Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 27, 2023

புற்றுநோய் முதல் கொலஸ்ட்ரால் வரை... ஏலக்காயின் எண்ணற்ற நன்மைகளை பற்றி தெரியுமா..?

ஏலக்காயை இந்தியர்கள் பல நூற்றாண்டுகளாக சமையலுக்கு பயன்படுத்தும் மசாலாப் பொருள் ஆகும். இது பொதுவாக இனிப்பு மற்றும் காரமான உணவுகளில் பயன்படுத்தப்படுகிறது.

குறிப்பாக அசைவ உணவுகளில் வாசனைக்காக அதிகமாக பயன்படுத்தப்படும். அதுமட்டும் அல்ல, தற்போது மக்கள் ஏலக்காயை பயன்படுத்து காஃபி மற்றும் ஆகியவற்றையும் தயார் செய்து வருகின்றனர். ஏலக்காயில் இருக்கும் அட்டகாசமான மருத்துவகுணங்கள் பற்றி இங்கே காணலாம்.

ஏலக்காய் உட்கொள்வது செரிமான அமைப்பை வலுப்படுத்துவது மட்டுமல்லாமல், புற்றுநோய் போன்ற கடுமையான நோய்களுக்கு எதிராக போராடும் திறன் கொண்டது. இது, லேசான இனிப்பு மற்றும் புதினா போன்ற சுவை கொண்டவை. எனவே, இது வாயில் உள்ள தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாவை அழிக்கிறது. மேலும், வாய் துர்நாற்றத்தையும் கட்டுப்படுத்துகிறது.


ஏலக்காயில் ஏராளமான மருத்துவ குணங்கள் உள்ளன. இது உணவு மற்றும் காய்கறிகளின் சுவை மற்றும் மனத்தை அதிகரிக்க பயன்படுகிறது. அதுமட்டும் அல்லாது ஏலக்காயை தொற்று மற்றும் ஒவ்வாமைகளை கட்டுப்படுத்தவும் பயன்படுத்தலாம். இதில், பல்வேறு வைட்டமின்கள், தாதுக்கள், இரும்பு, மாங்கனீசு, கால்சியம், பொட்டாசியம், ரிபோஃப்ளேவின், நியாசின் மற்றும் மெக்னீசியம் உள்ளது.

ஏலக்காய் புற்றுநோயை எதிர்த்து போராடும்

ஹெல்த்லைன் தகவல்படி, "புற்றுநோயை எதிர்த்து போராடும் திறன் ஏலக்காய் பொடிக்கு உள்ளது. இதில் உள்ள அமிலங்கள் புற்றுநோய் செல்களை அழிக்க உதவுகின்றன". பப்மெட் சென்ட்ரல் இதழில் வெளியிடப்பட்ட ஆய்வில், "புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு ஏலக்காய் பொடியை கொடுத்தபோது, சில வகையான புற்றுநோயை எதிர்த்துப் போராடும் நொதிகளை அதன் உடலில் உருவாக்கியது. இது மட்டுமின்றி, கேன்சர் கட்டிகளை தாக்கும் இயற்கையான கொலையாளியை உடலில் உற்பத்தி செய்ய ஏலக்காய் தூண்டுகிறது.

மற்றொரு ஆய்வில், தோல் புற்றுநோயால் பாதிக்கப்பட்ட எலிகளுக்கு 500 மி.கி ஏலக்காய் தூள் கொடுக்கப்பட்டது, சுமார் 12 வாரங்களுக்குப் பிறகு அதன் உடல்நிலையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் காணப்பட்டது.

அதே நேரத்தில் மற்றொரு ஆய்வில், இரத்த அழுத்தத்திற்கு சிகிச்சை பெற்று வரும் சிலருக்கு மூன்று கிராம் ஏலக்காய் கொடுக்கப்பட்டது.

சில வாரங்களுக்குப் பிறகு, அவர்களின் இரத்த அழுத்தம் இயல்பு நிலைக்குத் திரும்பியது. ஏலக்காய் அதிக ஆக்ஸிஜனேற்ற பண்புகளைக் கொண்டிருப்பதால், இரத்த அழுத்தத்தைக் குறைத்து சமமான இருப்பது கண்டறியப்பட்டது.

அனைத்து வகையான அலர்ஜியையும் சரி செய்யும்

ஏலக்காயில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் (anti-inflammatory) உள்ளன. அதாவது, ஏலக்காயை உட்கொள்வது தொற்று மற்றும் அழற்சி பிரச்சனைகளில் இருந்து விடுபட உதவுகிறது. ஏனெனில், இதில் அழற்சி எதிர்ப்பு மற்றும் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் உள்ளன. அதேபோல, ஏலக்காயை உட்கொள்வது செரிமான அமைப்பை பலப்படுத்துகிறது என்று ஆயுர்வேதத்தில் கூறப்பட்டுள்ளது. ஏலக்காய் உடலில் அதிகப்படியான கொழுப்பு சேர்வதை அனுமதிக்காது. எனவே, கெட்ட கொழுப்புகளை கரைத்து, உடலை கட்டுக்கோப்பாக வைக்க உதவும்.

No comments:

Post a Comment