Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, January 13, 2023

TNPSC இன்று வெளியிட்டுள்ள புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு என்ன தெரியுமா?

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலியிடங்களுக்கான அறிவிப்பை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி பொறியியல் சார்நிலைப் பணிகளில் அடங்கிய ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் 761 சாலை ஆய்வாளர் பதவிக்கான காலியிடங்களுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான எழுத்துத் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இதற்கு தகுதியும் ஆர்வமும் உள்ளவர்களிடம் இருந்து பிப்ரவரி 11 ஆம் தேதிக்குள் ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. அறிக்கை எண்.02ய2023 பணி மற்றும் காலியிடங்கள் விவரம்: பணி: சாலை ஆய்வாளர் காலியிடங்கள்: 761 சம்பளம்: மாதம் ரூ.19.500 - 71,900 வயதுவரம்பு: ஆ.தி, ஆ.தி(அ), பழங்குடியினர், மிபிவ, சீம, பி.வ, பி,வ(மு) மற்றும் அனைத்து வகுப்புகளையும் சார்ந்த ஆதரவற்ற விதவைகள் உச்ச வயது வரம்பு இல்லை. ஏனையோர் 37 வயதிற்குள் இருக்க வேண்டும்.

தகுதி: அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனங்களில் ஐ.டி.ஐ., சிவில் இன்ஜினியரிங் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும். அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். எழுத்துத் தேர்வு நடைபெறும் நாள்: தாள்-1 பாடத்தாள்(தொழிற்பயிற்சி தரம்) 7.5.2023 அன்று காலை 9.30 முதல் பிற்பகல் 12.30 மணி வரையும், தாள்-2 அன்றைய நாள் பிற்பகல் 2 மணி முதல் பிற்பகல் 5 மணி வரை நடைபெறும். கட்டணம்: நிரந்தர பதிவுக் கட்டணம் ரூ.150, தேர்வுக் கட்டணம் ரூ.100 செலுத்த வேண்டும்.

கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த வேண்டும். கட்டண சலுகைகள் குறித்து அறிவிப்பை பார்த்து தெரிந்துகொள்ளவும். தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், இட ஒதுக்கீடு விதி அடிப்படையில் விண்ணப்பத்தார்கள் தேர்வு செய்யப்பட்டு சான்றிதழ்கள் சரிபார்க்கப்பட்டு கலந்தாய்வுக்கு அழைக்கப்படுவர். விண்ணப்பிக்கும் முறை: www.tnpscexams.in/ www.tnpsc.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி நாள்: 11.2.2023 மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்யவும்.

No comments:

Post a Comment