Saturday, February 25, 2023

தொடக்கப் பள்ளி ஆசிரியர்களுக்கு வெளிவந்த முக்கிய தகவல்! ஆங்கில வழி பயிற்சி!

தமிழகம் முழுவதும் உள்ள அரசு பள்ளிகளில் ஆங்கில வழி மற்றும் தமிழ் வழி கல்வி பயிற்சி வழங்கப்பட்டு வருகின்றது.

இதன் காரணமாக அண்மைக் காலமாக ஆங்கில மொழி வழியில் பயிலும் மாணவர்களின் எண்ணிக்கை பெருமளவு அதிகரித்து வருகின்றது. இதனால் ஆங்கில வழிப் பாடம் நடத்தும் ஆசிரியர்களின் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.

மேலும் இதன் காரணமாக அரசு தொடக்கப் பள்ளிகளில் ஆங்கில வழி கற்பித்தலை அதிகரிக்க பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அந்த முடிவின்படி பெங்களூருவில் உள்ள மண்டல ஆங்கில மொழி பயிற்சி நிறுவனம் மூலம் அரசு தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில வழி பயிற்சி வழங்க முடிவெடுக்கப்பட்டுள்ளது.

மேலும் இது குறித்து மாவட்ட தொடக்க கல்வி அலுவலர், தொடக்கக் கல்வி இயக்குனரகம் சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. அந்த சுற்றறிக்கையில் முதற்கட்டமாக சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர், தஞ்சாவூர், திருநெல்வேலி உட்பட 13 மாவட்டங்களை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழி பயிற்சி அளிக்க உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News