Saturday, March 4, 2023

விறு விறுன்னு வெயிட்டை குறைக்க வெந்தயத்தை எப்படி சாப்பிடணும் தெரியுமா ?

நம் உடலின் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை சரி செய்வதில் வெந்தயத்துக்கு நிகர் வெந்தயமேதான் .அந்தளவுக்கு இந்த வெந்தயத்தில் ஆரோக்கிய குணம் அடங்கியுள்ளது .எனவே அதன் ஆரோக்கிய நன்மைகள் பற்றி இந்த ப்பதிவில் பாக்கலாம் .

மலசிக்கல் உள்ளவர்கள் முதல் சர்க்கரை நோய் உள்ளவர் வரை காலையில் வெறும் வயிற்றில் வெந்தயத்தை சாப்பிட்டால் நல்ல முன்னேற்றம் தெரியும், மேலும் உடல் உஷ்ணத்தால் பலர் பாதிப்படைந்து பல நோய்கள் வந்து கஷ்டப்படுவர் .

அவர்களும் காலையில் கொஞ்சம் வெந்தயம் சப்ப்பிட்டு தண்ணீர் குடித்தால் நலம் பெறுவர் ,மேலும் நம் உடலில் உள்ள கெட்ட கொழுப்பை குறைத்து நம் இதயத்துக்கு வெந்தயம் நலம் சேர்க்கும் .மேலும் கிட்னி கல்லால் அவதிப்படுவோருக்கு இது பலன் தரும் .மேலும் இதன் நன்மைகளை பாக்கலாம்

1.உடல் எடையை குறைக்க விரும்புபவர்கள் காலையில் வெந்தயத்தை தண்ணீரில் ஊறவைத்து வெதுவெதுப்பாக்கி குடித்தால் சீக்கிரம் எடை குறையும் .

2.வெந்தயம் உடலின் வளர்சிதை மாற்ற விகிதத்தை அதிகரித்து, உடல் வெப்பநிலையை உயர்த்தி, உடல் எடையை குறுகிய காலத்தில் குறைக்க உதவும் .

3.பாலூட்டும் தாய்மார்களுக்கு பால் உற்பத்தியை அதிகரிக்க வெந்தயம் உதவுகிறது.

4.இதனால் பாலூட்டும் பெண்களுக்கு அதிக பால் உற்பத்தி செய்ய உதவி அவர்களின் மற்றும் குழந்தையின் ஆரோக்கியம் காக்கிறது

5.வெந்தய நீர் அல்லது தேநீர் உட்கொள்வது பால் உற்பத்தியை அதிகரித்து , பிறந்த குழந்தைகளின் எடை அதிகரிக்க உதவி ,ஆரோக்கியம் காக்கிறது

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News