Wednesday, April 19, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 19.04.2023

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: வெஃகாமை

குறள் எண்: 178
அஃகாமை செல்வத்திற் கியாதெனின் வெஃகாமை
வேண்டும் பிறன்கைப் பொருள்.

பொருள்:
தன்னுடைய செல்வச் செழிப்பு குறையாமலிருக்க வேண்டுமென்றால் பிறருடைய பொருளையும் தானே அடைய வேண்டுமென்று ஆசைப்படாமலிருக்க வேண்டும்

பழமொழி :

The only jewel which will not decay is knowledge

அறிவு மட்டுமே அழியா அணிகலம்.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தனக்கு தலைவன் இல்லா விட்டாலும் வரிசையாக சென்று தன் பணியைச் செய்யும் எறும்பு போல் இருப்பேன். 

2. ஆசிரியர் இருந்தாலும் இல்லாவிடடாலும் என் ஒழுக்கம் காத்துக் கொள்வேன்.

பொன்மொழி :

பார்த்த மாத்திரத்திலேயே அனைத்தையும் ஆதாரமாக எடுத்துவிடாதீர்கள், தரமான ஆதாரத்துடன் எடுத்துக்கொள்ளுங்கள்

பொது அறிவு :

1. பாராமென்சியா என்றால் என்ன ? 

மிகச்சிறந்த ஞாபகம்

2. புரோட்டீனின் முக்கிய பொருள் எது ? 

அமினோ ஆசிட்.

English words & meanings :

 resilient - able to recover fast to the original state. adjective. மீள் தன்மையுடைய. பெயரளபடை

ஆரோக்ய வாழ்வு :

வாழைபழம் உண்பதால் உங்கள் ஆற்றல் அளவு அதிகரித்து, வெகு நேரம் பசிக்காமல் இருக்க உதவுகிறது. வாழைபழம் உடலுக்கு தேவையான ஆற்றலை தருவதோடு மட்டுமல்லாமல் உங்கள் உடலின் சர்க்கரை அளவை தக்க வைத்துக் கொள்ளவும் உதவுகிறது. உங்களுக்கு பசிப்பது போல் தோன்றினால், வாழைபழம் உண்பது மிகச் சிறந்தது.

கணினி யுகம்

Ctrl + Shift + arrow keys: When a tile is in focus on the Start menu, move it into another tile to create a folder. Ctrl + arrow keys: Resize the Start menu when it’s open.

ஏப்ரல் 19


பியேர் கியூரி அவர்களின் நினைவுநாள்




பியேர் கியூரி (Pierre Curie,15 மே 1859 – 19 ஏப்ரல் 1906) பிரெஞ்சு இயற்பியலாளர். அழுத்த மின் விளைவு, காந்தவியல்,படிகவியல் மற்றும் கதிரியக்கக் கண்டுபிடிப்புகளின் முன்னோடிகளில் ஒருவர். 1903 ஆம் ஆண்டில் ஹென்றி பெக்கெரல்,மேரி கியூரி ஆகியோருடன் சேர்ந்து இயற்பியலுக்கான நோபல் பரிசினை பகிர்ந்து கொண்ட அறிவியலாளர்.1903ஆம் ஆண்டு இவருக்கு ரேடியம்,பற்றிய இவர்களது ஆய்வு செய்தமைக்காக   தாவி விருது வழங்கப்பட்டது. பியேர் கியூரி- மேரி கியூரி இணையர் நோபல் பரிசு பெற்றவர்கள். அதே போன்று இவர்களின் மூத்த மகளான ஐரீன் ஜோலியட் கியூரி,விஞ்ஞானியான ஃபிரெடரிக் ஜோலியட் என்பவரை மணந்து கொண்டார். இவர்கள் இருவரும் இணைந்து கதிரியக்கம் பற்றி தொடந்து ஆய்வுகள் செய்து செயற்கை முறையில் கதிரியக்கத்தை உண்டக்கும் வழியொன்றைக் கண்டு பிடித்தனர். இதற்காக 1935-ல் ஐரின் கியூரிக்கும் அவரது கணவருக்கும் நோபல் பரிசு வழங்கப்பட்டது

நீதிக்கதை

மன்னன் ராஜவர்மன் நீதி தவறாத நேர்மையாளன். நீதியையும் நேர்மையையும் தன் உயிருக்கும் மேலாக மதிப்பவன். ஒரு நாள் குணசேகரன் என்னும் அயலூர்க்காரன் மன்னன் ராஜவர்மனிடம், அரசே, நான் என் மனைவியுடன் உங்கள் தலைநகரில் வந்துகொண்டிருந்தேன். தலைநகரத்தை அடைவதற்கு முன் காட்டில் நண்பகல் நேரம் நானும், என் மனைவியும் ஒரு மரத்தடியில் உறங்கிக் கொண்டிருந்தோம். அப்போது அவள் மீது எங்கிருந்தோ வந்த அம்பு தைத்து உயிரிழந்து விட்டாள். எங்களுக்கு எதிரில் சற்று தூரத்தில் வேடன் அமர்ந்திருந்தான். அவன் தான் என் மனைவியைக் கொன்றவன். அவனை நீங்கள் தண்டிக்க வேண்டும் என்றான். 

