Join THAMIZHKADAL WhatsApp Groups
நீட் தேர்வு கட்டாயம் என அறிவிக்கப்பட்டதற்கு எதிராக தமிழக அரசு ஏற்கனவே தாக்கல் செய்திருந்த மனு மீதான விசாரணை உச்சநீதிமன்ற நீதிபதி அஜய் ரஸ்தோஹி தலைமையிலான அமர்வில் இன்று விசாரிக்கப்பட இருந்த நிலையில் நீட் தொடர்பான மருத்துவ கவுன்சில் விதியை எதிர்த்து தொடர்ந்த ரிட் மனுவை திரும்பபெற அனுமதிக்கக்கோரி மனு தாக்கல் நேற்றைய தினம் செய்யப்பட்டது.
![](https://assets-news-bcdn.dailyhunt.in/cmd/resize/360x100_60/fetchdata16/images/11/fd/db/11fddb02e421c5b4a54a2553fd63e6cb4133fbc2c17cb2af3a717ea7bd646d8a.webp)
முன்னதாக, நீட் தேர்வு கட்டாயம் என்பது ஒரு அதிகார வரம்பு மீறலும், அரசியல் சாசனத்தின் கூட்டாட்சி தத்துவத்துக்கும் எதிரான ஒன்று என்றும் அரசியலமைப்பு பிரிவு வழங்கியுள்ள அடிப்படை உரிமையான சமத்துவத்திற்கு எதிரானது என வலியுறுத்தி, நீட் தேர்விலிருந்து விலக்கு அளிக்கக்கோரி உச்சநீதிமன்றத்தில் தமிழக அரசு கடந்த சனிக்கிழமை புதிய மனுவை தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது
இந்நிலையில், இந்த வழக்கு நீதிபதி அஜய் ரஸ்தோஹி தலைமைநிலான அமர்வில் விசாரணைக்கு வந்த போது ரிக் மனுவை திரும்பப் பெறுவதற்கான தனிமனுவை தாக்கல் செய்திருப்பதாக தமிழ்நாடு அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது இதனை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.
No comments:
Post a Comment