Breaking

Join THAMIZHKADAL Telegram Group

Join THAMIZHKADAL WhatsApp Group

Friday, April 21, 2023

1 சொட்டு எண்ணெய் போதும்.. உடல் சூட்டை நொடிபொழுதில் குறைக்கும்!!

கோடை காலத்தில் அதாவது வெயில் காலத்தில் நம் உடலில் உள்ள முக்கிய பிரச்சனை உடல் சூடு தான்.


இந்த உடல் சூட்டால் நம் உடலில் பல பிரச்சனைகள் ஏற்படுகின்றது. தலை முடி கொட்டுதல், பொடுகுத் தொல்லை, வயிற்று வழி போல பல பிரச்சனைகள் ஏற்படும். இந்த பிரச்சனைகள் எப்பொழுது ஏற்படுகின்றது என்றால் உடல் சூடு அதிகமடையும் பொழுதுதான்.


உடல் சூடு என்பது எல்லாருக்கும் இருக்க வேண்டிய ஒன்று. உடலுக்குள் உள்ள உறுப்புகள் எல்லாம் சுறுசுறுப்பாக இருக்க வேண்டும் என்றால் ஒரு மிதமான சூடு உடலில் இருக்க வேண்டும். ஆனால் அதிக அளவு உடல் சூடு இருந்தால் மேற்கூறிய உடல் பிரச்சனைகள் அனைத்தும் வரும். இந்த பதிவில் அதிக உடல் சூட்டை எவ்வாறு குறைப்பது என்று பார்க்கலாம்.


வைத்தியம் ஒன்று


உடல் சூட்டை குறைக்க விளக்கெண்ணெய் போதுமானது. இந்த விளக்கெண்ணெய் மரசெக்கு மூலம் தயாரித்ததாக இருக்க வேண்டும். இந்த விளக்கெண்ணையை சிறிதளவு எடுத்து அதை சூடாக்கி ஆறிய பின் நம் கால்களின் கட்டை விரல்கள் இரண்டிலும் தேய்த்து நன்கு மசாஜ் செய்ய வேண்டும். பிறகு சிறிது நேரம் அப்படியே உட்காரவேண்டும் அல்லது படுத்துக் கொள்ள வேண்டும். சிறிது நேரத்துக்கு பிறகு அதை ஒரு காட்டன் துணியால் நன்கு துடைக்க வேண்டும். இதை துடைக்காமல் விட்டுவிட்டால் ஜண்ணி அல்லது ஜொரம் வரக்கூடும்.


வைத்தியம் இரண்டு


வெயில் காலங்களில் ஏற்படும் ஏற்படும் அதிக உடல் சூட்டை குறைக்க எண்ணெய் தேய்த்து குளிப்பது ஒரு சிறந்த வழிமுறையாகும். இதை செய்ய நல்லெண்ணெய்யை சில பொருட்களுடன் சேர்த்து சூடாக்கி பிறகு நம் உடலில் தேய்த்து குளிக்க வேண்டும். அதாவது நல்லெண்ணெய்யுடன் காயந்த மிளகாய்களின் காம்பு 3, மிளகு 3, பூண்டு ஒரு பல் போட்டு நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். இது ஆறிய பின்னர் நம் உடலில் தேய்த்து குளிக்கலாம்.

அதாவது நம் உடலில் அதிக சூடு ஏற்படுகின்ற ஒன்பது பகுதிகள் உள்ளது. இந்த ஒன்பது பகுதிகளில் இந்த எண்ணெய்யை தேய்த்து குளித்தால் உடல் சூடு குறையத் தொடங்கும். மேலும் உடல் சூட்டால் வரும் எந்தவித பாதிப்பும் நம் உடலை பாதிக்காது.


பெண்கள் செவ்வாய் மற்றும் வெள்ளிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தொடர்ந்து எண்ணெய் தேய்த்து குளித்தால் பெண்களுக்கு தைராய்டு பிரச்சனை குணமாகும். ஆண்கள் புதன் மற்றும் சனிக் கிழமைகளில் எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும்.


உடல் சூடு தணிய சுடு தண்ணீர் குடிக்கலாம. சுடு தண்ணீர் குடிக்கும் பொழுது நம் உடலில் வியர்வை வரும். சுடு தண்ணீர் நமது உடல் சூட்டை வியர்வை மூலம் வெளியேற்றுகின்றது. பின்னர் வெயில் காலங்களில் கிடைக்கும் பழங்களை அதிக அளவு சாப்பிட வேண்டும்.


நமது கட்டை விரல்களில் எண்ணெய் வைத்து மசாஜ் செய்வதன் மூலமாகவும் உடல் சூட்டை வேகமாக குறைக்க முடியும். நமது கட்டை விரல்களில் பீரியல் சுரப்பி உள்ளது. இந்த சுரப்பி நமது கட்டை விரலுடன் இணைந்துள்ளதால் அந்த இடத்தில் மசாஜ் செய்வதால் உடலில் உள்ள சூடு முழுவதுயும் வெளியேற்றுகின்றது.

No comments:

Post a Comment