JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
சிவகங்கை மாவட்டத்தில் உள்ள தொடக்க, நடு, உயர்நிலைப்பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்குமூன்றாம் இடைப்பருவ தேர்வு அறிவிப்பால்ஆசிரியர்கள் புலம்பி தவிக்கின்றனர்.
மாவட்டத்தில் உள்ள அரசு, உதவி பெறும் தொடக்க, நடு, உயர்நிலை பள்ளிகளில் படிக்கும் 6 முதல் 9ம் வகுப்பு மாணவர்களுக்கு கல்வி ஆண்டு இறுதி கால கட்டத்தில் மூன்றாம் இடைப்பருவ தேர்வு நடத்தப்படும். இதற்காக மாவட்ட கல்வி அலுவலகம் மூலம் முன்கூட்டியே தேர்வுக்கான தேதி பட்டியலை அனுப்பி விடுவர்.
ஆனால், நேற்றுமுன்தினம் மாலை 4:30 மணிக்கு பள்ளி முடிந்த பின், அந்தந்த வட்டார கல்வி அலுவலர்கள் மூலம் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு மூன்றாம் இடைப்பருவ தேர்விற்கான பட்டியலை அனுப்பியுள்ளனர்.அதுவும் பிப்., 27 திங்கள் அன்று நடத்த வேண்டிய தேர்வு கால அட்டவணையை பிப்., 24 அன்று மாலை பள்ளிகளுக்கு வழங்கியுள்ளனர். சனி, ஞாயிறு இரண்டு நாள் பள்ளி விடுமுறையாக இருப்பதால், எப்படி மாணவர்களுக்கு திங்களன்று இடைப்பருவ தேர்வு இருக்கிறது என சொல்ல முடியும் என ஆசிரியர்கள் புலம்பி தவிக்கின்றனர்.
மாவட்ட கல்வி அலுவலர்கள், தேர்வு கால அட்டவணையை முன்கூட்டியே பள்ளிகளுக்கு வழங்கினால் தான், மாணவர்களை தேர்வுக்கு தயார் படுத்த முடியும். கல்வி அதிகாரிகளுக்கு பயிற்சி தேவை: தொடர்ந்து சிவகங்கை மாவட்ட கல்வித்துறை இது போன்று நிர்வாக ரீதியான அறிவிப்பில் சிக்கலான போக்கில் தான் செயல்படுகிறது.
சிவகங்கை கலெக்டர்மதுசூதன்ரெட்டி, முதன்மை கல்வி அலுவலர் ஆர்.சுவாமிநாதன் ஆகியோர் தலைமையில்நடக்கும் மாதாந்திர கூட்டத்தில் கல்வித்துறை அதிகாரிகளுக்கு நிர்வாக, நேர மேலாண்மை குறித்து சிறப்பு பயிற்சி எடுத்தால் தான், பள்ளி நிர்வாகத்தை திறம்பட செயல்படுத்த முடியும் என ஆசிரியர்கள் தெரிவிக்கின்றனர்.
No comments:
Post a Comment