Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Monday, January 23, 2023

சுண்டைக்காயில் இவ்ளோ விஷயம் இருக்கா.?

நாம் உணவிலே பயன்படுத்தக்கூடிய சுண்டைக்காய் சிறிது கசப்பான சுவையுடன் இருந்தாலும் உடலுக்கு தேவையான ஏராளமான நன்மைகளை கொண்டிருக்கிறது.

காய்கறிகளிலேயே மிகச்சிறிய அளவில் இருக்கும் இந்த சுண்டைக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் அடங்கியிருக்கின்றன. பப்பாளி, கொய்யாபோன்ற பழங்களுக்கு நிகரான அளவில் இதில் வைட்டமின்-சி நிறைந்து காணப்படுகிறது.

வைட்டமின்-ஈ, வைட்டமின் ஏ போன்ற சத்துக்களும் இதில் நிறைந்து இருக்கிறது.மேலும், இதில் இரும்புச்சத்து போன்ற தாதுக்களும் நிறைந்து இருக்கின்றன. இதில், ஆன்ட்டிஆக்சிடெண்ட் அதிக அளவில் காணப்படுகிறது.


சுண்டைக்காயில் இருக்கும் ஆக்சிஜனேற்ற மூலக்கூறுகள் மற்றும் இவற்றில் காணப்படும் பினால்கள், குளோரோ ஜெனிங்கள் நம் வயிற்றில் சுரக்கக்கூடிய அமிலங்களை நடுநிலையாக்க உதவுகிறது. இதன் காரணமாக கணையம் மற்றும் இரைப்பையில் ஏற்படக்கூடிய அழற்சி தடுக்கப்படுகிறது.

இது நம் செரிமான தொந்தரவுகள் மற்றும் வயிற்றுக் கோளாறுகளிலிருந்து பாதுகாக்கிறது. இதில் இருக்கக்கூடிய அதிகப்படியான நார்ச்சத்து நம் உடல் எடை இழப்பை துரிதப்படுத்துகிறது. மேலும் நம் உடலின் பசி உணர்வை கட்டுப்படுத்துகிறது.

சுண்டைக்காயில் இரும்புசத்து அதிக அளவில் நிறைந்து இருக்கிறது. இரும்புச் சத்தானது ரத்த சிவப்பணுக்களின் ஆரோக்கியமான உற்பத்திக்கு இன்றியமையாத ஒரு கனிமம் ஆகும். சுண்டைக்காயை நாம் உணவின் ஒரு பகுதியாக எடுத்துக் கொள்வதன் மூலம் நம் உடலுக்கு தேவையான அதிக அளவு இரும்புச் சத்து கிடைக்கிறது.

இது ரத்த சோகை குறைபாட்டை சரி செய்வதற்கும் நம் உடலின் ரத்த ஓட்டத்தை தூண்டுவதற்கும் உடலில் உள்ள பகுதிகளுக்கு தேவையான சத்துக்களை எடுத்துச் செல்வதற்கும் பயன்படுகிறது.

சுண்டைக்காயில் இருக்கும் கிளைகோசைட் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் நம் உடலின் இன்சுலின் உற்பத்தியை கட்டுப்படுத்துகிறது. இது உடலானது குளுக்கோஸ் அதிக அளவில் உறிஞ்சுவதையும் தடுக்கிறது.


இதன் காரணமாக ரத்தத்தில் சர்க்கரையின் அளவு திடீரென உயர்வது தடுக்கப்படுகிறது. ரத்தத்தில் குளுக்கோஸின் அளவை திறம்பட கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வைக்கிறது.

சுண்டைக்காயில் இருக்கும்
சபோஜெனின் என்ற தனித்துவமான ஸ்டீராய்டு நம் உடலின் ஹார்மோன் சுரப்பை கட்டுப்படுத்தி வளர்சிதை மாற்றத்தை ஒழுங்குபடுத்தும் திறனை கொண்டுள்ளது. இதன் காரணமாக சுண்டைக்காயை பயன்படுத்துவதால் பெண்களின் மாதவிடாய் சுழற்சியானது ஒழுங்குபடுத்தப்படுகிறது.

இதில் இருக்கக்கூடிய அதிகமான புரதச்சத்துக்கள் மற்றும் அமினோ அமிலங்கள் நம் இதயத் தசைகளை வலுப்படுத்தி ஆரோக்கியமுடன் இருக்க உதவுகின்றன. இதன் காரணமாக இதயத்துடிப்பானது சீராக இருக்க உதவுகிறது.மேலும் இது மற்ற உறுப்புகளுக்கு ஆக்சிஜன் மற்றும் ஊட்டச்சத்துக்களை கடத்துவதற்கு உதவுகிறது

No comments:

Post a Comment