JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

உத்தர பிரதேச மாநிலம் வாரணாசியில், பிறந்து 14 நாட்களே ஆன பச்சிளம் குழந்தையில் வயிற்றில் இருந்து 3 கருக்கள் அறுவை சிகிச்சை மூலம் நீக்கப்பட்டுள்ளது.
வாரணாசியில் உள்ள சர் சுந்தர்லால் மருத்துவமனையில், 14 நாட்களே ஆன குழந்தை உடல்நலக் குறைவால் அனுமதிக்கப்பட்டது. பிறந்த போது 3.3 கிலோ எடையுடன் பிறந்த அந்த குழந்தைக்குச் சுவாச கோளாறு ஏற்பட்டுள்ளது. தொடர்ந்து, குழந்தையின் உடலும் வீக்கமாக இருந்துள்ளது.
இதனால் , மருத்துவர்கள் குழந்தைக்கு சிடி ஸ்கேன் எடுத்துப் பார்த்துள்ளனர். அதில், குழந்தையில் வயிற்றில் மூன்று கருக்கள் கண்டறியப்பட்டது. அதனைத் தொடர்ந்து, மருத்துவக் குழு, குழந்தையின் வயிற்றில் உள்ள கருவை அறுவைச் சிகிச்சை மூலம் அகற்ற முடிவு செய்தனர்.
3 நாட்கள் வரை நடைபெற்ற சிகிச்சையில் குழந்தையின் வயிற்றில் இருந்து 3 கருக்கள் வெற்றிகரமாக அகற்றப்பட்டன. இது குறித்து மருத்துவர்கள் தெரிவிக்கையில், இது போன்ற குறைபாடுகள் 5 லட்சத்தில் 1 குழந்தைக்கு ஏற்படவாய்புள்ளதாக கூறியுள்ளனர். குழந்தை உருவாகும் போது, தாயின் வயிற்றில் இருக்கும் இதர கரு குழந்தையின் வயிற்றில் சென்று இருப்பதினால் இது போன்ற குறைபாடுகள் ஏற்படுவதாகத் தெரிவித்துள்ளனர்.
அறுவை சிகிச்சைக்கு பின்னர் குழந்தையின் எடை சுமார் 1.5 கிலோ குறைந்து 2.8 கிலோவாக உள்ளது. அறுவை சிகிச்சைக்கான முழு செலவையும் மருத்துவமனையே ஏற்றுக்கொண்டுள்ளது. மேலும் குழந்தை நலமாக இருப்பதாகவும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். 14 நாட்களே ஆன குழந்தையின் வயிற்றில் உள்ள கருக்களை வெற்றிகரமாக நீக்கிய மருத்துவக் குழுவிற்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.
No comments:
Post a Comment