Join THAMIZHKADAL WhatsApp Group
Join THAMIZHKADAL Telegram Group

Thursday, March 23, 2023

அதிக லெமன் ஜூஸ் ஆபத்தா.? ஒருநாளைக்கு எலுமிச்சை சாறு எவ்வளவு குடிக்கலாம்?

Add This Number In Your Whatsapp Groups -6379884356
எலுமிச்சை சாறைப் பிழிந்து உப்பு அல்லது சர்க்கரை கலந்துக் குடித்தால் அடிக்கும் வெயிலுக்கு அமிர்தமாய் இருக்கும்.

இந்த சுவையை தினமும் அருந்தத் தோன்றும். ஆனால் அப்படிக் குடிப்பதால் எலும்புகளுக்கு பாதிப்பு ஏற்படும் எனக் கூறப்படுகிறது. அதில் உள்ள ஆசிட் எலும்புகளை அரித்துவிடும் என்று கூறப்படுகிறது. அது உண்மையா..?

ஆராய்ந்து பார்த்ததில் எலுமிச்சை ஜூஸ் உடலுக்கு நல்லது. நிறைய ஊட்டச்சத்துகளைக் கொண்டது. இருப்பினும் மூட்டு வலி கொண்டவர்களோ அல்லது அதிகமாக எலுமிச்சை எடுத்துக்கொண்டாலோ எலும்புகளுக்கு பாதிப்பு உண்டாகும் என்று கூறப்படுகிறது.

அப்படி ஊட்டச்சத்து நிபுணர் ரூபாளி தத்தா என்.டி.டி.வி.க்கு அளித்த பேட்டியில், எலுமிச்சை உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதல்ல என இதுவரை எந்த ஆய்வுகளின் மூலமும் நிரூபிக்கப்படவில்லை. அதில் வைட்டமின் சி மற்றும் நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது என்பதால் மூட்டு வீக்கம், மூட்டு வலி இருப்போருக்கு நல்லது என நம்பப்படுகிறது.

அதேபோல் இது குறித்து பேசிய மற்றொரு ஊட்டச்சத்து நிபுணர் அஞ்சுவை, யாரேனும் நெஞ்சு எரிச்சல், ஆசிட் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருந்தால் எலுமிச்சை பரிந்துரைப்பதில்லை. மற்றபடி எலுமிச்சை ஜூஸ் குடிப்பதால் எந்த பக்கவிளைவுகளும் இல்லை என்று கூறியுள்ளார்.

அதேபோல் ஒருநாளைக்கு 2 எலுமிச்சை வரை சாப்பிடலாம். அது உடலுக்கு ஆரோக்கியம் அளிக்கக் கூடியது. விருப்பம் போல் உப்பு, சர்க்கரை இப்படி எது வேண்டுமென்றாலும் கலந்து குடிக்கலாம். குறிப்பாக எலுமிச்சை ஜூஸுடன் தேன் கலந்து குடிப்பது நுரையீரல் மற்றும் சிறுநீர் பையை சுத்திகரிக்க உதவும்.

எனவே, இதனால் அப்படி ஆகுமோ..இப்படி ஆகுமோ என்று யோசிக்காமல் கோடைக்கு அமிர்தமாய் இருந்தால் , உங்களுக்குக் குடிக்கப் பிடித்தால் தாராளமாக தினமும் ஒரு கிளாஸ் பருகி அந்த சுவையை அனுபவிக்கலாம்.

No comments:

Post a Comment

Popular Feed