Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 5, 2023

நீரிழிவு நோயை கட்டுப்படுத்தணுமா? பிசியோதெரபி உங்களுக்கு கை கொடுக்கும்

நீரிழிவு நோய் உலக மக்களுக்கு இடையில் நிலவும் பொதுவான நோய்களில் ஒன்றாகும். இது கட்டுப்படுத்தப்படாவிட்டால் மரணத்திற்கும் வழிவகுக்கக்கூடும்.

இது ஒரு வகையான வளர்சிதை மாற்றக் கோளாறாகும். இதன் காரணமாக உடலில் இன்சுலின் குறைவாகவோ அல்லது உற்பத்தியே ஆகாமலோ இருக்கும். அப்படி இருந்தால், உடலில் குளுக்கோஸின் அளவு அதிகரிக்கிறது. உணவுப் பழக்க வழக்கங்களில் ஏற்படும் குளறுபடிகளாலும், உடற்பயிற்சியின்மையாலும் நீரிழிவு நோய் இந்நாட்களில் வேகமாகப் பரவி வருகிறது. இன்று கிட்டத்தட்ட நால்வரில் ஒருவரில் இந்த நோய் காணப்படுகின்றது. இந்த நோய் படிப்படியாக உடலை உள்ளிருந்து அழிக்கிறது. இதன் காரணமாகத்தான் இந்த நோயை ஸ்லோ டெத் என்றும் சொல்வார்கள்.

நீரிழிவு நோய்அடிப்படையில் இரண்டு வகைப்படும். டைப் 1 நீரிழிவு மற்றும் டைப் 2 நீரிழிவு. டைப் 1 நீரிழிவு பொதுவாக மரபியல் காரணமாக ஏற்படுகிறது. அதே நேரத்தில் டைப் 2 நீரிழிவு ஆரோக்கியமற்ற வாழ்க்கை முறை மற்றும் உணவுப்பழக்கத்தால் ஏற்படுகிறது. துரதிர்ஷ்டவசமாக, நீரிழிவு நோய்க்கு மருந்து இல்லை. இருப்பினும், வாழ்க்கை முறை மாற்றங்களால் இதைக் கட்டுப்படுத்தலாம். நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதில் பிசியோதெரபி முக்கிய பங்கு வகிக்கிறது. நீரிழிவு நோயாளிகளுக்கு பிசியோதெரபி எவ்வாறு பயனுள்ளதாக இருக்கும் என்பதைப் இந்த பதிவில் புரிந்துகொள்வோம்.

வழக்கமான பிசியோதெரபி டைப் 2 நீரிழிவு நோயாளிகள், குறிப்பாக முதியவர்கள் மற்றும்இணை நோய்கள்உள்ளவர்கள் மீது நேர்மறையான விளைவை ஏற்படுத்தும். பிசியோதெரபி நீரிழிவு நோயின் அறிகுறிகள் மோசமடைவதைத் தடுப்பது மட்டுமல்லாமல், ஏற்கனவே உள்ள அறிகுறிகளைக் கட்டுப்படுத்தவும் உதவும்.

நீரிழிவு நோயாளிகளுக்கு பிசியோதெரபி எவ்வாறு உதவுகிறது என்பதை அறிந்து கொள்வோம்.

- நோயாளிகள் ஆரோக்கியமான எடையை அடைய உதவுகிறது
- பிசியோதெரபி இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது
- பிசியோதெரபி சோர்வைக் குறைக்கிறது
- பிசியோதெரபி தசைக்கூட்டு பிரச்சினைகளைக் குறைக்க உதவுகிறது

நீரிழிவு அபாயத்தில் இருந்து விலகி இருப்பது எப்படி

பிசியோதெரபி செய்துகொள்வது,சீரான உணவுபழக்கத்தைப் பின்பற்றுவது மற்றும் ஆரோக்கியமான எடையைப் பராமரிப்பது உள்ளிட்ட ஆரோக்கியமான வாழ்க்கை முறைகள் நீரிழிவு நோய் உருவாகும் அபாயத்தைக் குறைக்கின்றன. எனினும், எந்த வித சிக்கலும் இல்லாமல் இருக்க, எப்போதும் தொழில்முறை பிசியோதெரபி நிபுணர்களின் சேவைகளைப் பெறுவது நல்லது.

No comments:

Post a Comment