Monday, April 17, 2023

ஆப்பிள் 1 போதும்சிறுநீரகக் கல்லை அடியோடு நீக்க!!


நம் சிறுநீரகத்தில் இருக்கும் கற்களை நீக்க எளிமையான சில வீட்டு வைத்திய முறைகளை பற்றி இந்த பதிவில் காண்போம்.

முதல் வீட்டு வைத்திய முறை:

முதல் வீட்டு வைத்திய முறையில் வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிளைக் கொண்டு எவ்வாறு சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவது என்று பார்க்கலாம்.

முதலில் வெள்ளரிக்காய் மற்றும் ஆப்பிளை எடுத்து ஒரு பெரிய பாத்திரத்தில் தண்ணீர் உற்றி அந்த தண்ணீரில் சிறிதளவு உப்பு மற்றும் சிறிதளவு மஞ்சள்தூள் கலந்து நன்றாக கலந்து கொள்ளவும்.

பிறகு இரண்டு வெள்ளரிக்காய் மற்றும் ஒரு ஆப்பிளை அந்த தண்ணீரில் போட்டு 15 நிமிடம் ஊறவைக்கவும். 15 நிமிடம் கழித்து ஆப்பிள் மற்றும் வெள்ளரிக்காய்களை எடுத்து சுத்தமான தண்ணீரில் கழுவிக் கொள்ளவும்.

பிறகு ஒரு மிக்சி ஜாரில் இந்த வெள்ளரிக்காய்களையும் ஆப்பிளையும் சிறு துண்டுகளாக நறுக்கி போட்டுக் கொள்ளவும். அதனுடன் சிறதளவு இஞ்சி, புதினா இலைகள் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும்.

நன்றாக அரைந்த பின்னர் இதனை வடிகட்டாமல் அப்படியே வெறும் வயிற்றில் தொடர்ந்து 15 நாள் குடித்து வரவேண்டும். இவ்வாறு சொய்வதால் சிறுநீரகத்தில் இருக்கும் கற்கள் அனைத்தும் கரைந்து வெளியேறிவிடும்.

இரண்டாவது வீட்டு வைத்திய முறை:

இரண்டாவது வீட்டு வைத்திய முறையில் வாழைத் தண்டினை வைத்து எவ்வாறு சிறுநீரகத்தில் உள்ள கற்களை நீக்குவது என்று பார்க்கலாம்.

முதலில் ஒரு இளம் வாழைத் தண்டை எடுத்து அதை சுத்தம் செய்து சிறு சிறு துண்டுகளாக நறுக்கிக் ஒரு மிக்சியில் போடவும். இதனுடன் 10 குறுமிளகு, அரை ஸ்பூன் சீரகம் சேர்த்து இதனுடன் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்.

பின்னர் மீண்டும் கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து வடிகட்டி எடுத்து கொள்ளவும். பிறகு அரை டம்ளர் மோர் கலந்து கொண்டு அதில் சிறிது எலுமிச்சை சாறு சேர்த்துக் கொள்ளவும். இதை காலை நேரத்தில் வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும். தொடர்ந்து 15 நாள் குடித்து வந்தால் சிறுநீரகக் கற்கள் அனைத்தும் கரைந்து விடும்.

வீட்டு வைத்தியமுறை மூன்று

முள்ளங்கியை வைத்து எவ்வாறு சிறுநீரகக் கல்லை கரைத்து வெளியேற்றுவது இன்று இப்போது பார்க்கலாம்.

முதலில் முள்ளங்கியை எடுத்து அதன் தோலை சீவி சிறு சிறு துண்டுகளாக நறுக்கி மிக்சி ஜாரில் போட்டுக் கொள்ளவும். முக்கால் டம்ளர் தண்ணீரை இதனுடன் சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். பிறகு இதை வடிகட்டி எடுத்துக் கொள்ளவும். வடிகட்டிய பிறகு சிறிதளவு தேனை இத்துடன் சேர்த்து குடிக்கலாம். இதை தொடர்ந்து ஒரு 15 நாள்களுக்கு செய்ய வேண்டும்.

வீட்டு வைத்திய முறை நான்கு

பார்லி அரிசியை வைத்து எவ்வாறு சிறுநீரகத்தில் இருக்கும் கல்லை நீக்குவது என்று இப்போது பார்க்கலாம்.

முதலில் அடுப்பில் பொரிய பாத்திரம் அல்லது வடசட்டியை வைத்து அதில் ஒரு கப் பார்லி அரிசி மற்றும் 15 மிளகு சேர்த்து வாசனை வரும் வரை வறுக்க வேண்டும். பிறகு இதை நன்றாக ஆற வைத்து பின்னர் இதை மிக்சி ஜாரில் போட்டு நன்றாக அரைத்துக் கொள்ளவும். பிறகு இந்த பார்லி பொடியை ஒரு பாட்டிலில் போட்டு வைத்து கொள்ளவும்.

இதை பயன்படுத்தும் முறை

ஒரு பாத்திரத்தில் இரண்டு டம்ளர் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இதனுடன் இரண்டு பூண்டை சிறு துண்டாக நறுக்கி சேர்த்து அத்துடன் இரண்டு ஸ்பூன் பார்லி பொடியையும் சேர்த்து நன்றாக கொதிக்க வைக்க வேண்டும். பிறகு கொதித்த பின்னர் இதை ஆற வைத்து அப்படியே குடிக்க வேண்டும். இதை தினமும் 15 நாளுக்கு வெறும் வயிற்றில் குடிக்க வேண்டும்.

வீட்டு வைத்திய முறை ஐந்து:

ஆப்பிள் சீடர் வினிகர் வைத்து எவ்வாறு சிறுநீரகக் கல்லை நீக்குவது என்று இப்போது பார்க்கலாம்.

ஆப்பிள் சீடர் வினிகர் ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அத்துடன் ஒரு டம்ளர் தண்ணீரை சேர்த்து நன்கு கலந்து அப்படியே குடிக்கலாம். இந்த ஆப்பிள் சீடர் வினிகரை ஈதிக அளவு எடுத்துக் கொள்ளக் கூடாது. சர்க்கரை நோய் உள்ளவர்கள் அவர்களுடைய மருத்துவரின் ஆலோசனைப்படி இந்த ஆப்பிள் சீடர் வினிகரை பயன்படுத்ததாம்.

சிறுநீரக கற்கள் வராமல் இருக்க அடிக்கடி இளநீர், மோர் போன்றவற்றை குடிக்க வேண்டும். அகத்திக் கீரையுடன் உப்பு சீரகம் சேர்த்து சமைத்து சாப்பிடலாம்.

சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் தவிர்க்க வேண்டியவை

சிறுநீரகத்தில் கல் உள்ளவர்கள் தக்காளியை விதையுடன் பயன்படுத்தக்கூடாது. பாலைக் கீரை, பசலைக்கீரை, கத்தரிக்காய், பரங்கிக்காய், காளான், காளிப்பிளவர் இவை அனைத்தையும் சாப்பிடக்கூடாது. பழங்களில் திராட்சை, சப்போட்டா இந்த பழங்களை சாப்பிடக்கூடாது.

எள் பயன்படுத்துவதை தவிர்ப்பது நல்லது. அசைவ உணவை பொறுத்த வரை முட்டை முதல்கொண்டு மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, கோழி, மீன் ஆகிய எதையும் சாப்பிடக்கூடாது.

No comments:

Post a Comment

Popular Feed

Recent Story

Featured News