Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, February 8, 2023

அரசு நூலகங்களில் வேலை வேண்டுமா? டிஎன்பிஎஸ்சி புதிய அறிவிப்பு!

Add This Number In Your Whatsapp Groups -6379884356
ஒருங்கிணைந்த நூலக பணிகள், சார்நிலை பணிகளில் அடங்கிய பதவிகளுக்கான 35 காலிப்பணியிடங்களை நேரடி நியமனம் மூலம் நிரப்புவதற்கான கணினி வழித் தேர்விற்கான அறிவிப்பை தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம்(டிஎன்பிஎஸ்சி) வெளியிட்டுள்ளது.

இந்த பதவிகளுக்கான தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கு மார்ச் 1 ஆம் தேதி கடைசி நாளாகும். டிஎன்பிஎஸ்சி அறிவிப்பின்படி, தமிழ்நாடு அரசு சட்டக்கல்லூரியில் நூலகர் 8 இடங்கள், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலகர் மற்றும் தகவல் அலுவலர் 1 இடம், மாவட்ட நூலக அலுவலர் 3 இடங்கள் என 12 இடங்கள். இந்த பதவிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெறும். மேற்கண்ட பதவிகளுக்கு சம்பளமாக மாதம் ரூ.57,700 - 2,11,500, ரூ.56,100 - 2,08,700, ரூ.56,100 - 2,05,700 வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோன்று பொதுத் துறையின் கீழ் தலைமைச் செயலக நூலகம் நூலக உதவியாளர் 2 இடங்கள், பொது நூலக துறையில் கலைஞர் நினைவு நூலகம் மற்றும் அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நூலகர் மற்றும் தகவல் உதவியாளர் 21 இடங்கள் என 23 இடங்கள். இந்த பணியிடங்களுக்கு நேர்முகத் தேர்வு கிடையாது. மேற்கண்ட பதவிகளுக்கு மாதம் ரூ.35,400 - 1,30,400, ரூ.19,500 - 71,900 சம்பளமாக வழங்கப்படும். நூலகத் துறையில் இளங்கலை, முதுகலைப் பட்டம், முதுகலை டிப்ளமோ முடித்திருப்பவர்கள் மேற்கண்ட பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

மேற்கண்ட பதவிகளுக்கான எழுத்துத் தேர்வுக்கு மார்ச் 1 ஆம் தேதி வரை டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in அல்லது www.tnpscexams.in என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும். மார்ச் 6 ஆம் தேதி வரை நள்ளிரவு 12.1 மணி முதல் மார்ச் 8 ஆம் தேதி இரவு 11.59 வரை திருத்தம் செய்யலாம். மேற்கண்ட பணியிடங்களுக்கான எழுத்துத் தேர்வு மே 13 ஆம் தேதி காலை முதல் தாள் தேர்வும், பிற்பகல் இரண்டாம் தாள் தேர்வு நடைபெறும். எழுத்துத் தேர்வு சென்னை, மதுரை, கோவை, திருச்சி, திருநெல்வேலி, சேலம், வேலூர் ஆகிய 7 மாவட்டங்களில் நடைபெறும். மேலும் விவரங்கள் அறிய இங்கே கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

No comments:

Post a Comment

Popular Feed