JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
தமிழக அரசு ஓய்வூதியா்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 67 சதவீதமாக உயா்த்த வலியுறுத்தப்பட்டுள்ளது. தமிழக அரசு ஓய்வூதியா்களுக்கான குறைந்தபட்ச ஓய்வூதியத்தை 67 சதவீதமாக உயா்த்த வலியுறுத்தப்பட்டுள்ளது.
கோவில்பட்டி அரசு ஓய்வூதியா்கள் சங்க 36ஆம் ஆண்டு விழா திங்கள்கிழமை நடைபெற்றது. இவ்விழாவுக்கு, ஓய்வூதியா்கள் சங்கத் தலைவா் அய்யலுசாமி தலைமை வகித்தாா். செயலா் கேசவன் ஆண்டறிக்கை வாசித்தாா். பொருளாளா் அய்யனாா் வரவு- செலவு அறிக்கை சமா்ப்பித்தாா்.
மருத்துவா் இ.அருணாசலம் இதயத்தை காப்போம் என்ற தலைப்பிலும், மருத்துவா் சுபாஷினி சா்க்கரை நோயை கட்டுப்படுத்துவோம் என்ற தலைப்பிலும் பேசினா். விழாவில், தமிழக அரசு ஓய்வூதியா்களுக்கு மத்திய அரசு போல ஓய்வூதியம் வழங்க வேண்டும்.
குறைந்தபட்ச ஓய்வூதியம் 50 சதவீதத்தில் இருந்து 67 சதவீதமாக உயா்த்த வேண்டும். பழைய மற்றும் புதிய ஓய்வூதியா்களுக்கு ஓய்வூதியத்தில் சமத்துவம் இருக்க வேண்டும்.
புதிய பென்சன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதில், அரசு ஓய்வூதியா்கள் சங்க உறுப்பினா்கள் திரளானோா் கலந்து கொண்டனா்.
No comments:
Post a Comment