Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, January 12, 2023

துர்நாற்றமிக்க சளியை வெளியேற்ற வேண்டுமா? இதோ அதற்கான சில கிராமத்து கை வைத்தியங்கள்!

சளி பிடிக்கும் போது சில சமயங்களில் துர்நாற்றமிக்க சளியின் வாசனையை உணர்கிறீர்களா? அப்படியானால் உங்கள் சுவாசப் பாதையில் சளியானது வெளியேறாமல், நீண்ட நாட்களாக தேங்கியிருக்கிறது என்று அர்த்தம்.

பெரும்பாலும் இம்மாதிரியான துர்நாற்றமிக்க சளி வாசனையானது சைனஸ் பிரச்சனை இருந்தாலும் ஏற்படும். துர்நாற்றமிக்க சளி வாசனை தற்காலிகமானதே தவிர, உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் எந்த நோயின் அறிகுறியும் அல்ல.

நீங்களும் இப்படி துர்நாற்றமிக்க சளி வாசனையை உணர்ந்தால், அந்த சளியை வெளியேற்ற உடனே முயற்சிக்க வேண்டும். அதற்கு மருத்துவரிடம் செல்லலாம் அல்லது நமது வீட்டு சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டே சளியை கரைத்து வெளியேற்றலாம். அக்காலத்தில் நம் முன்னோர்கள் சளியை வெளியேற்ற நாட்டு வைத்தியங்களைத் தானே பின்பற்றினார்கள். இப்போது அவற்றில் சிலவற்றைக் காண்போம் வாருங்கள்.
தேன் கலந்த எலுமிச்சை ஜூஸ்

எலுமிச்சையில் உள்ள வைட்டமின் சி, நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. இது தவிர எலுமிச்சை மற்றும் தேன் கலவை சளியை முறித்து வெளியேற்ற உதவி புரியும். அதற்கு ஒரு டம்ளர் சுடுநீரில் எலுமிச்சை சாறு மற்றும் சுவைக்கேற்ப தேன் சேர்த்து கலந்து குடிக்க வேண்டும். அதுவும் ஒரு நாடிளக்கு 2-3 முறை குடித்தால் சளி கரைந்து வெளியேறிவிடும்.

வெதுவெதுப்பான நீர்

வழக்கமாக ஒருவர் சுடுநீரைக் குடிக்கும் பழக்கத்தைக் கொண்டிருந்தால், அவரது உடலில் சளி தேங்க வாய்ப்பில்லை. ஏனெனில் சுடுநீரானது சுவாசப் பாதையில் உள்ள சளியைக் கரைத்துவிடும். எனவே உங்களுக்கு சளி பிடித்திருக்கும் போது நல்ல சூடான நீரைக் குடிக்கும் வழக்கத்தைக் கொள்ளுங்கள். இது நிச்சயம் நல்ல பலனைத் தரும்.

உப்பு கலந்த சுடுநீர்

உங்களுக்கு துர்நாற்றமிக்க சளியின் வாசனை வீசுகிறதா? அப்படியானால் ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் 1/2 டேபிள் ஸ்பூன் கல் உப்பைப் போட்டு கலந்து, அந்நீரை வாயில் ஊற்றி 2 நிமிடம் கொப்பளித்து, பின் துப்புங்கள். இப்படி ஒரு நாளைக்கு 3-4 முறை செய்தால், தொண்டையில் இறுகியுள்ள சளி கரைந்து வெளியேறிவிடும்.

புதினா, இஞ்சி டீ

புதினா, இஞ்சி போன்ற பொருட்கள் சளியை முறிக்கும் திறன் கொண்டது. அந்த புதினா மற்றும் இஞ்சியைக் கொண்டு டீ தயாரித்து, அதில் சுவைக்கு சர்க்கரை சேர்க்காமல் தேன் சேர்த்து கலந்து குடித்தால், மூக்கு மற்றும் நெஞ்சு பகுதியில் தேங்கியுள்ள சளி கரைத்து வெளியேறும். வேண்டுமானால், சளி பிடித்திருக்கும் போது ஒரு துண்டு இஞ்சியை வாயில் போட்டு மென்று சாப்பிட்டு வாருங்கள்.

ஆவி பிடிப்பது

சளி பிடித்திருக்கும் போது, நல்ல சூடான நீரில் சிறிது யூகலிப்டஸ் ஆயில் சேர்த்து, அந்நீரைக் கொண்டு ஆவி பிடித்தால், நெஞ்சு பகுதியில் தேங்கியுள்ள சளி கரைந்து, மூக்கடைப்பு, துர்நாற்றமிக்க சளி வாசனை போன்றவற்றில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

மஞ்சள்

உங்கள் நெஞ்சு மற்றும் சுவாசப் பாதையில் தேங்கியுள்ள நாள்பட்ட சளியைக் கரைக்க மஞ்சள் பெரிதும் உதவி புரியும். அதற்கு வெதுவெதுப்பான நீரில் ஒரு சிட்டிகை மஞ்சள் தூள் சேர்த்து, வாயைக் கொப்பளிக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்நீரைக் குடிக்கலாம். இதனால் சளி கரைந்து வெளியேறிவிடும்.

No comments:

Post a Comment