Friday, February 24, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 24.02.2023

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி


திருக்குறள் :

பால் :அறத்துப்பால் 

இயல்:இல்லறவியல் 


அதிகாரம்: ஒழுக்கம் உடைமை

குறள் : 132
பரிந்தோம்பிக் காக்க ஒழுக்கம் தெரிந்தோம்பித்
தேரினும் அஃதே துணை.

பொருள்:
எந்தெந்த வழிகளில் ஆராய்ந்தாலும் வாழ்க்கையில் ஒழுக்கமே சிறந்த துணை என்பதால், எத்தகைய துன்பத்தை ஏற்றாவது அதைக் காக்க வேண்டும்

பழமொழி :

A closed mouth catches no flies

நுணலும் தன் வாயால் கெடும்

இரண்டொழுக்க பண்புகள் :

1. பொய் உரக்க குரல் கொடுத்தாலும் உண்மை பேசுவேன். 

2. ஏனென்றால் உண்மை ஒரு போதும் உறங்காது ஊமையாகவும் இருக்காது

பொன்மொழி :

ஒழுக்கம் உள்ள மனிதன் பெருந்தன்மையும் மரியாதையும் கலந்த சொற்களையே பேசுவான். ஜேம்ஸ் ஆலன் 

பொது அறிவு :

1. உலகிலேயே மிகச் சிறிய நாடு எது? 

 வாடிக்கன் . 

 2. உலக சமாதானத்தின் காவலன் எனப்படுவது எது?

 ஐ.நா. சபை.

English words & meanings :

ablate - remove. verb. நீக்குதல். வினைச் சொல். the tumour is removed surgically by a best doctor

ஆரோக்ய வாழ்வு :

இலந்தைப் பழத்தில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்திருக்கின்றன. விட்டமின் ஏ, விட்டமின் சி ,கால்சியம், பொட்டாசியம், இரும்புச்சத்து ஆகியவை. அதோடு டயட்ரி ஃபைபர் என்னும் நார்ச்சத்து நிறைந்த பழம் இது. இதில் கிட்டத்தட்ட 18 அமினோ அமிலங்கள் நிறைந்திருக்கின்றன. நிம்மதியான தூக்கத்திற்கு வழிவகுக்கிறது. அதனால் மன அமைதி பெறுவதோடு நரம்பு மண்டலமும் அமைதியாக இருக்கும்.

NMMS Q

கால்நடைகளுக்கு வாய் மற்றும் குளம்பு நோயை ஏற்படுத்தும் நுண்ணுயிரி__________ 

விடை: ஆப்ரோவைரஸ்

பிப்ரவரி 24


ஸ்டீவ் ஜொப்ஸ் அவர்களின் பிறந்தநாள்

ஸ்டீவ் ஜொப்ஸ் (தமிழக வழக்கு: ஸ்டீவ் ஜாப்ஸ்) (Steve Jobs, பிறப்பு பெப்ரவரி 24, 1955- அக்டோபர் 5, 2011) ஆப்பிள் நிறுவனத்தின் தலைவரும் தலைமை ஆட்சியரும், கணினித் துறையின் குறிப்பிடத்தக்க ஓர் ஆளுமையாளரும் ஆவார். இவர் 1985 ஆம் ஆண்டில், அமெரிக்க நாட்டரசு, அவர்களின் குடியரசுத் தலைவரால் வழங்கிப் பெருமை செய்யும் அந்நாட்டின் தலையாய பரிசாகிய தொழில்நுட்பத்துக்கும் புதுமையாக்கத்துக்குமான பதக்கத்தை வென்றார்.

ஸ்டீவ் ஜொப்ஸ், 1976 இல் ஆப்பிள் கம்பியூட்டர் நிறுவனத்தைத் தொடங்கியவர்களுள் ஒருவர். இவர் பிக்ஃசார் அசைபட நிறுவனத்தின் (Pixar Animation Studios) தலைமை ஆட்சியராகவும், வால்ட் டிசினி (Walt Disney) போன்ற பல நிறுவனங்களின் ஆட்சிப் பேராய இயக்குநர்களில் ஒருவராகவும் இருந்தார். ஆகத்து 24, 2011 அன்று உடல்நிலை காரணமாக தலைவர் பதவியிலிருந்து விலகினார். இவரையடுத்து டிம் குக் பொறுப்பேற்றார். 2011 ஆம் ஆண்டு அக்டோபர் 06 ஆம் திங்கள் அதிகாலை அவர் உயிரிழந்தார்.

நீதிக்கதை

ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்திவிட்டார். இராமன் மீது பொறாமை கொண்ட ராஜகுரு இந்த குற்றச் சாட்டை அரசவைக்குக் கொண்டுவந்து, மன்னனையும் தூண்டி விட்டார். 

ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும். எனவே இதற்கு மன்னிப்பே கிடையாது. எனவே மன்னர் ராஜகுருவையே தண்டனையளிக்கும்படி கேட்டுக் கொண்டார். உடனே ராஜகுரு தெனாலிராமனை மண்ணில் கழுத்து வரை புதைத்து விட்டு, யானையின் காலால் தலையை மிதித்து கொல்ல வேண்டும் என்று தீர்ப்புவழங்கினார். மன்னரும் அப்படியே செய்யுங்கள் என்றார். 