ஆனால் அந்த வேடனோ, அரசே, நான் குற்றமற்றவன். எந்த காரணமும் இன்றி நான் ஏன் அந்தப் பெண்ணைக் கொல்ல வேண்டும்? நான் அம்பு எய்தவில்லை என கதறினான். கொல்லப்பட்ட பெண்ணின் உடலையும், அவள் மீது தைத்திருந்த அம்பையும் பார்த்த ராஜவர்மனுக்கு ஓர் எண்ணம் தோன்றியது. 

வேடனே, நீ வேறு விலங்குக்கு குறி வைத்து தவறுதலாக இந்தப் பெண் மீது பட்டிருக்கலாம் அல்லவா? எனக் கேட்டான். ஆனால், அப்போது தானும் அயர்ந்து உறங்கிக் கொண்டிருந்ததாக வேடன் சாதித்தான். வேடனின் வார்த்தைகளை நம்பாத மன்னன், அவனை நாடு கடத்த உத்தரவிட்டான். 

இந்த சம்பவம் நடந்து இரு நாட்களுக்குப் பின், வெளியூர் சென்றிருந்த முதலமைச்சர் ராஜவர்மனைச் சந்தித்தார். அப்போது நடந்த சம்பவத்தைப் பற்றி அவரிடம் விவாதித்தான். அந்தப் பெண்ணின் மீது தைத்த அம்பினைப் பார்த்த முதலமைச்சர், அரசே, இந்த அம்பினை கவனித்தீர்களா துருப்பிடித்திருக்கிறது. வேடர்கள் துருப்பிடித்த அம்பைப் பயன்படுத்த மாட்டார்கள். அந்தப் பெண் உறங்கிய மரத்தின் மீது எப்போதோ இந்த அம்பு சிக்கியிருக்கிறது. அன்று அந்த அம்பு தற்செயலாக அந்தப் பெண் மீது விழுந்திருக்கலாம். வேடன் குற்றமற்றவன் என்றே தோன்றுகிறது என்றார். 

இதைக் கேட்டுப் பதறிய மன்னன், தவறான தீர்ப்பை வழங்கியதால் குற்ற உணர்வில் துடிதுடித்து இறந்தான். 

நீதி :
எப்பொழுதும் நேர்மையாக செயல்பட வேண்டும்.

இன்றைய செய்திகள்

19.04. 2023

✨இன்று மும்பையின் பாந்த்ரா-குர்லா வளாகத்தில் (பிகேசி) இந்தியாவின் முதல் ஆப்பிள் ஸ்டோர் திறக்கப்பட்டது.

✨தமிழ்நாட்டிலேயே முதல்முறையாக மாமல்லபுரத்தில் சர்ஃபிங் போட்டி நடைபெறவுள்ளது என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

✨ குழந்தைகளின் கல்வி உரிமைக்காக யார் காலில் விழுந்தாவது படிக்க வைக்கிறேன் என்று பேசிய திருவள்ளூர் மாவட்ட பென்னாலூர்பேட்டை பயிற்சி S.I பரமசிவம் அவர்களை வாழ்த்துகிறேன் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.

✨தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கரூர் பரமத்தியில் 107 டிகிரி ஃபாரன்ஹிட் வெயில் கொளுத்தியதால் மக்கள் தவிப்பு.

✨இலங்கை அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் அயர்லாந்து அணி இன்னிங்ஸ் மற்றும் 280 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது.

Today's Headlines

✨India's first Apple Store opened today at Mumbai's Bandra-Kurla Complex (PKC).

 ✨Minister Udayanidhi Stalin has announced that for the first time in Tamil Nadu, a surfing competition will be held in Mamallapuram.

✨ Chief Minister Stalin has said that he congratulates S.I Paramasivam, coach of Tiruvallur District Bennalurpet, who said that he will beg anyone and fell on their feet to give the children education for the right of children to education.

✨Tamil Nadu's Karur Paramathi temperature raised up to 107 degrees Fahrenheit, causing people to suffer

✨The woman who fainted due to heatstroke. Praise the traffic policeman who helped!

✨Ireland lost the first Test against Sri Lanka by an inning and 280 runs
 Prepared by

Covai women ICT_போதிமரம்
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

பொதுச் செய்திகள்

6TH TO 9TH BRIDGE COURSE WORK BOOK & ALL WORK SHEET ANSWER KEY

CLASS

SUBJECTS

VIEW

9TH

TAMIL

CLICK

9TH

ENGLISH

CLICK

9TH

MATHS

CLICK

9TH

SCIENCE

CLICK

9TH

SOCIAL

CLICK

8TH

TAMIL

CLICK

8TH

ENGLISH

CLICK

8TH

MATHS

CLICK

8TH

SCIENCE TM

CLICK

8TH

SCIENCE EM

CLICK

8TH

SOCIAL

CLICK

7TH

TAMIL

CLICK

7TH

ENGLISH

CLICK

7TH

MATHS

CLICK

7TH

SCIENCE

CLICK

7TH

SOCIAL

CLICK

6TH

TAMIL

CLICK

6TH

ENGLISH

CLICK

6TH

MATHS

CLICK

6TH

SCIENCE

CLICK

6TH

SOCIAL

CLICK


Featured News

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL