Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Thursday, March 16, 2023

உண்டு உறைவிட திறன்‌ மேம்பாட்டு பயிற்சியில் கலந்துகொள்ள அனைத்து மாவட்ட ஆசிரியர்களுக்கும் SCERT அழைப்பு

மாநில கல்வியியல்‌ ஆராய்ச்சி மற்றும்‌ பயிற்சி நிறுவனத்தின்‌ மூலம்‌ அனைத்து மாவட்டங்களிலும்‌ பணிபுரியும்‌ பட்டதாரி ஆசிரியர்களுக்கு புதுமையான கற்பித்தல்‌ முறைகள்‌, சிறந்த மதிப்பீட்டு நுட்பங்கள்‌ மற்றும்‌ கற்பித்தலில்‌ மாணவர்களை ஈடுபடுத்துவதற்கான உத்திகள்‌ உள்ளிட்ட பாட தொடர்பான பல்வேறு தலைப்புகளில்‌ பல்வேறு கட்டங்களில்‌ பயிற்சி நடத்திட திட்டமிடப்பட்டுள்ளது.

பாடக்கருத்துகளில்‌ விரிவுரைகள்‌, அறிவியல்‌ சோதனைகள்‌, செயல்பாடுகள்‌, பயிற்சி பட்டறைகள்‌, களப்பயணங்கள்‌ மற்றும்‌ குழு விவாதங்கள்‌ ஆகியவற்றின்‌ மூலம்‌, ஆழமாக சிந்தித்து செயல்படவும்‌, பாடத்தை ஆசிரியர்கள்‌ திறம்பட கற்பிக்க உதவும்‌ வகையிலும்‌, மாணவர்கள்‌ எளிதாக புரிந்துகொள்ளும்‌ வகையிலும்‌, இந்த பயிற்சி பயனுள்ளதாக அமைய வேண்டியும்‌, சிறந்த கல்வி நிறுவனங்களில்‌ பணிபுரியும்‌ திறமை வாய்ந்த மற்றும்‌ அனுபவம்‌ வாய்ந்த கருத்தாளர்களிடமிருந்து கற்றுக்‌ கொள்ளவும்‌, மாநிலத்தின்‌ அனைத்து பகுதிகளில்‌ உள்ள பட்டதாரி ஆசிரியர்‌ தன்னார்வலர்களிடமிருந்து கருத்துக்களை பெற்றிடலாமா என்பதற்கும்‌, மேற்படி கற்றல்‌-கற்பித்தல்‌ பணிகளை ஏப்ரல்‌-2023 முதல்‌ தொடர்ச்சியாக இந்நிறுவனத்தின்‌ உண்டு உறைவிட திறன் மேம்பாட்டு பயிற்சியாக நடத்திடலாமா என்பதற்கும்‌, ஆணை வேண்டப்படுகிறது.

எனவே, அனைத்து மாவட்டங்களில்‌ உள்ள பள்ளிகளில்‌ பணிபுரியும்‌, ஆர்வமுள்ள பட்டதாரி பாட ஆசிரியர்களை இணைப்பில்‌. கொடுக்கப்பட்டுள்ள லிங்கை கிளிக் செய்து, பதிவு செய்யுமாறு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக்‌ கல்வி அலுவலர்களுக்கும்‌ மற்றும்‌ அனைத்து மாவட்ட ஆசிரியர்‌ கல்வி மற்றும்‌ பயிற்சி நிறுவன முதல்வர்களுக்கும்‌ அறிவுறுத்தப்படுகிறது.

No comments:

Post a Comment