உடனே காவலர்கள் தெனாலிராமனை காட்டுக்குள் ஒற்றை அடிப்பாதை வழியாக இழுத்துச் சென்று. ஆள் நடமாட்டமில்லாத இடத்தில் நின்றார்கள். அந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டினார்கள். தெனாலிராமனை அந்தப் பள்ளத்தில் இறக்கி கழுத்தளவு மண்ணால் மூடி விட்டனர். பின் யானையைக் கொண்டுவர அரண்மனைக்குச் சென்றனர். 

தெனாலிராமன் தப்பிச் செல்ல வழிதெரியாமல் மண்ணுக்குள் தவித்துக் கொண்டிருந்தார். இந்த நிலையில் தூரத்தில் யாரோ வருவது தெரிந்தது. அய்யா! என்று அழைத்தார். அந்த மனிதன் அச்சத்துடன் வந்தார். பயப்படாதீர்கள்... ! இங்கே வாருங்கள் என்றான். ராமனின் அருகே அமர்ந்தார். யாரைய்யா உம்மை மண்ணுக்குள் புதைத்தது? என்றார். 

இராமன் வந்தவனின் முதுகைப் பார்த்தான். அவன் முதுகு வளைந்து கூனனாகியிருப்பதை அறிந்த இராமன், அவரிடம் சாமர்தியமாகப் பேசினான். அய்யா! நானும் கூனந்தான். ஒரு பெரியவர் என்னிடம் ஒரு நாள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்திருந்தால் கூன் நிமிர்ந்து விடும் என்று சொன்னார். அதன்படி நானும் காலை முதல் மண்ணுக்குள்ளேயே இருக்கிறேன். 

என்னைத் தூக்கி விடுங்கள், என் கூன் நிமிர்ந்து விட்டதா என்று பார்க்க மிகவும் ஆசையாக இருக்கிறது. என்றான். கூனனும் இராமனை வெளியே எடுத்தார். இராமன் தன் கூனல் நிமிர்ந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்வது போல நடித்தார். 

அதை உண்மையென நம்பிய கூனன், தன்னையும் மண்ணில் புதைக்கும்படி கேட்டார், தன் கூனல் நிமிர வழிசெய்யும்படி வேண்டிக் கேட்டுக் கொண்டார். தெனாலிராமனும் மண்ணால் மூடிவிட்டுத் தன் வீடுக்குச் சென்றான். 

யானையுடன் வந்த காவலர்கள் தாங்கள் விட்டுச் சென்ற இடத்தில் இராமனுக்குப் பதிலாக வேறொருவன் இருப்பதைப் பார்த்துத் திகைத்தனர். அந்த கூனனை அழைத்துக் கொண்டு மன்னரிடம் சென்று ராமனின் தந்திரத்தைக் கூறினர். ராமனின் திறமையைக் கண்டு அவனை மன்னித்து விடுதலை செய்தார் மன்னர்.

இன்றைய செய்திகள்

24.02.2023

* இடஒதுக்கீட்டு முறை பின்பற்றாவிட்டால் கிராம உதவியாளர் நியமனம் ரத்து: உயர் நீதிமன்றம் எச்சரிக்கை.

* உலக மகளிர் தினமான மார்ச் 8-ம் தேதி தமிழ்நாடு மாநில மகளிர் கொள்கையை வெளியிட தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதில் மகளிர் மேம்பாடு, பாதுகாப்பு தொடர்பான பல்வேறு அம்சங்கள் இடம் பெறவுள்ளன.

* சென்னை, புறநகரில் வேகமாக பரவும் வைரஸ் காய்ச்சல்: ரூ.12 ஆயிரம் வரை பரிசோதனைக்காக செலவிடும் மக்கள்.

* இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் ஊடுருவல்களை தடுக்க ஸ்மார்ட் தடுப்பு வேலி அமைக்கும் பணி தீவிரம்.

* பள்ளியில் முதல் வகுப்பில் குழந்தையை சேர்ப்பதற்கு 6 வயது இருக்க வேண்டும் - மாநிலங்களுக்கு மத்திய அரசு உத்தரவு.

* '3000 ஆண்டுகளுக்கு முன்பே மூளையில் அறுவை சிகிச்சை’ - வியப்பில் இஸ்ரேல் ஆய்வாளர்கள்.

* ஐ.நா. பொதுச் சபையில் இன்று கொண்டு வரப்படும் ரஷ்யாவுக்கு எதிரான தீர்மானத்தை ஆதரிக்க வேண்டும் - இந்தியாவுக்கு உக்ரைன் அரசு கோரிக்கை.

* 20 ஓவர் கிரிக்கெட் பேட்டிங் தரவரிசை - சூர்யகுமார் யாதவ் முதலிடம்.

Today's Headlines

Cancellation of appointment of village assistant if reservation system is not followed: High court warns.

* Tamil Nadu Government has decided to release the Tamil Nadu State Women's Policy on International Women's Day, March 8. It included various aspects related to women's development and security.

* Rapidly spreading viral fever in suburbs of Chennai: People spend up to Rs 12 thousand for testing.

* Intensification of construction of smart fence along India-Pakistan border to prevent infiltration.

* The child should completed 6 years to enroll  in the first standard  – Central Government order to the states.

* 'Brain surgery 3000 years ago' - amazed Israeli researchers.

* The decision against Russia should be supported by India in today's  UNO's General Assembly. Ukraine's request to India 

* 20 Over Cricket Batting Rankings - Suryakumar Yadav tops.
 Prepared by

Covai women ICT_போதிமரம்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


Featured News

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL
Back To Top