Friday, April 21, 2023

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 21.04.2023

 திருக்குறள் :

பால் :அறத்துப்பால்

இயல்: இல்லறவியல்

அதிகாரம்: வெஃகாமை

குறள் எண்: 180
இறலீனும் எண்ணாது வெஃகின் விறலீனும்
வேண்டாமை யென்னுஞ் செருக்கு.

பொருள்:
விளைவுகளைப் பற்றி நினைக்காமல் பிறர் பொருளைக் கவர்ந்துகொள்ள விரும்பினால் அழிவும், அத்தகைய விருப்பம் கொள்ளாதிருந்தால் வாழ்க்கையில் வெற்றியும் கிட்டும்

பழமொழி :

Do not count your chickens before they are hatched

கைக்கு வராததைக் கணக்குப் பார்க்காதே.

இரண்டொழுக்க பண்புகள் :

1. தனக்கு தலைவன் இல்லா விட்டாலும் வரிசையாக சென்று தன் பணியைச் செய்யும் எறும்பு போல் இருப்பேன். 

2. ஆசிரியர் இருந்தாலும் இல்லாவிடடாலும் என் ஒழுக்கம் காத்துக் கொள்வேன்.

பொன்மொழி :

நற்குணங்களைப் பற்றி சிறந்த மனிதன் சிந்திக்கிறான். சாதாரண மனிதன் தன் சௌகரியங்களைப் பற்றிச் சிந்திக்கிறான்.

பொது அறிவு :

1. தேசிய விளையாட்டு தினம் எப்போது? ஆகஸ்ட் 29 . 2.ராணுவ தினம் எப்போது ? ஜனவரி 15.

English words & meanings :

 starvation - suffering due to lack of food. பட்டினியால் கஷ்டப்படுதல்

ஆரோக்ய வாழ்வு :

நாள் ஒன்றுக்கு ஒரு ஆப்பிள் உண்டால் மருத்துவரை தவிர்க்கலாம் என்ற பழமொழி உங்களுக்கு நினைவில் இருக்கலாம்? ஆம் அது உண்மைதான். உடலை தொற்றுகளிலிருந்து பாதுகாக்கும் வைட்டமின் C ஆப்பிளில் உள்ளது. மேலும் நரம்புகளின் ஆரோக்யத்திற்கும் ஆப்பிள் சிறந்தது. எடை குறைய உதவி, கெட்ட கொழுப்பை அகற்றவும் உதவுகிறது. மேலும் சர்க்கரை நோய், மார்பக புற்று நோய், ஸ்ட்ரோக் போன்ற ஆபத்துகளிலிருந்தும் உங்களை காப்பாற்றுகிறது.




கணினி யுகம்

Ctrl + Shift : Switch the keyboard layout when multiple keyboard layouts are available. Ctrl + Spacebar : Turn the Chinese input method editor (IME) on or off.

நீதிக்கதை

கதை :

ஒரு காட்டில் நல்ல பாம்பு ஒன்று வாழ்ந்து வந்தது. சற்று வயதான பாம்பு அது. ஒரு நாள் அது இரை தேடிக்கொண்டே காட்டுக்குள் அலைந்து திரிந்து கொண்டிருந்தது. அப்போது ஒரு மரத்தடியில் முனிவர் ஒருவர் அமர்ந்து தவம் செய்து கொண்டிருந்தார். அவரிடம் சென்று பணிந்து நின்றது பாம்பு. கண்களைத் திறந்து பார்த்தார். உனக்கு என்ன வேண்டும்? சுவாமி, நான் போன பிறவியில் பாவம் செய்து இந்தப் பிறவியில் பாம்பாகப் பிறந்துள்ளேன். அதனால் மீண்டும் பிறவாதிருக்க நான் என்ன செய்யவேண்டும் தயவு செய்து எனக்கு உபதேசம் செய்ய வேண்டும் என்று கேட்டது. 


முனிவர், நீ இந்தப் பிறவியில் யாரையும் கடித்துத் துன்புறுத்தாமல் இருந்தால், உனக்கு அடுத்த பிறவியில் உயர்ந்த பிறவி கிட்டும் என்று உபதேசித்து ஆசி கூறினார். அதைக் கேட்டு மகிழ்ந்த பாம்பு அவரை வணங்கி சென்றது. காட்டில் திரிந்த பாம்பு ஊருக்குள் வந்தது. நாம் யாரையும் கடிப்பதில்லை யாருக்கும் தீங்கு செய்வதில்லை என முனிவரிடம் கூறிவிட்டோமே. நமக்கும் யாரும் தொந்தரவு தரமாட்டார்கள் என எண்ணிக் கொண்டது. 


அதனால் அந்தப் பாம்பு ஊரில் உள்ள ஒரு மைதானத்தில் உலவியபடி இரை தேடியது. அப்போது அங்கு விளையாட வந்த சில சிறுவர்கள் அங்கு உலவும் பாம்பைப் பார்த்து அலறினார்கள். அந்த பாம்பு யாரையும் தொந்தரவு செய்யாமல் தன் வழியே போய்க் கொண்டு இருந்தது. ஆனால் சிறுவர்கள் விடுவார்களா? பாம்பின் அருகே இருந்த கற்களை எடுத்து வீசத் தொடங்கினர். அப்போது பாம்பு தன் தலையைத் தூக்காது மெல்ல ஊர்ந்து கிடைத்த பொந்தில் நுழைந்து தன்னைக் காப்பாற்றிக் கொண்டது. பாம்பு இரவானதும் அந்த இடத்தை விட்டு விட்டு காட்டை நோக்கி சென்றது. அதனால் ஊர்ந்து செல்ல முடியாதபடி உடல் முழுவதும் காயத்துடன சென்று முனிவர் முன் நின்றது. 


அதிகாலையில் ரத்தம் சொட்டும் உடம்புடன் வந்து நின்ற பாம்பைப் பார்த்து திடுக்கிட்ட முனிவர், என்னவாயிற்று? ஏன் இப்படி காயப்பட்டு வந்திருக்கிறாய்? என்று அன்போடு வினவினார். சுவாமி, நீங்கள் சொன்னபடியே யாரையும் கடிப்பதில்லை என முடிவு செய்து விட்டோமே என்று ஊருக்கு வெளியே இருந்த மைதானத்துக்குச் சென்றிருந்தேன். அங்கு யாரையும் தொந்தரவு செய்யாமல் என் வேலையைப் பார்த்துக் கொண்டிருந்தேன். ஆனால் அங்கு விளையாட வந்த சிறுவர்கள் என்னைப் பார்த்ததும் என்னை இந்த நிலைக்கு ஆளாக்கி விட்டார்கள் என்று கூறிக் கண்ணீர் விட்டது. 


உன்னைக் கடிக்காதே என்று தானே சொன்னேன். நீ உன் பிறவி குணத்தைக் காட்டவேண்டியது தானே? பாம்புக்குப் புரியவில்லை. அது என்ன சுவாமி சொல்கிறீர்கள்? என்று கேட்டது. ஆமாம் உன் பாம்பு குணமான சீறும் குணத்தைக் காட்டியிருந்தால் ஓடியிருப்பார்கள் நீயும் அடிபடாமல் தப்பியிருக்கலாமே என்றுதான் சொன்னேன். 


உண்மைதான் சுவாமி நீங்கள் கடித்துத் துன்புறுத்தாதே என்றுதான் கூறினீர்கள், சீறிப் பயமுறுத்தாதே என்று சொல்லவில்லையே, அந்தப் பதிலை ஏற்றுக் கொண்ட முனிவர் பாம்புக்கு விடை கொடுத்து அனுப்பினார். 


சில நாட்கள் கழித்து அந்தப் பாம்பு காட்டின் எல்லையில் ஒரு பாறை அருகே படுத்திருந்தது. அப்போது சில மாடு மேய்க்கும் சிறுவர்கள் அங்கு வந்தனர். பாம்பு படுத்திருப்பதைப் பார்த்தனர். ஒவெனக் கூவியவாறு ஓடினர். மீண்டும் அருகே வந்தபோது பாம்பு புஸ் என சீறவே தங்களின் மாடுகளை விரட்டிக் கொண்டு அவ்விடம் விட்டு விலகினர். பாம்பு நலமுடன் தன் இருப்பிடம் வந்து சேர்ந்தது. அடுத்த பிறவி நல்ல பிறவியாக அமைய வேண்டுமாயின் இப்பிறவியில் யாருக்கும் தீங்கு செய்யாமல் இருக்கவேண்டும் என்ற கொள்கையைக் கடைபிடித்தது அந்தப் பாம்பு. அதே போல் தனக்கு தீமை ஏற்படுமாயின் தன் குணத்தைக் காட்டித் தப்பிப்பதும் தவறு அல்ல என்பதைப் புரிந்து கொண்டது அந்தப் பாம்பு. 


நீதி :

தன்னிடம் உள்ள வலிமை வைத்து மற்றவர்களை துன்புறுத்தக் கூடாது.

இன்றைய செய்திகள்

21.04. 2023

* தூத்துக்குடியில் 60 அடி தூரம் கரையை தாண்டி வந்த கடல்நீர்: பகல் நேரம் என்பதால் பெரும் சேதம் இல்லை.

* தமிழகத்தில் கலை வடிவங்களை அழியாமல் பாதுகாக்கவும், வளர்க்கவும்  அரசுக் கல்லூரிகளில் பயிலும் 200 மாணவர்களுக்கு கலைப் பயிற்சிகள் ரூ.1.7 கோடியில் நடத்தப்படும் என கலை,பண்பாடு, தொல்லியல் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவிப்பு.

* புதிய ஓய்வூதியத் திட்டத்தில் அரசு ஊழியர்களின் பங்கு மற்றும் அரசின் பங்கான ரூ.61,251.16 கோடி தொகை, எல்ஐசி நிறுவனத்தில் முதலீடு செய்யப்பட்டுள்ளதாக நிதித்துறை கொள்கை விளக்கக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* ஜம்மு காஷ்மீரில் ராணுவ வாகனம் தீப்பிடித்து 5 வீரர்கள் உயிரிழப்பு.

* இந்தியாவின் 90 சதவீத இடங்கள், குறிப்பாக டெல்லியின் அனைத்துப் பகுதிகளும் வெப்ப அலை தாக்கத்தால் பாதிக்கப்படும் அபாயத்தில் உள்ளதாக  ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

* எதிர்காலத்தில் ஒளியின் வேகத்தைவிட மூன்று மடங்கு அதிக வேகத்தில் பயணிக்கும் உளவு ட்ரோன்களை உருவாக்க சீனா திட்டமிட்டுள்ளதாக அமெரிக்கா உளவுத் துறை ஆவணம் தெரிவித்துள்ளது.

* சுதிர்மன் கோப்பை பேட்மிண்டன் போட்டிக்கான இந்திய அணி அறிவிப்பு.

* பார்சிலோனா ஓபன் டென்னிஸ் போட்டியில் அல்காரஸ் 3-வது சுற்றுக்கு முன்னேறி உள்ளார்.

Today's Headlines

* In Thoothukudi sea water passes across the shore for about 60ft: As it was day time there was no major damage occur

* Art, Culture and Archeological Minister Thangam Thennarasu has announced that 200 students studying in government colleges will be given art training at a cost of Rs.1.7 crore to preserve and develop art forms in Tamil Nadu.

 * According to the Finance Department's Policy Brief, Rs 61,251.16 crore of government employees' share in the new pension scheme and the government's share has been invested in LIC.

* Army vehicle caught fire in Jammu and Kashmir, 5 soldiers were died.

 * According to the study, 90 percent of the places in India, especially all parts of Delhi, are at risk of being affected by the heat wave.

 * China plans to develop spy drones that can travel three times the speed of light in  future, according to a US intelligence document.

