Thursday, February 16, 2023

தைராயிடு பிரச்சினைக்கு கொத்தமல்லியை கொதிக்க வச்சி குடிச்சா சிறந்த பலனைத் தரும்

பொதுவாக தைராயிடு நோய் பெண்களுக்கு அதிக பாதிப்பை உண்டாக்கும் .இதனால் ஆண்களும் பாதிக்கப்படுவது உண்டு. இருந்தாலும் பெண்களுக்கு தான் கருத்தரிப்பதில் பிரச்சினை, உடல் குண்டாவது போன்ற பிரச்சினைகளை கொடுக்கிறது .

தொண்டை பகுதியில் பட்டாம்பூச்சி போன்ற சுரப்பியில் ஏற்படும் கோளாறே தைராய்டு என்று அழைக்கப்படுகிறது .இதில் பாதிப்பு ஏற்பட்டால் உடல் சோர்வு , மன சோர்வு , உடல் எடை கூடுவது போன்ற பிரச்சினைகள் வரும். இந்த பிரச்சினை அதிகரிக்காமல் இருக்க சில உணவு கட்டுப்பாடுகளும் உண்டு .இதற்கு பல்வேறு வைத்திய முறைகள் இருந்தாலும் ஒரு மூலிகை தேநீர் நன்மை பயக்கும் ,அந்த மூலிகை தேநீர் தயாரிக்கும் முறை பற்றி பார்க்கலாம்

ஆரோக்கியமான வாழ்க்கைக்கு தைராய்டை கட்டுக்குள் வைத்திருப்பது அவசியம். சில உணவுகள் அதைக் கட்டுக்குள் வைத்திருக்க உதவும் ..

தைராய்டுக்கான ஆயுர்வேத தேநீரான மூலிகை தேநீருடன் நாளைத் தொடங்குங்கள்

மூலிகை தேநீருக்கான பொருட்கள்

1 கிளாஸ் தண்ணீர் (300 மிலி)

2 டீஸ்பூன் கொத்தமல்லி விதைகள்

3 சில கறிவேப்பிலை

4 சில உலர்ந்த ரோஜா இதழ்கள்

1.முதலில் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி கொண்டு அதை அடுப்பில் வைக்கவும்

2.அதில் கொத்தமல்லி விதைகள், கறிவேப்பிலை மற்றும் உலர்ந்த ரோஜா இதழ்களை சேர்க்கவும்.

3.பின்னர் மிதமான தீயில் இந்த கலவையை 5-7 நிமிடங்கள் கொதிக்க வைக்கவும்.

4.பின்னர் அதை அடுப்பிலிருந்து இறக்கினால் இப்போது மூலிகை தேநீர் தயாராக உள்ளது.

5.நீங்கள் காலையில் வெறும் வயிற்றில் அதை முதலில் குடிப்பது தைராய்டுக்கு சிறந்த பலனைத் தரும்

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News