Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Saturday, February 4, 2023

தமிழ்நாடு ஊராட்சித் துறையில் 760 சாலை ஆய்வாளர் காலியிடங்கள்: யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?


தமிழ்நாடு ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையில் உள்ள 761 சாலை ஆய்வாளர் பணியிடங்களுக்கான ஆள்சேர்க்கை அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (TNPSC) வெளியிட்டுள்ளது.
இப்பதவிக்கு, விண்ணப்பிக்க வரும் 11ம் தேதி கடைசி நாளாகும். எனவே, ஆர்வமும், தகுதியும் உள்ள மாணவர்கள் உடனடியாக விண்ணப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

முக்கியமான நாட்கள்:

டிஎன்பிஎஸ்சி இணையதளம் மூலம் விண்ணப்பங்கள் சமர்ப்பிப்பதற்குரிய இறுதி நாள்: 11.02.2023

எழுத்துத் தேர்வு:

தாள் - I பாடத் தாள்: 07.05.2023 (9.30 மணி முதல் பிற்பகல் 12.30 மணி வரை)

தாள் - II: பகுதி அ -கட்டாய தமிழ் மொழி தகுதித் தேர்வு; பகுதி - ஆ பொது அறிவியல் - 07.05.2023 (2.00 மணி முதல் பிற்பகல் 5.00 மணி வரை)

காலியிடங்கள்: 760

கல்வித் தகுதி: ஐ.டி.ஐ (கட்டுமான வரைதொழில் அலுவலர்) சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்; சிவில் படிப்பில் பட்டயம் பெற்ற விண்ணப்பத் தாரகளுக்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Must possess an I.T.I. Certificate in Civil Draughtsmenship from a Government recognized institute:Provided that preference shall be given to the persons possessing a Diploma in Civil Engineering.

வயது வரம்பு: பொதுப் பிரிவினர், 1.07.2023 அன்று 37 வயதிற்கு மிகாதவராக இருத்தல் வேண்டும். ஏனைய பிரிவினருக்கு உச்ச வயது வரம்பு கிடையாது.

தேர்வுமுறை: எழுத்துத் தேர்வில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி பட்டியல் தயாரிக்கப்படும் .

தாள் II ல் பகுதி"அ"வில் குறைந்தபட்ச மதிப்பெண் பெறாத தேர்வர்களின் தாள் 1 மற்றும் தாள் II இல் பகுதி "ஆ"வின் விடைத்தாள்கள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

தாள் I மற்றும் தாள் II இல் பகுதி "ஆ"வில் பெறும் மதிப்பெண்கள் மட்டும் தர நிர்ணயத்திற்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும்.

தாள் I (பாடத் தாள்) மற்றும் தாள் IIன் பகுதி "ஆ"விற்கான (பொது அறிவு) வினாத்தாள் தமிழ் மற்றும் ஆங்கில மொழியில் அமைக்கப்படும்.

விண்ணப்பதாரர் கணினிவழித் தேர்வின் அனைத்து தாள்களிலும் கலந்து கொள்ள வேண்டும். விண்ணப்பதாரர் ஏதேனும் ஒரு தாளில் கலந்த கொள்ளவில்லையெனில் அவர் கலந்து கொண்ட இதர தாள் மதிப்பீடு செய்யப்படமாட்டாது.

விண்ணப்பக் கட்டணம்: இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.100 ஆகும். டிஎன்பிஎஸ்சி ஒருமுறை பதிவுக் கட்டணம் ரூ.150 ஆகும். ஆதிதிராவிடர், அருந்ததியர், பழங்குடியினர், ஆதரவற்ற விதவைகள், நிர்ணயிக்கப்பட்ட குறைபாடுள்ள மாற்றுத் திறனாளிகள் தேர்வுக் கட்டணம் செலுத்த தேவையில்லை.

தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு முன்னுரிமை உண்டு:

தமிழ் வழியில் முன்னுரிமை இடஒதுக்கீடு இதற்கு பொருந்தும். எனவே, தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான உரிமைகோரும் விண்ணப்பதாரர்கள், நிர்ணயிக்கப்பட்ட கல்வித்தகுதி வரைக்கும் அனைத்துக்கல்வித் தகுதியினையும் தமிழ்வழியில் பயின்றதற்கான சான்றிதழை இணையவழி விண்ணப்பத்துடன் இணைத்து பதிவேற்றம் செய்ய வேண்டும்.

விண்ணப்பம் செய்வது எப்படி? 

தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் அதிகாரப்பூர்வ இணையதளமான www.tnpsc.gov.in -யில் விண்ணப்பிக்க வேண்டும். முழுமையாக பூர்த்தி செய்யப்படாத, தகுதியில்லாத, காலம் கடந்து பெறப்பட்ட விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று டிஎன்பிஎஸ்சி தெரிவித்துள்ளது. எனவே,குறைந்தபட்சம் கட்டுமான வரைதொழில் ஐடிஐ சான்றிதழ் பெற்ற விண்ணப்பதாரர்கள் இத்தேர்வில் கலந்து கொண்டு பலனடையுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

No comments:

Post a Comment