Wednesday, April 19, 2023

குரு பெயர்ச்சி பலன்கள் 2023 : சொந்த வீடு.. கார் என கோடிகளில் புரளப்போகும் ராசிகள்!

அனைத்து ஆசிரியப் பெருமக்களுக்கும் வணக்கம். தங்களின் படைப்புகள் மாணவர்களுக்கு பயன்படவேண்டும் என நினைத்தால், உங்கள் படைப்புகளை thamizhkadal.com@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்கவும் உங்கள் அனுமதியோடு வெளியிடப்படும்.

JOIN YOUR தமிழ்க்கடல் TELEGRAM GROU


SUBSCRIBE YOUR தமிழ்க்கடல் கல்வித் தொலைக்காட்சி

சோபகிருது வருடம் சுசித்திரை மாதம் 9 ஆம் தேதி (ஏப்ரல் 22, 2023) சனிக்கிழமை அன்று இரவு 11.24 மணிக்கு அசுவதி நட்சத்திரம் 1 ஆம் பாதத்தில் மேஷராசியில் குரு பகவான் சஞ்சரிக்கின்றார்.

குரு பகவானின் பார்வை சிம்மம், துலாம், தனுசு ஆகிய ராசிகளில் நேரடியாக விழுகிறது. 'குரு பார்க்க கோடி நன்மை' என்பார்கள். அந்த வார்த்தையை போல குரு பகவான் தன் பார்வைபலத்தால் மக்களுக்கு நற்பலன்களை வழங்குவார்.

வெற்றியை குவிக்கும் வியாழனின் பார்வை : 'குரு பார்க்க கோடி நன்மை' என்பது பழமொழி. அதன் அருட்பார்வையினால் அஷ்ட லட்சுமியும் இல்லத்தில் அடி யெடுத்து வைக்கும் வாய்ப்பு உண்டு. குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் விழுவதால், மிகவும் சிறப்பான பலன்களை மக்களுக்கு வழங்குவார். குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 5,7,9 ஆகிய மூன்று இடங்களில் பதிகின்றது. குருவின் பார்வை 5 ஆம் இடத்தில் பதிவதால் பூர்வ புண்ணிய ஸ்தானம் புனிதமடைகின்றது. அது புத்திர ஸ்தானமாகவும் இருப்பதால் பிள்ளைகளுக்கான சபகாரியங்கள் நடைபெறும். குருவின் பார்வை 7 ஆம் இடத்தில் பதிவதால் களத்திர ஸ்தானம் புனிதமடைகின்றது. மங்கல ஓசை மனையில் கேட்பதற்கான வழிபிறக்கும். திருமணமானவர்களாக இருந்தால் வாழ்க்கைத்துணை வழியே நன்மை அதிகரிக்கும். குருவின் பார்வை 9 ஆம் இடத்தில் பதிவதால் பாக்கிய ஸ்தானம் பலம்பெறுகின்றது. எனவே, வயதில் பெரியவர்களின் நட்பு கிடைக்கும். சொத்து தொடர்பான பிரச்சினைகள் தீரும். பணிபுரியும் இடத்தில் ஊதிய உயர்வும், கேட்ட சலுகைகளும் கிடைக்கலாம். கண்ணியம் மிக்க நண்பர்கள் கைகொடுத்து உதவுவர்.


மேஷம் : உங்கள் ராசிக்கு 12 ஆம் வீட்டில் சஞ்சரித்து வந்த குரு பகவான் வரும் 22 ஆம் தேதி முதல் உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கப்போகின்றார். உங்கள் சொந்த ராசியில் இவர் சஞ்சரிப்பதால் விரயங்கள் அதிகரிக்கலாம். வீடு மாற்றங்கள், இட மாற்றங்கள், உத்தியோக மாற்றங்கள் வந்தாலும் அவை திருப்தி தரும் விதத்திலேயே அமையும். எதிர்மறை சிந்தனைகளைத் தவிர்த்து நேர்மறைச் சிந்தனைகளை வளர்த்துக் கொள்ளுங்கள். உங்கள் கய ஜாதகத்தில் குரு இருக்கும் பாதசார பலமறிந்து அதற்குரிய வழிபாடுகளை முறையாக மேற்கொள்ளுங்கள்.


ரிஷபம் : உங்கள் ராசிக்கு 11 ஆம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், வரும் ஏப்ரல் 22 ஆம் தேதி முதல், உங்கள் ராசிக்கு 12 ஆம் இடத்தில் சஞ்சரிக்க உள்ளார். 12 ஆம் இடம் என்பது பயணங்களையும் விரயங்களையும் குறிக்கும் இடமாகும். அந்த இடத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது விரயங்கள் கூடுதலாக இருக்கும். ஆரோக்கியத்திலும் அடிக்கடி அச்சுறுத்தல்களும், மருத்துவச் செலவுகளும் ஏற்படலாம். உத்தியோகத்தில் திடீர் மாற்றங்கள் ஏற்பட்டும். இல்லாத்தில் விநாயகர் பெருமானை வைத்து பூஜை செய்து வந்தால் குரு பகவான் உங்களுக்கு வெற்றியை தருவார்.


