JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்காதவர்கள் இன்று முதல் ஏப்.13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று தேசிய தேர்வுகள் முகமை அறிவித்துள்ளது.நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவ கல்லூரிகளில் எம்பிபிஎஸ், பிடிஎஸ், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி மற்றும் கால்நடை மருத்துவ படிப்பின் அகில இந்திய ஒதுக்கீடு இடங்களுக்கு தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு மூலம் மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
நீட் தேர்வை தேசிய தேர்வு முகமை ஆணையம் நடத்தி வருகிறது. இந்தியா மட்டுமின்றி வெளிநாடுகளிலும் என மொத்தம் 499 நகரங்களில் நீட் தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
அதன்படி 2023-2024ம் கல்வியாண்டின் மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு தமிழ், ஆங்கிலம், இந்தி உட்பட 13 மொழிகளில் மே 7ம் தேதி நடைபெற உள்ளது. இந்த தேர்வுக்கான இணையதள விண்ணப்பப் பதிவு கடந்த மார்ச் 6ம் தேதி தொடங்கிய நிலையில், விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் ஏப்ரல் 6ம் தேதியுடன் நிறைவடைந்தது. இந்நிலையில், விண்ணப்பிக்க தவறிய மாணவர்கள் தங்களுக்கு மீண்டும் வாய்ப்பு வழங்குமாறு தேசிய தேர்வு முகமைக்கு கோரிக்கை விடுத்தனர். மாணவர்கள், பெற்றோரின் கோரிக்கையை ஏற்று நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்கும் அவகாசம் ஏப்ரல் 13 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
இதுவரை விண்ணப்பிக்காத மாணவர்கள் neet.nta.nic.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பித்துக் கொள்ளலாம் என்றும் கூடுதல் தகவல்களுக்கு nta.nic.in என்ற இணைய தளத்தில் அறிந்துக் கொள்ளலாம் என்றும் தேசிய தேர்வுகள் முகமை தெரிவித்துள்ளது.
No comments:
Post a Comment