மத்திய நேரடி வரிகள் வாரியம், 'மின் சரிபார்ப்பு - 2021' என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
வருமான வரித்துறை வெளியிட்ட செய்திக்குறிப்பு:
'ஆன்லைன்' வாயிலாக வருமான வரி கணக்கு தாக்கல் செய்வோர், தெரிவிக்காத, குறைத்து காண்பித்த நிதி பரிவர்த்தனை விபரங்களை, அவர்களுக்கு பகிர்வதும், சரி பார்ப்பதுமே இந்த திட்டத்தின் நோக்கம்.
வருவாய் ஆதாரங்களில் ஏதேனும் தவறான தகவல்கள் இருந்தால், ஆண்டு அறிக்கையில், அதை ஆட்சேபிக்கும், மறுக்கும் வசதி, வரி செலுத்துவோருக்கு வழங்கப்பட்டு உள்ளது.
நிதி பரிவர்த்தனையை ஆதாரத்துடன் விளக்க முடியும்; தவறான தகவல்களை திருத்தலாம்; தவறான தகவல்கள் வாயிலாக எடுக்கப்படும் நடவடிக்கை கைவிடப்படும் என்பதால், இந்த திட்டம் வரி செலுத்துவோருக்கு மிகவும் பயனுள்ளதாக அமையும்.
No comments:
Post a Comment