையவர்கள் பொங்கல் பண்டிகையன்று தங்களின் ஆசை தீர கரும்பை வாங்கி சாப்பிடுவார்கள். ஆனால் தற்போது நிறைய பேருக்கு சர்க்கரை நோய் உள்ளது. சர்க்கரை நோயாளிகள் உண்ணும் உணவுகளில் அதிக கவனத்தை செலுத்த வேண்டும். இல்லாவிட்டால் அது இரத்த சர்க்கரை அளவை சட்டென உயர்த்தி நிலைமையை மோசமாக்கிவிடும்.

இதன் காரணமாகவே சர்க்கரை நோய் இருக்கும் பலரது மனதில் இருக்கும் ஒரு கேள்வி, கரும்பு சாப்பிடலாமா கூடாதா என்பது தான். பொதுவாக சர்க்கரை நோயாளிகள் குறைவான கிளைசீமிக் இன்டெக்ஸ் உள்ள உணவுகளைத் தான் உண்ண வேண்டும் என்பார்கள். கரும்பு என்ன தான் இனிப்புச் சுவையைக் கொண்டிருந்தாலும், அதன் கிளைசீமிக் இன்டெக்ஸ் மற்ற உணவுகளுடன் ஒப்பிடுகையில் குறைவு தான்.

எனவே சர்க்கரை நோயாளிகள் கரும்பு சாப்பிட அச்சம் கொள்ள தேவையில்லை. அதற்காக எவ்வளவு வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்பதில்லை. அளவாகவே சாப்பிட வேண்டும். இல்லாவிட்டால் மோசமான விளைவை சந்திக்க வேண்டியிருக்கும். இருப்பினும் ஒவ்வொருவரின் இரத்த சர்க்கரை அளவைப் பொறுத்து இது வேறுபடும். எனவே நீங்கள் சாப்பிடலாமா என்பதை உங்கள் மருத்துவரிடம் கேட்டுக் கொள்வதே நல்லது. இப்போது கரும்பு சாப்பிடுவதால் கிடைக்கும் பிற நன்மைகளைக் காண்போம்.
நோயெதிர்ப்பு சக்தி அதிகரிக்கும்

பலரும் சளி பிடித்திருந்தால் கரும்பு சாப்பிடுவதைத் தவிர்ப்பார்கள். ஆனால் உண்மையில் கரும்பு உடலின் நோயெதிர்ப்பு சக்தி உடனடியாக அதிகரிக்கும். எனவே உங்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்றவை இருந்தால், கரும்பு சாப்பிட தயக்கம் கொள்ள வேண்டாம்.

உடனடி ஆற்றல் கிடைக்கும்

கரும்பு உடலுக்கு உடனடி ஆற்றலை அளிக்கும். எனவே நீங்கள் மிகுந்த சோர்வை உணர்ந்தால் கரும்பு சாப்பிடுங்கள். இதனால் அதில் உள்ள எளிய சர்க்கரை உடலால் எளிதில் உறிஞ்சப்பட்டு, உடலுக்கு ஆற்றலை வழங்குகிறது.

கல்லீரல் செயல்பாடு மேம்படும்

கரும்பு கல்லீரலுக்கு நல்லது. குறிப்பாக கல்லீரல் தொடர்பான பிரச்சனைகளைக் கொண்டவர்கள் கரும்பு சாப்பிடுவது நல்லது. ஆய்வுகளில் கரும்பில் உள்ள காரத்தன்மை, உடலில் எலக்ட்ரோலைட்டுகளை சமநிலையில் பராமரிக்க உதவுவதாக கண்டறியப்பட்டுள்ளன.

புற்றுநோயை தடுக்கும்

கரும்பில் கால்சியம், மக்னீசியம், பொட்டாசியம், இரும்புச்சத்து போன்றவை அதிகளவில் உள்ளன. இதில் உள்ள ப்ளேவோனாய்டுகள் புற்றுநோய் செல்களின் வளர்ச்சியை தடுக்கும். குறிப்பாக இது புரோஸ்டேட் மற்றும் மார்பக புற்றுநோயைத் தடுக்க உதவுகிறது. எனவே புற்றுநோய் வரக்கூடாது என்று நினைத்தால், கரும்பை அப்படியே சாப்பிடலாம் அல்லது ஜூஸ் வடிவிலும் உட்கொள்ளலாம்.

செரிமான பிரச்சனை நீங்கும்

நீங்கள் செரிமான பிரச்சனைகளை அதிகம் சந்திக்கிறீர்களா? அப்படியானால் கரும்பு சாப்பிடுங்கள். இது வயிற்றில் pH அளவை சமநிலைப்படுத்தி, செரிமான அமிலத்தின் உற்பத்தியை சீராக்கி, செரிமான மண்டலத்தின் செயல்பாட்டை மேம்படுத்தும். முக்கியமாக மலச்சிக்கல் பிரச்சனையை சந்திப்பவர்கள், கரும்பு சாப்பிட அப்பிரச்சனையில் இருந்து நிவாரணம் கிடைக்கும்.

சிறுநீரகங்களுக்கு நல்லது

கரும்பு டையூரிக் பண்புகளைக் கொண்டுள்ளது. கரும்பை உட்கொள்வதன் மூலம், உடலில் உள்ள நச்சுக்கள் சிறுநீரின் வழியே அவ்வபோது வெளியேற்றப்படுகிறது. இதன் விளைவாக சிறுநீரகங்களின் செயல்பாடு மேம்படுவதன் மூலம் சிறுநீர் பாதை நோய்த்தொற்றுகள் மற்றும் சிறுநீரக கற்களைத் தடுக்க உதவுகிறது.

பற்களுக்கு நல்லது

கரும்பு சாப்பிடுவது பற்களுக்கு நல்லது. அதுவும் கரும்பை பற்களில் கடித்து உரித்து மென்று சாப்பிடும் போது, அதில் உள்ள கால்சியம் பற்களையும், ஈறுகளையும் நன்கு வலுவாக்குகிறது. முக்கியமாக கரும்பை மென்று சாப்பிடுவதால், பற்கள் வெண்மையடையும், வாய் துர்நாற்றம் நீங்கும் மற்றும் சொத்தைப் பல் பிரச்சனைத் தடுக்கலாம்.

நல்ல தூக்கம் கிடைக்கும்

உங்களுக்கு இரவு நேரத்தில் தூக்கம் வருவதில்லையா? தூக்கமின்மை பிரச்சனையால் அவதிப்படுகிறீர்களா? அப்படியானால் இரவு தூங்கும் முன் கரும்பு சாப்பிடுங்கள். ஏனெனில் கரும்பில் உள்ள ட்ரிப்டோஃபேன் உள்ளது. இது தூக்க மற்றும் விழிப்பு சுழற்சிகளை சீராக்கி, நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெற உதவி புரியும்.

No comments:

Post a Comment