மிதுனம் : இதுவரை உங்கள் ராசிக்கு 10 ஆம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், வரும் சனிக்கிழமை முதல் உங்கள் ராசிக்கு 11 ஆம் இடமான லாப ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். எனவே, தொழில் வளர்ச்சி உங்களுக்கு திருப்தி தரும். உங்கள் வாழ்க்கையில் மிகப் பெரிய மாற்றங்களைக் காணப் போகிறீர்கள். வருமானங்களும், வாகன யோகமும்
உண்டு. ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அரசியல் மற்றும் பொதுநலத்தில் இருப்ப வர்களுக்கு நல்ல பதவிகள் கிடைக்கும் வாய்ப்பு உண்டு.


கடகம் : உங்கள் ராசிக்கு ஒன்பதாம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 22 ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 10 ஆம் இடமான தொழில் ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அடுத்த ஒன்றரை ஆண்டுகளுக்கு அங்கேயே வீற்றிருக்கும் அவர் தன் பார்வையால் பல நன்மைகளை வழங்க உள்ளார். 'பத்தில் குரு வந்தால் பதவியில் மாற்றம் வரும்' என கூறுவார்கள். அந்தவகையில், வரும் காலங்களில் நல்ல மாற்றங்களை நீங்கள் பெறுவீர்கள்.


சிம்மம் : உங்கள் ராசிக்கு 8 ஆம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 22.4.2023 அன்று உங்கள் ராசிக்கு 9 ஆம் இடமான பாக்கிய ஸ்தானத்தில் அடியெடுத்து வைக்கின்றார். இதனால், உங்களுக்கு அடுத்த ஓராண்டு காலம் சௌபாக்கியங்களை பெரும் பொற்காலம். குரு பார்வை உங்கள் ராசிக்கு நேரடியாக சுய ஸ்தானத்தில் விழுவதால், நீங்கள் தொட்டது எல்லாம் துலங்கும். '9-ல் குரு வந்தால் ஒளிமயமான எதிர்காலம் அமையும்' என்பார்கள். அதன்படி, கண்டகச்சனியின் ஆதிக்கம் இருந்தாலும், குரு பார்வையால் உங்களுக்கு சாதகமான காலம் ஏற்படும்.


கன்னி : உங்கள் ராசிக்கு 7 ஆம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் 22 முதல் 8 ஆம் இடத்தில் அடியெடுத்து வைக்கின்றார். அஷ்டமத்து குருவின் ஆதிக்கம் அவ்வளவு நல்லதல்ல. இருப்பினும், குரு சுபகிரகம் என்பதால் அதன் பார்வை பலத்தால் நன்மைகளை வழங்குவார். இக்காலத்தில் ஆரோக்கியத்தில் அடிக்கடி தொல்லைகள் அதிகரிக்கும். இடமாற்றங்கள், எதிர்பாராத விதத்தில் வந்து சேரும். துன்பங்களிலிருந்து விடுபட தொடர்ந்து வழிபாடுகளை மேற்கொள்ள வேண்டும். வியாழக் கிழமை விரதமிருந்து குரு பகவானை வழிபடுவதோடு சுயஜாதக அடிப்படையில் யோகம் தரும்.


துலாம் : உங்கள் ராசிக்கு 6 ஆம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், வரும் 22 ஆம் தேதி முதல் உங்கள் ராசிக்கு 7 ஆம் இடத்திற்கு குரு பகவான் மாறுவதால், நீங்கள் எக்கச்சக்கமான நல்ல பலன்களை பெறப்போகிறீர்கள். அடுத்த ஒரு வருடத்திற்கு நீங்கள் தொட்டது எல்லாம் துலங்கும். நீங்கள் நினைத்த காரியங்கள் அனைத்து வெற்றியடையும். உங்களுக்கு விருப்பமான துணையை கரம்பிடிப்பதற்கான வாய்ப்புகளும் அதிகரிக்கும். உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு குரு பகவான் பகை கிரகம் என்றாலும் அவரது பார்வைக்குரிய பலன் நிச்சயமாகக் கிடைக்கும். எனவே, இனி தொட்டது துலங்கும். தொல்லைகள் அகலும். வெற்றி வாய்ப்புகள் படிப்படியாக வீடு தேடி வரும். மக்கள் செல்வங்களின் கல்யாணம் முதல் மகத்தான வாழ்க்கை அமைவது வரை நல்ல பலன்கள் நடைபெறும்.


விருச்சிகம் : உங்கள் ராசிக்கு 5 ஆம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் வரும் 22 ஆம் தேதி முதல் 6 ஆம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். இதன் விளைவாக வளர்ச்சிப் பாதையை நோக்கி அடியெடுத்துவைக்கப் போகிறீர்கள். உங்களின் வருமானம் உயரும். உத்தியோகத்தில் உயர்நிலை அடைய சந்தர்ப்பங்கள் கைகூடிவரும். 6-யில் குரு வருகின்ற பொழுது அதன் பார்வை பலத்தால் மிகச்சிறந்த பலன் களை அடையப் போகின்றீர்கள். தன-பஞ்சமாதிபதியாக விளங்கும் குரு தாராளமாகச் செலவு செய்யவும், ஏராளமான பொருள் மற்றும் இடம், பூமி வாங்கவும் வழிவகுத்துக் கொடுப்பார்.


