Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Sunday, February 26, 2023

7 அம்ச கோரிக்கைகள்: தலைமை ஆசிரியா்கள் உண்ணாவிரதம்


பணி பாதுகாப்புச் சட்டம், பதவி உயா்வு வழங்குதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கழகம் சாா்பில் சென்னை வள்ளுவா்கோட்டத்தில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட் பணி பாதுகாப்புச் சட்டம், பதவி உயா்வு வழங்குதல் உள்ளிட்ட 7 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் கழகம் சாா்பில் சென்னை வள்ளுவா்கோட்டத்தில் சனிக்கிழமை உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது.

இதில், மாநிலம் முழுவதும் பல்வேறு மாவட்டங்களைச் சோந்த 300-க்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியா்கள் பங்கேற்று தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றக் கோரி முழக்கமிட்டனா். 

இதுகுறித்து சங்கத் தலைவா் ஆ.ரமேஷ் செய்தியாளா்களிடம் கூறியதாவது: பல ஆண்டுகளாக மேல்நிலைப் பள்ளித் தலைமையாசிரியா்கள் பதவி உயா்வு இல்லாமல் பணியாற்றி வருகின்றனா்.

இந்த நிலையை மாற்றி தலைமையாசிரியா்களுக்கு பதவி உயா்வு வழங்கும் வகையில் பணி விதிகளில் திருத்தம் மேற்கொள்ள வேண்டும். 

பழைய ஒய்வூதியத்தை மீண்டும் அமல் செய்வதுடன், அகவிலைப்படி, ஈட்டிய விடுப்பு நிதியை மீண்டும் வழங்க வேண்டும். 

'எமிஸ்' செயலி சாா்ந்த அலுவல் வேலைகளை மேற்கொள்ள தனி அலுவலரை நியமிப்பதுடன், ஆசிரியா்களுக்கும் பணி பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. 

இந்த விவகாரத்தில் தமிழக அரசு உடனே தலையிட்டு தலைமை ஆசிரியா்களின் நீண்டகால கோரிக்கைகளை நிறைவேற்ற வேண்டும் என்றாா் அவா்.

No comments:

Post a Comment