 * Indian Team was Announced for Suthirman cup Badminton Tournament

 * Algarz has advanced to the 3rd round of the Barcelona Open tennis tournament.
 Prepared by

Covai women ICT_போதிமரம்

No comments:

Post a Comment

Featured News

தமிழ்க்கடல்

Labels

1-5 10 வகுப்பு 10TH ENGLISH 10TH MATHS 10TH SCIENCE 10TH SOCIAL SCIENCE 10TH TAMIL 11வகுப்பு 12 வகுப்பு 6-9 வகுப்புகள் 8TH ENGLISH 8TH MATHS 8TH SCIENCE 8TH SOCIAL SCIENCE 8TH TAMIL 9 வகுப்பு AADHAAR ADMISSION Android Apps Annual Planner ANSWER KEY Audio B.Ed M.Ed BANK BE BEO BOOKS BULLETIN CBSE BOOKS CBSE EXAMS CBSE NEWS CCE CEO செயல்முறைகள் Certificate CM CELL CM LETTER COLLEGE LINKS COMPLETE MATERIALS COMPUTER Contact Numbers COURT ORDER CPS CRC CSAT CSIR CTET Current Affairs D A DEO செயல்முறைகள் DEPARTMENTAL EXAM DUPLICATE E - LEARN ELECTION NEWS EMIS Ennum Ezhuthum EQUIVALENCE EXAMS FEES PAYMENT FONTS Forms G K G.Os GATE GAZETTE GENUINENESS go GPF HALL TICKET Hand Book HI TECH LAB HISTORY GK HOLIDAY ICT IFHRMS IMPORTANT LINKS INCENTIVE INCOME TAX INCREMENT INSPIRE AWARD ITK JEE Kalvi Tv Videos LAB ASSISTANT LESSON PLAN MAGAZINE NAS NEET NET NEWS NHIS NMMS ONLINE CLASS ONLINE LINKS ONLINE TEST OTHER BOOKS PAY ORDER PERMISSION PINDICS POLICE POSTAL PSTM PTA QR CODE VIDEOS R H LIST RAILWAY REGULARISATION ORDER RESULT RMSA RRB RTE RTI LETTERS SAFETY AND SECURITY SCHOLARSHIP SCHOOL CALENDAR School Children Movie SCHOOL DIARY SET SHAALA SIDDHI SLAS SMC SOFTWARE SOFTWER SSC TAMIL MP3 SONGS TET TEXT BOOK TIME TABLE TNEB TNPSC TNSED Tr TRAINING TRANSFER TRB TRB-TET-NET UDISE UPSC VACANCY LIST Vanavil Mandram VAO VIDEO VIDEO STORIES WORK SHEET YEAR BOOKS அகராதி நூல்கள் அக்கு பஞ்சர் அரசிதழ் வெளியீடு அரியது அறிவியியல் ஆணையர் செயல்முறைகள் ஆய்வுகள் ஆன்மீகம் இயக்குநர் செயல்முறைகள் இயற்கைவேளாண்மை இலக்கணம் இலக்கியம் உடல்நலம் உதவித்தொகை உள்ளூர் விடுமுறை ஊதிய உயர்வு எழுத்தறிவுத் திட்டம் ஓய்வூதியம் கட்டுரை கதைகள் கலந்தாய்வு கல்வி உளவியல் கல்விச்செய்திகள் கவிதை கற்றல் விளைவுகள் கனவு ஆசிரியர் காலை உணவு திட்டம் காலை வழிபாடு சட்டம் சிறப்புச் செய்திகள் சிற்றிதழ் தமிழக பட்ஜெட் தமிழ் இலக்கிய வரலாறு தமிழ் நூல்கள் திருக்குறள் திறனாய்தேர்வுகள் தினம் ஒரு திருக்குறள் தேர்வு தொலைபேசி எண்கள் தொழில்நுட்பச் செய்திகள் நம்பிக்கை நான் முதல்வன் நீதிக் கதைகள் நீதிமன்றம் உத்தரவு பணிவரன் முறை பணிவரன் முறை ஆணை பதவி உயர்வு பலகாரம் பள்ளி பார்வை புவிசார் குறியீடு பொதுச் செய்திகள் மத விடுப்பு மருத்துவம் மன்றங்கள் மொழித் தேர்வு யோகா யோகாசனம் ராசி பலன்கள் வரலாற்றில் இன்று வரலாற்றுத் தகவல்கள் வாழ்க்கை வரலாறு வாழ்த்துத் செய்தி வானவில் மன்றம் வாஸ்து சாஸ்திரம் விண்ணப்பிக்க வேலைவாய்ப்புச்செய்திகள் ஜாக்டோ ஜியோ ஜோதிடம்