Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Wednesday, March 1, 2023

டீ பிரியர்களே.. மறந்து கூட இந்த உணவுப் பொருட்களை டீயுடன் சேர்த்து சாப்பிடாதீங்க.!

நம்மில் பலருக்கு டீ இல்லை என்றால், அன்றைய நாளை கடப்பது கடினம். அதுவும் நீங்கள் டீ பிரியராக இருந்தால், கப் சூடான டீ இல்லாத நாளை உங்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது.
ஏனென்றால், டீ நமது வாழ்க்கையில் அவ்வளவு முக்கியத்தும் பிடித்துள்ளது. வேலைப்பளுவும் நடுவில், சூடான ஒரு கப் டீ கோப்பையை விட ஆறுதல் எதுவும் இல்லை.

உலகில் மிகவும் விரும்பப்படும் பானங்களில் டீ ஒன்றாகும். அது, ப்ளாக் டீ, பால் கலந்த டீ, தந்தூரி டீ, மசாலா டீ என கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட டீக்கள் உலகம் முழுவதும் உள்ளது. அதும், சுவையான தின்பண்டங்களுடன் ஒரு கப் சூடான தேநீர் இருந்தால் அன்றைய நாளை விட சிறப்பான நாள் இருக்கவே முடியாது.தேநீர் பல ஆரோக்கிய நன்மைகள் உள்ளது. வெள்ளை தேயிலையில் பாக்டீரியா எதிர்ப்பு பண்புகள் நிறைந்துள்ளது மற்றும் கொலஸ்ட்ரால், இரத்த அழுத்தத்தை குறைப்பதில் சிறப்பாக செயல்படுகிறது. தேயிலை பிரியர்கள் பெரும்பாலும் தங்கள் தேநீரை சிற்றுண்டி அல்லது உணவுகளுடன் சேர்த்து குடிப்பார்கள். ஆனால், அது பக்க விளைவுகளையும் ஏற்படுத்தும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. டீயுடன் ஒரு போதும் சேர்த்து சாப்பிடக்கூடாத உணவுகளை பற்றி காணலாம்:

கடலை மாவு:

இந்திய வீடுகளில் வீட்டிற்கு வரும் விருந்தினர்களுக்கு ஸ்நாக்ஸுடன் சேர்த்து தேநீர் வழங்குவது வழக்கம். தின்பண்டங்கள் பொதுவாக கடலை மாவு அல்லது மைதா மாவு மூலம் தயாரிக்கப்படுகின்றன. டீயுடன் பச்சரிசி மாவால் செய்யப்படும் பக்கோடா அல்லது மிக்சர் சாப்பிடுவது உங்கள் ஆரோக்கியத்திற்கு நல்ல அல்ல. இது செரிமான பிரச்சனைகளுக்கு வழிவகுக்கும். மேலும், இது மலச்சிக்கல் மற்றும் செரிமான பிரச்சனையை ஏற்படுத்தும்.

பச்சை காய்கறிகள்:

சில உணவுகளை ஒன்றாக இணைப்பது அவை வழக்கமாக வழங்கும் ஊட்டச்சத்திற்கு தீங்கு விளைவிக்கும். அந்தவகையில், தேநீரில் டானின்கள் மற்றும் ஆக்சலேட்டுகள் எனப்படும் சேர்மங்கள் உள்ளன. கீரை அல்லது பச்சை காய்கறிகளில் அயர்ன் சத்து உள்ளது. எனவே, டீயுடன் சேர்த்து இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை தவிர்ப்பது நல்லது.எலுமிச்சை:

பலர் லெமன் டீயை விரும்புகிறார்கள், ஆனால் தேயிலை இலைகளை எலுமிச்சையுடன் சேர்த்தால் அது அமிலமாக மாறும் என்பது உங்களுக்குத் தெரியுமா?. இரண்டையும் தனித்தனியாக உட்கொள்ளும்போது நல்ல பலன்களை பெறலாம். இவற்றை ஒன்றாக உட்கொள்ளும் போது,வயிற்று உப்புசத்தையும் ஏற்படுத்தும். லெமன் டீயை காலையில் வெறும் வயிற்றில் உட்கொண்டால் ஆசிட் ரிஃப்ளக்ஸ் மற்றும் நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சனைகளும் ஏற்படலாம்.

மஞ்சள்:

மஞ்சள் அதிகமுள்ள உணவுகளுடன் தேநீர் அருந்துவதைத் தவிர்க்கவும். தேநீர் மற்றும் மஞ்சளில் உள்ள வேதியியல் கூறுகள் செரிமான அமைப்பை பாதிக்கலாம். இது ஆசிட் ரிஃப்ளக்ஸை உருவாக்கும் என கூறப்படுகிறது. இவை அசிடிட்டி மற்றும் செரிமானப் பிரச்சனைகள் ஏற்படலாம்.

நட்ஸ்:

இரும்புச்சத்து நிறைந்த உணவுகளை பாலுடன் சாப்பிடுவது நல்லதல்ல. தேநீருடன் உளர் பழங்களை சாப்பிடுவது ஆரோக்கியத்தில் ஆபத்தான விளைவுகளை ஏற்படுத்தும். தேநீரில் உள்ள டானின் என்ற சேர்மம், பருப்புகளுடன் உட்கொள்ளும்போது ஊட்டச்சத்துக்களை உறிஞ்சுவதைத் தடுக்கும்.

ஐஸ்கிரீம்:

ஐஸ்கிரீம் குளிர்ச்சியாகவும், டீ சூடாகவும் இருப்பதால் செரிமான அமைப்பை பலவீனப்படுத்துகிறது. எனவே, இவற்றை ஒரே நேரத்தில் சாப்பிடுவதை தவிர்ப்பது நல்லது. அதே போல, தயிருடன் டீ அருந்துவதும் நல்லதல்ல.

மீன் பொரியல்:

சில சமயங்களில் நாம் பொரித்த மீனுடன், சூடான இஞ்சி டீ அல்லது சாதாரண டீயை சாப்பிடுவோம். அப்படி சாப்பிடுவது ஆரோக்கியத்திற்கு சிறந்தது அல்ல என கூறப்படுகிறது.

No comments:

Post a Comment