Wednesday, February 15, 2023

பொதுத்தேர்வுப் பணி ஆசிரியர்கள் 'வாட்ஸ்ஆப்' பயன்படுத்தத் தடை!

தமிழகத்தில் பொதுத்தேர்வுப் பணிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 'வாட்ஸ்ஆப்' பயன்படுத்த அரசுத் தேர்வுகள் இயக்ககம் தடை விதித்துள்ளது. அரசுத் தேர்வுகள் இயக்ககம் பள்ளிகளுக்கு வழிகாட்டு நெறிமுறைகளை அனுப்பியுள்ளது. அதில் தெரிவித்திருப்பதாவது: * சமூக வலைதளங்களான முகநூல், இன்ஸ்டாகிராம், ட்விட்டர் போன்றவற்றை தேர்வு மையங்களில் பயன்படுத்தக் கூடாது. செல்போனை தேர்வு மைய கட்டுப்பாட்டு அறையில் வைக்க வேண்டும்.

தேர்வு அறைக்குள் எடுத்துச் செல்லக் கூடாது. தேர்வு மையத்தில் வாட்ஸ்ஆப்' மூலம் எந்த வித தகவல்களையும் பகிரக் கூடாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. தமிழக பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2, பத்தாம் வகுப்புகளுக்கு பொதுத் தேர்வுகள் வரும் மாா்ச் 13 முதல் ஏப்ரல் 20-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. இந்தத் தேர்வை மொத்தம் 25 லட்சத்து 77,332 மாணவா்கள் எழுதவுள்ளனா்.

இதையும் படிக்க: தமிழகத்தில் 40 இடங்களில் நடைபெற்று வந்த என்ஐஏ சோதனை நிறைவு! இதில் பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புக்கான செய்முறைத் தேர்வு இந்த மாதம் நடைபெற உள்ளது. இதற்கான தேர்வு மையங்கள் கண்டறிதல், பெயா்ப் பட்டியல், தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு தயாரிப்பு உள்ளிட்ட பல்வேறு முன்னேற்பாட்டுப் பணிகளை தேர்வுத் துறை தற்போது தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News