ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர்.
போராட்டம் நடத்தினால், அல்லது வேலைக்கு வராமல் இருந்தால் அவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும். இது குறித்து ஊரக வளர்ச்சி துறை இயக்குனர் அரசு அலுவலகங்களுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
சட்ட சபையில் ஊரக வளர்ச்சி துறை மானியக் கோரிக்கை எடுத்துக் கொள்ளப்படும் நாளாள 30-ந் தேதியன்று தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க உறுப்பினர்கள் அனைவரும் கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் ஒட்டு மொத்த தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப் போவதாக அறிவிப்பு வெளியிட்டு உள்ளனர். அரசு பணியாளர் நன்னடத்தை விதியின்படி, அரசாங்கத்திற்கு எதிராக போராட்டம் ஆர்ப்பாட்டம் செய்து அலுவலகத்திற்கு வராத பணியாளர்களுக்கு அன்றைய தினம் சம்பளம் கிடைக்காது. இது தெரிந்தும் போராட்டம் நடத்தினால், அல்லது வேலைக்கு வராமல் இருந்தால் அவர்களின் ஊதியம் பிடித்தம் செய்யப்படும்.
No comments:
Post a Comment