தனுசு : உங்கள் ராசிக்கு 4 ஆம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான் 22.4.2023 முதல் 5-ம் இடத்தில் அடியெடுத்துவைக்கின்றார். அங்கிருந்த படியே 9 ஆம் பார்வையாக உங்கள் ராசியைப் பார்க்கின்றார். 'குரு பார்க்க கோடி நன்மை` என்பதற்கேற்ப இனி அடுக்கடுக்காக நன்மைகள் உங்களைத் தேடிவரப்போகின்றது. இல்லத்தில் சுபகாரியங்கள் கைகூடும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்கு புதிய பொறுப்பு கள் கிடைக்கும். வழக்குகளும், வாய்தாக்களும் வந்த வழியே திரும்பிச் செல்லும்.


மகரம் : உங்கள் ராசிக்கு 3-ல்சஞ்சரித்து வந்த குரு பகவான், 22 முதல் 4 ஆம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரித்தாலும் அதன் பார்வை பலனால் நன்மைகளைக் கொடுப்பார். ஜென்மச் சனி விலகி இப்பொழுது குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறுகின்றது. எனவே, பெரியளவில் பாதிப்புகள் ஏற்படாது என்றாலும் அர்த்தாஷ்டம குரு இடையிடையே தாக்குதல்களையும், தடைகளையும் கொடுக்கத்தான் செய்வார். வரவைவிட செலவு அதிகரிக்கும். கை வலி, கால் வலி என்று ஏதேனும் ஒரு தொல்லை இருந்து கொண்டே இருக்கும். அதிலிருந்து விடுபட வியாழன் தோறும் விரதமிருந்து குரு பகவானை வழிபடுவதோடு சுயஜாதகத்தில் திசா புத்திக்கேற்ற தெய்வங்களை வழிபடுவது நல்லது.


கும்பம் : உங்கள் ராசிக்கு 2 ஆம் இடத்தில் சஞ்சரித்து வந்த குரு பகவான், 22.4.2023 முதல் 3 ஆம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். மூன்றாமிடம் என்பது முயற்சிகளில் வெற்றி கிடைக்கும் இடமாகும். அந்த இடத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது நல்ல வளர்ச்சி ஏற்படும் என்றாலும் ஏழரைச்சனியில் ஜென்மச்சனியின் ஆதிக்கமும் இருப்பதால் அவ்வப்போது இடையூறுகளும் வரலாம். பொருளாதாரம் போதுமானதாக இருந்தாலும் மனநிம்மதி குறைவாகவே இருக்கும். ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டு அகலும்.


மீனம் : உங்கள் ராசியில் சஞ்சரித்து வந்த ராசி நாதன் குரு பகவான், 22.4.2023 முதல் 2-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகின்றார். தன ஸ்தானமான 2 ஆம் இடத் தில் சஞ்சரிக்கும் குருவால் தனவரவு தாராளமாக வந்து சேரும். மனதில் நினைத்ததை மறுகணமே செய்து முடிக்கும் ஆற்றல் கிடைக்கும். நல்ல காரியங்கள் பலவும் இல்லத்தில் நடைபெறும். உங்கள் ராசிநாதன் குருவைப் பலப்படுத்த வியாழக்கிழமை தோறும் விரதம் இருந்து வருவதோடு சுய ஜாதகத்தில் குருவின் பாதசார பலம் றிந்துயோகபலம் பெற்ற நாளில் வழிபட்டால் உன்னதமான வாழ்க்கை அமையும்.
Thamizhkadal Study Materials Websites Links Given Below:

WEBSITE 1 : CLICK HERE

WEBSITE 2 : CLICK HERE

WEBSITE 3 : CLICK HERE

No comments:

Post a Comment

Featured News

THAMIZHKADAL STUDY MATERIAL

கிழே உள்ள தலைப்பை தொடவும்

FOLLOW THE THAMIZHKADAL WEBSITES
WWW.THAMIZHKADAL.COM
EXAM STUDY MATERIAL ONLINE TEST VIDEO MATERIAL
TEXT BOOK CLICK VIEW ATTEND CLICK VIEW
இலக்கிய வரலாறு CLICK VIEW ATTEND CLICK VIEW
GK CLICK VIEW ATTEND CLICK VIEW
CURRENT AFFAIRS CLICK VIEW ATTEND CLICK VIEW
TNPSC CLICK VIEW ATTEND CLICK VIEW
TET CLICK VIEW ATTEND CLICK VIEW
PG TRB CLICK VIEW ATTEND CLICK VIEW
POLICE CLICK VIEW ATTEND CLICK VIEW
NEET CLICK VIEW ATTEND CLICK VIEW
TELENT EXAM NMMS TRUST NTSE
TK WEBSITES THAMIZHKADAL.COM THAMIZHKADAL.IN STUDY MATERIALS

©THAMIZHKADAL