Wednesday, March 22, 2023

குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிப்பு: டிஎன்பிஎஸ்சி அதிகாரப்பூர்வ அறிவிப்பு

குரூப் 4 பணியிடங்கள் 7,381லிருந்து 10,117ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த,திருத்தப்பட்ட அறிவிக்கையை அதிகரிப்பை (Group - 4 notification ADDENDUM) இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.
திருத்தப்பட்ட அறிவிப்பின் படி, கிராம நிர்வாக அலுவலர் பணியிண்டங்கள் 274-ல் இருந்து 425 ஆகவும், இளநிலை உதவியாளர் பணியிடங்கள் 3593-ல் இருந்து 4,952 ஆகவும், தட்டச்சர் காலியிடங்கள் எண்ணிக்கை 2,108-ல் இருந்து 3311 ஆகவும் அதிகரிக்கப்பட்டுள்ளன.

முன்னதாக, டிஎன்பிஎஸ்சி வெளியிட்ட ஆள்சேர்க்கை அறிவிப்பில் 7,301 காலிப்பணியிடங்கள் நிரப்பப்படும் என்று அறிவித்தது. இருப்பினும், நியமனம் செய்யப்பட வேண்டிய குரூப் 4 பணியிடங்களின் எண்ணிக்கையை 9,801 ஆக உயர்த்த டிஎன்பிஎஸ்சி திட்டமிட்டு வருவதாக கடந்த ஜனவரி மாதம் செய்திகள் கசிந்தன.

இந்நிலையில், குரூப் 4 காலியிடங்களை 10,117ஆக டிஎன்பிஎஸ்சி அதிகரித்துள்ளது.

திருத்தியமைக்கப்பட்ட காளியிடங்கள் விவரம்:

பதவிமுந்தைய காலியிடங்கள்திருத்தியமைக்கப்பட்ட காலியிடங்கள்
கிராம நிர்வாக அலுவலர் (Village Administrative Officer)274425


இளநிலை உதவியாளர் (பிணையமற்றது)

Junior Assistant (Non - Security)
3590 + 3 C/F4952


இளநிலை உதவியாளர் (பிணையம் )

Junior Assistant ( Security)
8888
வரித் தண்டலர்5050
தட்டச்சர் (Typist)
2069*+
39 C/F
3311
சுருக்கெழுத்தர் தட்டச்சர் (Steno Typist)885*+139 C/F1176
பண்டக காப்பாளர் (Store keeper)11


இதுதவிர, நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம், வீட்டு வசதி வாரியம் போன்ற பல்வேறு துறைகளில் கீழ் அறிவிக்கப்பட்ட 163 காலியிடங்கள் எண்ணிக்கை 252 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.

காலியிடங்கள் எண்ணிக்கை தற்போது அதிகரிக்கப்பட்டுள்ளதாக, தேர்வின் கட் ஆஃப் மதிப்பெண்கள் கணிசமாக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News