Join THAMIZHKADAL WhatsApp Group

Join THAMIZHKADAL Telegram Group

Thursday, April 27, 2023

பி.டெக் நுழைவு தேர்வு முடிவு வெளியீடு: ஜூன் 14-ம் தேதி வரை கலந்தாய்வு


வேலூர் விஐடி பல்கலைக்கழகத்தில் பி.டெக் பொறியியல் படிப்புக்கான நுழைவுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன.

121 மையங்களில் கடந்த 17 முதல் 23-ம் தேதி வரை நடந்த இந்த தேர்வின் முடிவு www.vit.ac.in இணையதளத்தில் நேற்று வெளியானது.

இதில், ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த குஷாப்ரா பசிஷ்தி, மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்த ப்ரக்ஷல் ஸ்ரீனிவாஸ் செளத்ரி, மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்த மஹின் பிரமோத் தோகே, கேரளாவைச் சேர்ந்த ஆஷிக் ஸ்டென்னி, பிஹாரைச் சேர்ந்த அன்கித் குமார், ஆந்திராவைச் சேர்ந்த நந்யாலா பிரின்ஸ் பிரானம் ரெட்டி, பிஹாரைச் சேர்ந்த முஹ்மத் உமர் பைசல், மகாராஷ்ட்டிராவைச் சேர்ந்த அன்சுல் சந்தீப் நப்பேத், ஹரியாணாவைச் சேர்ந்த ரிஷித் குப்தா, உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த தன்மய் பாகேல் ஆகியோர் முதல் 10 இடங்களை பிடித்துள்ளனர்.

மாணவர் சேர்க்கை கலந்தாய்வு நேற்று தொடங்கி ஜூன் 14-ம் தேதி வரை நடைபெறும். தரவரிசையில் 1 லட்சம் வரை இடம் பிடித்தவர்களுக்கு வேலூர், சென்னை, ஆந்திரபிரதேசம், போபால் வளாகங்களில் படிக்க வாய்ப்பு கிடைக்கும். தரவரிசையில் 1 லட்சத்துக்கு மேல் எடுத்தவர்களுக்கு ஆந்திரபிரதேசம், போபால் வளாகங்களில் மட்டும் சேர்க்கை கிடைக்கும்.

முதற் கட்ட கலந்தாய்வு தரவரிசையில் 20 ஆயிரம் வரை இடம் பெற்றவர்களுக்கு வரும் 30-ம் தேதி வரை நடக்கும். 2-ம் கட்ட கலந்தாய்வு தரவரிசையில் 20,001 முதல் 45,000 வரை உள்ளவர்களுக்கு மே 9 முதல் 11-ம் தேதி வரை. 3-ம் கட்ட கலந்தாய்வு மே 20 முதல் 22-ம் தேதி வரை தரவரிசையில் 45,001 முதல் 70,000 வரை உள்ளவர்கள். 4-ம் கட்ட கலந்தாய்வு மே 31 முதல் ஜூன் 2-ம் தேதி வரை தரவரிசை 70,001 முதல் 1,00,000 வரை உள்ளவர்கள் பங்கேற்கலாம். 5-ம் கட்ட கலந்தாய்வு ஜூன் 12-முதல் 14-ம் தேதி வரை தரவரிசையில் 1 லட்சத்துக்கு மேல் இடம் பெற்றவர்களுக்கு நடைபெறும்.

விஐடி நுழைவுத் தேர்வு தரவரிசையில் முதல் 10 இடங்களை பிடித்தவர்களுக்கு 4 ஆண்டுகளும் 100 சதவீதம், 11 முதல் 50 பெற்றவர்களுக்கு 75 சதவீதம், 51 முதல் 100 பெற்றவர்களுக்கு 50 சதவீதம், 101 முதல் 500 பெற்றவர்களுக்கு 25 சதவீத கல்வி கட்டண சலுகை வழங்கப்படுகிறது. விஐடியில் 3 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகள், 4 ஆண்டு இளநிலை பட்டப்படிப்புகளான பி.எஸ்.சி வேளாண், பி.ஆர்க். 5 ஆண்டு ஒருங்கிணைந்த பட்டப்படிப்பில் சேருவதற்கு www.vit.ac.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment