Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 5, 2023

சர்க்கரை அளவை கட்டுப்படுத்தணுமா? இந்த இலையை இப்படி பயன்படுத்தி பாருங்க

சர்க்கரை நோய்க்கு மருந்தாகும் கொய்யா இலை: உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்படும் குளறுபடிகளாலும், உடற்பயிற்சியின்மையாலும் நீரிழிவு நோய் இந்நாட்களில் வேகமாகப் பரவி வருகிறது.

இன்று கிட்டத்தட்ட நால்வரில் ஒருவரில் இந்த நோய் காணப்படுகின்றது. இந்த நோய் படிப்படியாக உடலை உள்ளிருந்து அழிக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த நோயை ஸ்லோ டெத் என்றும் சொல்வார்கள். கொய்யா பழத்தை பெரும்பாலானோருக்கு பிடிக்கும். ஆனால் கொய்யாவில் பல மருத்துவ மற்றும் சிறந்த ஆரோக்கிய நன்மைகள் உள்ளன என்பது பலருக்குத் தெரியாது.

கொய்யா பழம்ஆரோக்கியமானது. ஆனால் அதன் இலைகளும் ஆரோக்கியத்தின் பொக்கிஷமாகவே உள்ளன. கொய்யா இலைகள் பல நோய்களுக்கு பாரம்பரிய மருந்தாகவும் பயன்படுத்தப்படுகின்றன.

கொய்யா இலையின் சாறு பல ஆரோக்கிய நன்மைகளைக் கொண்டுள்ளது. ரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் கட்டுப்படுத்துவது மட்டுமின்றி, அலர்ஜி பிரச்சனையையும் இது நீக்குகிறது. இது தவிர கொய்யா இலையை கொதிக்க வைத்து குடித்து வந்தால் உடலுக்கு பல நன்மைகள் கிடைக்கும். கொய்யா இலைகளால் கிடைக்கும் நன்மைகளைப் பற்றி இந்த பதிவில் காணலாம்.

சர்க்கரை நோய்க்கு கொய்யா நல்லதா?

கொய்யா குறைந்த கிளைசெமிக் குறியீட்டைக் கொண்டுள்ளது. இது அதன் செரிமானம் மற்றும் உறிஞ்சுதல் மெதுவாக இருப்பதைக் குறிக்கிறது. இதனால் அது படிப்படியாக குளுக்கோஸ் அளவுகளின் உயர்வை பாதிக்கும். கொய்யாவில் கலோரிகள் குறைவு. எனவே, இது எடை இழப்புக்கு உதவுகிறது.

உடல் எடை அதிகமாக இருப்பதும் நீரிழிவு நோய்க்கு ஒரு பெரிய காரணியாக உள்ளது. சுமார் 100 கிராம் கொய்யாவில் 9 கிராம் இயற்கை சர்க்கரை மற்றும் 68 கலோரிகள் மட்டுமே உள்ளன. கொய்யாவில் சோடியம் குறைவாகவும் பொட்டாசியம் அதிகமாகவும் உள்ளது. இது நீரிழிவு நோய்க்கான உணவுத் தேவைகளில் ஒன்றைப் பூர்த்தி செய்கிறது.

கொய்யாவில் நார்ச்சத்து அதிகம் உள்ளது. சாதாரண இரத்தசர்க்கரை அளவைபராமரிக்க இது சிறந்தது. மேலும், ஆரஞ்சுப் பழத்தில் உள்ள வைட்டமின் சி-யை விட கொய்யாவில் நான்கு மடங்கு அதிகமாக உள்ளது. உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உருவாக்குவதில் வைட்டமின் சி முக்கிய பங்கு வகிக்கிறது. மேலும், நீரிழிவு போன்ற நாள்பட்ட உடல்நலப் பிரச்சினைகளுக்கு எதிராக உடலைப் போராட உதவுகிறது.

சத்துக்கள் நிறைந்தது

நீரிழிவு நோயாளிகள் கொய்யாவை உட்கொள்ள வேண்டும். அதில் சர்க்கரை மிகவும் குறைவாக உள்ளது. ஆகையால், கொய்யா சாப்பிடுவது நீரிழிவு நோயாளிகளுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும். கொய்யாவில் வைட்டமின்-ஏ, வைட்டமின்-பி, வைட்டமின்-சி மற்றும் பாஸ்பரஸ் நிறைந்துள்ளன. இது இன்சுலின் உற்பத்திக்கு உதவி நீரிழிவு நோயின் வளர்ச்சியைத் தடுக்கிறது. இந்த இனிப்பு பழம் நீரிழிவு நோயாளிகளுக்கு ஒரு சஞ்சீவியாகவே செயல்படுகிறது. இந்த பழத்தை சாப்பிடுவதால் சர்க்கரையின் அளவு கட்டுக்குள் இருக்கும்.

கொய்யா இலை தேநீர் எப்போது குடிக்க வேண்டும்?

ஆயுர்வேதத்தின் படி, கொய்யா இலைகள் பல மருத்துவ பயன்களைக் கொண்டுள்ளன. கொய்யா இலையை காலையில் வெறும் வயிற்றில் தண்ணீரில் கொதிக்க வைத்து சாப்பிட்டு வந்தால் உடல் நலத்திற்கு மிகவும் நல்லது. கொய்யா இலையில் ஏராளமான வைட்டமின்கள், தாதுக்கள், நுண்ணூட்டச்சத்துக்கள் உள்ளன.

கொய்யா இலைகளை கொதிக்கும் நீரில் கொதிக்க வைத்து கொய்யா சாறு எடுக்கப்படுகிறது. இந்த சாற்றில் ஆண்டி ஆக்சிடெண்டுகள், வைட்டமின் சி மற்றும் ஃபிளாவனாய்டுகள் நிறைந்துள்ளன. கொய்யா இலை சாறுஇன்சுலின்எதிர்ப்பை மேம்படுத்துகிறது, குளுக்கோஸ் அளவை ஒழுங்குபடுத்துகிறது மற்றும் கொலஸ்ட்ரால் அளவை மேம்படுத்துகிறது.

No comments:

Post a Comment