JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

கொளுத்தும் வெயில் உடல் சூட்டையும் கிளப்பி விடும். இதனால் உடல் உபாதைகளையும் சந்திக்க நேரிடும்.
அன்றாட வேலைகளை செய்வதிலும் சிரமம் உண்டாகும். எனவேதான் வெயில் காலத்தில் நம்மை எப்போது நீரேற்றத்துடனும், உடலை குளுர்ச்சியுடனும் வைத்துக்கொள்ள வேண்டும். அந்த வகையில் ஏலக்காய் பொடி பயன்படுத்தி செய்யக் கூடிய சர்பத் பானம் வெயிலை சமாளிக்க சிறந்ததாக இருக்கும்.
ஏலக்காய் கோடைக்கால செரிமானக்கோளாறு, வயிற்று உபாதைகள், கல்லீரல் பாதிப்பு மற்றும் பாக்டீரியா தொற்று போன்ற பிரச்சனைகளை தவிர்க்கவும் உதவுகிறது. சரி ஏலக்காய் சர்பத் எப்படி போடுவது என்று பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
ஏலக்காய் தூள் - 1 tsp
எலுமிச்சை சாறு - 2 tsp
சர்பத் - 2 ஸ்பூன்
உப்பு - 1/2 tbsp
எலுமிச்சை தோல் துண்டு - 2
சர்க்கரை - தே.அ
ஐஸ் கட்டிகள் - 5 7 தேவைக்கு ஏற்ப
தண்ணீர் - 4 கப்

செய்முறை :
ஒரு கிண்ணத்துல் 4 கப் தண்ணீர் சேர்த்து அதில் எலுமிச்சை சாறு, சர்க்கரை , உப்பு சேர்த்து நன்கு கலக்கிக்கொள்ளுங்கள்.
பின் ஏலக்காய் பொடி , சர்பத் சேர்த்து கலந்துவிடுங்கள்.
இப்போது பரிமாறவிருக்கும் கிளாஸில் 2 துண்டு எலுமிச்சை சேர்த்து அதில் சில ஐஸ் கட்டிகளையும் சேர்த்து கலந்து வைத்துள்ள பானத்தை ஊற்றுங்கள்.
தேவைபட்டால் அதன் மேல் புதினா இலைகளை நறுக்கி தூவலாம்.
அவ்வளவுதான் உங்கள் தாகத்தை தணிக்கும் பானம் ரெடி.
No comments:
Post a Comment