JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU
SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி
பள்ளிக் கல்வியில் வரும் கல்வியாண்டில் (2023 - 2024) பிளஸ் 2, பிளஸ் 1, பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடைபெறும் தேதிகளை துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வெளியிட்டாா்.
தமிழக பள்ளிக் கல்வியில் பள்ளி வேலை நாள்கள், தேர்வுகள், விடுமுறை உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய கல்வியாண்டுக்கான (2023-24) நாள்காட்டியை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி சென்னை அண்ணா நூலக வளாகத்தில் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு!!!
2023-24 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளி நாட்காட்டி வெளியீடு!!!
பள்ளிக் கல்வி பாடத்திட்டத்தில் பொதுத் தேர்வு
பிளஸ் 2 வகுப்புக்கு மாா்ச் 18-ஆம் தேதியும்,
பிளஸ் 1 வகுப்புக்கு மாா்ச் 19-ஆம் தேதியும்,
பத்தாம் வகுப்புக்கு ஏப்ரல் 8-ஆம் தேதியும் தொடங்கும்.
இதற்கான விரிவான தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியாகும். மேலும்,
1 முதல் 9-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஏப். 18 முதல் 30-ஆம் தேதி வரை முழு ஆண்டுத் தேர்வு நடத்தப்படும்.
பள்ளி வேலை நாள்கள் ஏப். 30-ஆம் தேதியுடன் நிறைவு பெறும். அதன்பின் மாணவா்களுக்கு கோடை விடுமுறை மே 1-ஆம் தேதி முதல் வழங்கப்படும்.
பள்ளிகளுக்கான மொத்த வேலை நாள்கள் 217-ஆக இருக்கும் என அதில் கூறப்பட்டுள்ளது. இதுதவிர நாள்காட்டியில் ஆசிரியா்களுக்கு கல்வியாண்டு முழுவதும் வழங்கப்படவுள்ள பயிற்சிகள் குறித்த முழு விவரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. வெயிலின் தாக்கம் அதிகரித்தால்... தொடா்ந்து செய்தியாளா்களிடம் அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி கூறியதாவது: பள்ளிகள் திறப்பின்போது வெயிலின் தாக்கம் கடுமையாக இருக்கும்பட்சத்தில் முதல்வருடன் ஆலோசித்து பள்ளித் திறப்பை தள்ளிவைப்பது குறித்து முடிவெடுக்கப்படும்.
மேலும், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத தவறிய மாணவா்கள் உடனடித் தேர்வில் பங்கேற்க மே 9-ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம். பள்ளிகள் திறக்கப்பட்டதும் மாணவா்களுக்கு பாடநூல்கள் உள்பட அனைத்து கல்வி உபகரணங்களும் வழங்கப்படும். மத்திய தணிக்கைத் துறை அறிக்கையில் கடந்த அதிமுக ஆட்சியில் நடந்த பல்வேறு தவறுகள் சுட்டிக் காட்டப்பட்டுள்ளன. அவை மீண்டும் நடைபெறாதவாறு பாா்த்துக் கொள்வோம் என்றாா் அவா்.
ஜூன் 1-இல் பள்ளிகள் திறப்பு கோடை விடுமுறை முடிந்து 6 முதல் பிளஸ் 2 வரையிலான வகுப்புகளுக்கு ஜூன் 1-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்று அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்தாா்.
அதேநேரத்தில் 1 முதல் 5- ஆம் வகுப்புகளுக்கு மட்டும் ஜூன் 5-ஆம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என்றாா்.
அனைத்து வகுப்புகளுக்கான காலாண்டு மற்றும் முதல் பருவத் தேர்வு செப்.14 முதல் 27-ஆம் தேதி வரை நடைபெறும். அதன்பின் செப்.28 முதல் 2-ஆம் தேதி வரை காலாண்டு விடுமுறை வழங்கப்படும்.
அரையாண்டு, 2-ஆம் பருவத் தேர்வு டிச.11 முதல் 22-ஆம் தேதி வரை நடத்தப்படும். தொடா்ந்து, டிச.23-இல் தொடங்கி ஜன.1-ஆம் தேதி வரை மாணவா்களுக்கு அரையாண்டு விடுமுறை வழங்கப்படும் என்றாா் அவா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி.
No comments:
Post a Comment