ஆயிரக்கணக்கில் செலவு செய்தும் ஆங்கில வைத்தியத்தால் குணமாகாத பல நோய்களை செலவேயில்லாமல் பின்வரும் பாட்டி வைத்தியம் குணமாக்கும் .
1.சிலருக்கு நெஞ்சு சளி பாடாய் படுத்தியெடுக்கும் .இதற்கு தேங்காய் எண்ணையில் கற்பூரம் சேர்த்து நன்கு சுடவைத்து ஆர வைத்து நெஞ்சில் தடவ சளி பஞ்சாய் பறந்து போகும்
2.சிலருக்கு தலை வலி படுத்தியெடுக்கும் ,அவர்களுக்கு ஐந்தாறு துளசி இலைகளும் ஒரு சிறு துண்டு சுக்கு, 2 லவங்கம், சேர்த்து நன்கு அரைத்து நெற்றியில் பற்றாகப் போட்டால் தலைவலி இருந்த இடம் தெரியாமல் போகும் .
3.சிலருக்கு தீராத வயிறு வலியிருக்கும் .அவர்களுக்கு வெந்தயத்தை நெய்யில் வறுத்து பொடி செய்து மோரில் குடிக்க வயிற்று வலி மாயமாய் மறைந்து போகும் .
4.சிலருக்கு தொண்டையில் சளி சேர்ந்து கொண்டு எப்போதும் கரகரப்பாக இருக்கும் .அவர்களுக்கு சுக்கு, மிளகு, திப்பிலி, ஏலைக்காய் இவற்றை பொடியாக்கி தேனுடன் கலந்து காலை மற்றும் மாலை சாப்பிட தொண்டை கரகரப்பு இல்லாமல் போகும் .
5.சிலருக்கு எப்போதும் சீதபேதி இருக்கும் ,அவர்களுக்கு மலை வாழைப்பழத்தை நல்லெண்ணையில் சேர்த்துச் சாப்பிட சீதபேதி பட்டுன்னு போகும்
6.சிலருக்கு இரவில் வண்டு கடித்து தண்டிப்பாய் வீங்கும் ,இவர்கள் வெட்பாலை இலை, கொடி, வேர் முதலிய சமூலம் அரைத்த விழுது எலுமிச்சங்காயளவு எடுத்து ½ படி பசுவின் பாலில் கலந்து சாப்பிடவும். 3 நாள் காலையில் சாப்பிடக் கரப்பான், வண்டுக்கடி இருந்த இடம் தெரியாமல் போகும்
No comments:
Post a Comment