JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பி.ஹெச்டி., படிக்கும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மாணவர்கள், கல்வி ஊக்க தொகை பெற, பிப்., 10க்குள் விண்ணப்பிக்க வேண்டும்.ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் கிறிஸ்துவ மதம் மாறிய ஆதிதிராவிட மாணவர்களுக்கு, பல்வேறு கல்வி உதவித் தொகை திட்டங்கள் செயல்படுத்தப் படுகின்றன.
அதில், முழு நேர முனைவர் பட்டப் படிப்பான, பி.ஹெச்டி., படிக்கும் மாணவர்களுக்கான, கல்வி ஊக்கத் தொகை திட்டம் முக்கியமானது.இத்திட்டத்தின் கீழ் தகுதி பெற, குடும்ப வருமானம் ஆண்டுக்கு, 8 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. தகுதி பெற்ற மாணவருக்கு தலா, 1 லட்சம் ரூபாய் வீதம், 1,600 மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை வழங்கப்படும்.
நடப்பாண்டு கல்வி ஊக்கத்தொகை பெற, விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விண்ணப்பத்தை, www.tn.gov.in/forma/deptname/1 என்ற இணையதள முகவரியில், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள், பிப்., 10க்குள், 'இயக்குனர், ஆதிதிராவிடர் நல இயக்குனரகம், எழிலகம், சேப்பாக்கம், சென்னை - 5' என்ற முகவரிக்கு அனுப்ப வேண்டும் என, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை செயலர் ஜவஹர் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment