நில அளவர், வரைவாளர், மருத்துவ தொழில் ஆலோசகர், குடிசை பகுதி மாற்று வாரிய சமூக மேம்பாட்டு சமூக அலுவலர் பதவிக்கு நடத்தப்பட்ட தேர்வுக்கான மதிப்பெண், தரவரிசை பட்டியலை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டுள்ளது. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) நில அளவை பதிவேடுகள் சார்நிலை பணியில் அடங்கிய நில அளவர், வரைவாளர் மற்றும் தமிழ்நாடு நகர் ஊரமைப்பு சார்நிலை பணியில் அடங்கிய அளவர், உதவி வரைவாளர் பதவியில் காலியாக உள்ள 1,338 பணியிடங்களுக்கு கடந்த 6.11.2022 அன்று எழுத்து தேர்வு நடந்தது. இத்தேர்வில் 29,882 பேர் கலந்துகொண்டனர்.
இதில் பங்கேற்று விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண்கள், இடஒதுக்கீடு விதி மற்றும் அப்பதவிக்கான அறிவிக்கையில் வெளியிடப்பட்ட பிற விதிகளின் அடிப்படையில் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை தேர்வாணைய வலைதளம் www.tnpsc.gov.inல் வெளியிடப்பட்டுள்ளது. மொத்தம் 27,827 பேர் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இதேபோல, தமிழ்நாடு மருத்துவ சார்நிலை பணிகளில் அடங்கிய தொழில் ஆலோசகர் (மருத்துவ கல்வித்துறை) மற்றும் தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய சமூக மேம்பாட்டு பணியில் அடங்கிய சமூக அலுவலர் (தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம்) பதவியில் காலியாக உள்ள 16 இடங்களுக்கு கடந்த 12.11.22 அன்று எழுத்து தேர்வு நடந்தது. இத்தேர்வில் 350 பேர் பங்கேற்றனர். இதில் 310 பேரின் மதிப்பெண்கள் மற்றும் தரவரிசை பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. இத்தகவலை டிஎன்பிஎஸ்சி ெதரிவித்துள்ளது.
6 - 12TH STD HALF YEARLY EXAM QUESTION PAPERS
Saturday, February 18, 2023
TNPSC தேர்வுக்கான மதிப்பெண், தரவரிசை பட்டியல் இணையத்தில் வெளியீடு
Tags
பொதுச் செய்திகள்
பொதுச் செய்திகள்
Tags
பொதுச் செய்திகள்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment