Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 9, 2023

அரசு மாதிரி பள்ளிகளில் கட்டாயமாக நுழைவுத் தேர்வு கிடையாது: அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேட்டி

அப்போது தேர்வு முடிந்ததும் இங்க் அடித்து விளையாடுவோம், இப்போது மாணவர்கள் மேசை உடைத்து விளையாடுகிறார்கள். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில் பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். 8ம் வகுப்பு வரையில் மாணவர்களின் கல்வி நிலை குறித்து சர்வே எடுக்க சொல்லியிருப்பதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். தருமபுரி மாவட்டம் பாலக்காடு அருகே, மாமல்லபுரம் அரசு பள்ளியில் மேசை நாற்காலிகளை உடைத்து ஐந்து மாணவ மாணவிகள் அட்டகாசம் செய்துள்ளனர்.

மேசை மற்றும் நாற்காலிகளை உடைத்த 5 மாணவ மாணவிகள் ஐந்து நாட்களுக்கு சஸ்பெண்ட் செய்யப்படுவதாக மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் குணசேகரன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில், இதுகுறித்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் அன்பில் மகேஷ், அப்போது தேர்வு முடிந்தது இங்க் அடித்து விளையாடுவோம். இப்போது மாணவர்கள் மேசை உடைத்து விளையாடுகின்றனர். மாணவர்களின் எதிர்காலம் பாதிக்காத வகையில், பெற்றோரை அழைத்து அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. அரசு மாதிரி பள்ளிகளில் கட்டாயமாக நுழைவுத் தேர்வு கிடையாது. எட்டாம் வகுப்பு வரையில் மாணவர்கள் கல்வி நிலை குறித்து சர்வே எடுக்க சொல்லி இருக்கிறோம் என தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment