Follow the THAMIZHKADAL OFFICIAL channel on WhatsApp:
Follow the THAMIZHKADAL OFFICIAL channel on Telegram










Saturday, March 25, 2023

இளைஞர்களுக்கு சூப்பர் சான்ஸ்: உங்கள் ஊரில் அரசு இ-சேவை மையம் அமைக்க வேண்டுமா? உடனே விண்ணப்பியுங்கள்

Add This Number In Your Whatsapp Groups -6379884356




படித்த இளைஞர்களை தொழில் முனைவோர்களாக மாற்றும் "அனைவருக்கும் இ-சேவை மையம்" திட்டத்தின்கீழ், இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள இளைஞர்களிடம் இருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப் படுகின்றன.

அரசின் சேவைகளை குடிமக்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்கும் விதமாக, தமிழ்நாடு மின்ஆளுமை முகமை (Tamil Nadu e-Governance Agency) இசேவை மையங்களை (e-sevai maiyam) செயல்படுத்தி வருகிறது. இதுநாள் வரையில், தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனம் (TACTV), தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கங்கள்(PACCS), தமிழ்நாடு மகளிர் நல மேம்பாட்டு நிறுவனம் (Mahalir Thittam), மீன்வளத்துறை, கிராமப்புற தொழில் முனைவோர்கள் (CSC VLEs) ஆகிய நிறுவனங்களின் மூலம் இசேவை மையங்களை அமைத்து இருந்தது.

இதனை மேம்படுத்தும் வகையில், தமிழ்நாடு மின்ஆளுமை முகமையானது "அனைவருக்கும் இசேவை மையம்" என்ற திட்டத்தை தொடங்கியுள்ளது. இந்த புதிய திட்டத்தின் நோக்கமானது, அனைத்து ஊராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் இசேவை மையங்களை ஏற்படுத்திடவும், மாவட்டங்களில் இசேவை மையங்களின் எண்ணிக்கையினை அதிகரித்து இசேவை மையங்களில் பொதுமக்கள் காத்திருக்கும் நேரத்தினை குறைத்து, மக்களுக்கு சிறந்த மற்றும் நேர்த்தியான சேவைகளை அவர்களின் இருப்பிடத்திற்கு அருகாமையிலேயே வழங்குவதாகும்.


எனவே, "அனைவருக்கும் இ-சேவை மையம்" திட்டத்தின்கீழ் இ-சேவை மையம் அமைத்து நடத்த ஆர்வமுள்ள நபர்கள் இணைய முறையில் மூலம் விண்ணப்பிக்கலாம். இத்திட்டத்தை பற்றிய கூடுதல் தகவல் பெறவும், ஆன்லைனில் விண்ணப்பிக்கவும் https://tnega.tn.gov.in/home, www.tnesevai.tn.gov.in என்ற இணையதள முகவரிகளை பயன்படுத்தவும்.

விண்ணப்பங்களை, வரும் ஏப்ரல் 14ம் தேதி வரை இரவு 8 மணி வரை மட்டுமே பதிவுசெய்ய இயலும். விண்ணப்பதாரர்க்குரிய பயனர்பெயர்(Username) மற்றும் கடவுச்சொல் (Password) ஆனது விண்ணப்பத்தில் கொடுக்கப்பட்ட தொலைபேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரி வாயிலாக வழங்கப்படும் என்று தெரிவிக்கப்படுகிறது.





No comments:

Post a Comment

Popular Feed