Sunday, February 26, 2023

கண்களை கவனிப்போம்!. கண் நரம்புகள் பலம் பெற இந்த உணவுகளை சாப்பிடுங்கள்!.

நமது உடலில் கண் மிகவும் முக்கியமான உறுப்பாக கருதப்படுகிறது. கண்பார்வை இல்லாமல் வாழ்வது என்பது சாத்தியமற்ற செயல். இப்படிப்பட்ட கண் பார்வையை சிறப்பாக செயல்பட வைப்பதும், பார்வை இழக்க செய்வதும் கண்ணில் உள்ள நரம்புகளின் செயல்பாட்டில் தான் உள்ளது. அதனால், கண் நரம்புகள் பலம் பெற்று கண்பார்வை சிறப்பாக இருக்க நாம் சாப்பிடவேண்டிய உணவுகள் என்னவென்று இந்த தொகுப்பில் பார்க்கலாம். அந்தவகையில் தினமும் நாம் உணவு சாப்பிடுவது நமது உடலுக்கு எவ்வளவு முக்கியமோ, அதே அளவிற்கு சரியான அளவில் தண்ணீர் குடிப்பதும் முக்கியம். ஏனெனில் தினமும் சரியான அளவில் தண்ணீர் குடிப்பதன் மூலம் கண்களுக்கு தேவையான திரவம் கிடைத்து கண் நரம்புகள் ஆரோக்கியமாக வைத்திருக்க உதவுகிறது.

கேரட்டில் காணப்படும் வைட்டமின் ஏ மற்றும் பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் கண்ணிற்கு மிகவும் அவசியமானதாக உள்ளது. இத்தகைய வைட்டமின் ஏ சத்தானது நமது கண்ணில் ரோடாப்சின் என்ற புரதத்தை சுரக்க செய்து கண் பார்வையை சிறப்பாக உதவுகிறது. கணினியை அதிக நேரம் பயன்படுத்துவதால், நமது கண் வறட்சியுடன் காணப்படும். எனவே இதனை சரிசெய்ய ஒமேகா 3 அமிலம் நிறைந்த மீன் வகைகளை சேர்த்துக்கொள்வது கண்ணிற்கும் கண் நரம்பிற்கும் மிகவும் நன்மை பயக்கும்.அதன்படி, கானாங்கொளுத்தி, மத்தி, நெத்திலில், சூரை, சால்மன் போன்ற மீன் வகைகளில் ஒமேகா 3 அமிலங்கள் அதிகளவில் நிறைந்துள்ளன. இதேபோல், உலர்திராட்சை, முந்தரி, வால்நெட், பாதாம் உள்ளிட்டவைகளில் வைட்டமின் ஈ மற்றும் ஒமேகா 3 அமிலங்கள் உள்ளன.

வைட்டமின் ஏ சத்து நிறைந்துள்ள சக்கரவல்லி கிழங்கை குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடுவதால், கண் நரம்புகள் பலம் பெறும். மேலும் தினந்தோறும் வைட்டமின் சி நிறைந்த உணவு 500 கிராம், வைட்டமின் ஈ நிறைந்த உணவு 400 கிராம், ஜிங்க் ஆக்ஸைடு 80 மில்லி கிராம், காப்பர் ஆக்ஸைடு 2 மில்லி கிராம், இரும்பு சத்து நிறைந்த உணவுகளை 2 மில்லி கிராம் அளவில் எடுத்துவந்தால், கண் நோய் எதுவும் வராமல் தடுத்து ஆரோக்கியமாக வாழலாம்.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News